Movie Review
2.0
16 Vayathinille
Aandavan
Aarulirunthu Arupathuvarai
Aayiram Jenmangal
Aboorva Raagangal
Adutha Varisu
Alavudinum Aruputha Vizhakkum
Anbulla Rajinikanth
Anbuku Naan Adimai
Annaatthe
Annamalai
Arunachalam
Annai Oru Aalayam
Athisaya Piravi
Aval Appaadithaan
Avargal
Baba
Baasha
Bairavi
Bhuvana Oru Kelvikuri
Billa
Chandramukhi
Darbar
Dharmadurai
Dharmautham
Ejamaan
Endhiran
Engeyo Ketta Kural
Garjanai
Gayathiri
Guru Sishyan
Illamai Oonjaladukirathu
Jailer
Jhonny
Kaali
Kaala
Kabali
Kai Kodukum Kai
Kazhugu
Kochadaiyaan
Kodi Parakuthu
Kupathu Raja
Kuselan
Lingaa
Manithan
Mannan
Mappillai
Maveeran
Moondru Mudichu
Moondru Mugam
Mr. Bharath
Mullum Malarum
Murattukalai
Muthu
Naan Sigappu Manithan
Naan Vazha Vaipen
Naan Adimai Illai
Naan Mahaan Alla
Naatukku Oru Nallavan
Nallavanukku Nallavan
Netrikan
Ninaithale Inikum
Oorkavalan
Padaiyappa
Padikathavan
Panakaran
Pandiyan
Payum Puli
Petta
Pokiri Raja
Pollathavan
Priya
Puthu Kavithai
Raanuvaveeran
Raja Chinna Raja
Rajathi Raja
Ram Robert Rahim
Ranga
Siva
Sivappu Sooriyan
Sivaji
Sri Ragavendra
Thaai Veedu
Thalapathy
Thambikku Endha Ooru
Thanga Magan
Thanikaattu Raja
Thappu Thalangal
Thee
Thillu Mullu
Thudikkum Karangal
Unn Kannil Neer Vazhindal
Uzhaipazhi
Valli
Velaikaran
Veera
Viduthalai
Hindi Movies
Blood Stone

  Join Us

Movie Review

Priya (1978)

Priya is a 1978 film, made in Tamil and Kannada, directed by S. P. Muthuraman, starring Sridevi in the titular role along with Rajinikanth, Aznah Hamid, and Ambarish in supporting roles. Priya is a beautiful girl whose boyfriend is Sumant Raja. The story is an adaptation from writer Sujatha's Ganesh - Vasanth novels. The film was successful at the box office.

 

Plot

Priya (Sridevi) is a movie star who is exploited by her producer Janardhan / K. Ashwath (Major Sundarrajan / K. S. Ashwath). Janardhan has such a tight control over Priya's financial and personal affairs that he refuses to let her marry her boyfriend Bharat (Ambarish). Before she flies off to Singapore for a film shoot, Priya seeks the help of Lawyer Ganesh (Rajinikanth) to get rid of Janardhan. How Ganesh helps Priya overcome her problems accounts for the rest of this movie, which includes a side story of Ganesh falling in love with a Malay-Indian girl named Subathra (Aznah Hamid). The original story written by Sujatha was based in London setting with the Scotland Yard playing a central role, but the film adaptation chose Singapore and Malaysia as the backdrop and the police force is left out.

 

Soundtrack

The soundtrack features five songs composed by Ilaiyaraaja being his 50th film, with lyrics by Panju Arunachalam.

The soundtrack of this film is recorded using stereophonic technology for the first time in Tamil cinema. "Akarai Cheemai" song's Pallavi is based on the song "Kites" by Simon Dupree and the Big Sound. The song "Hey Paadal Ondru" is set in Kapi raga. "Darling Darling" song was inspired by Boney M.'s "Sunny (1976)".

 

பிரியா 1978 திரைப்படம்

பிரியா 1978 வெளியான திரைப்படம். இத்திரைப்படம் தமிழ் மற்றும் கன்னட மொழியில் எஸ். பி முத்துராமன் இயக்கத்தில் வெளியிடப்பட்டது. நடிகை ஸ்ரீ தேவிக்கு ஒரு முக்கிய கதா பாத்திரம் ரஜினியுடன் கிடைத்தது. அஸ்ன்னாஹ் மற்றும் அம்பரீஷ் இருவரும் துணை நடிகர்களாக நடித்துள்ளார்கள். பிரியா ஒரு அழகான பெண். அவளுக்கு சுமந்த்  என்ற காதலன் இருந்தான். இக்கதை சுஜாதா கணேஷ்ன் வசந்தம் நாவலிலிருந்து  தத்தெடுக்கபட்டது. இத்திரைப்படம் ஒரு வெற்றிக்கண்ட மற்றும் 175 நாட்கள் ஓடி நிறைவடைந்தது. 

நடிகர்கள் 

கணேஷ் ஆக ரஜினிகாந்த்   

ப்ரியாவாக ஸ்ரீதேவி 

பரத்தாக  அம்பரீஷ்

ஜனார்த்தனாக   மேஜர் சுந்தர் ராஜன்

இயக்குனராக தேங்காய் ஸ்ரீநிவாசன்  

சுபத்ராவாக  அஸ்ன்னாஹ் ஹமீத்

காலிமுத்துவாக கே. நட்ராஜ்

வசந்த்தாக திடீர் கண்ணய்யா 

கதை   

பிரியா என்ற ஒரு நடிகை தன் தயாரிப்பாளரான ஜனார்த்தனன் என்பவரால் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறாள்.  ப்ரியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு அவளது கொடுக்கள் வாங்கல் அவளது சொந்த விஷயம் போன்ற அனைத்தும் ஜனார்த்தனன் கைப்பிடியில் இருந்தது. அதனால் அவன் ப்ரியாவை அவளது காதலனை (பரத்)  திருமணம் செய்துகொள்ள மறுக்கிறான்.

பிரியா ஒரு திரைப்பட படப்பிடிப்பிற்காக சிங்கப்பூர் செல்லும் முன் கணேஷய் (ரஜினிகாந்த்) பார்த்து ஜனார்தனனிடம்மிருந்து தப்பிக்க உதவி கேட்கிறாள். மீதிகதை இதுதான். கணேஷ் எப்படி ப்ரியாவுக்கு தனது பிரச்சனையிலிருந்து வெளியே வர உதவுகிறான். மேலும் அவன் ஒரு மலாய்  இந்தியப் பெண்ணை (அஸ்ன்னாஹ் ஹமீத் ) காதலிக்கிறான்.       

ப்ரியா பற்றி சுஜாதா கூறுகிறார்…..

1975 –ல் நான் லண்டன், ஜெர்மனி இரண்டு தேசங்களுக்குப் போய் இரண்டு மாதம் கழித்துத் திரும்பி வந்ததும் லண்டனில் நடப்பது போல் ஒரு தொடர்கதை எழுதட்டுமா ? என்று எஸ்.ஏ.பியைக் கேட்டபோது அவர் உடனே சம்மதித்தார்.  அந்தக் கதை ‘ப்ரியா’.

ஒரு சினிமா நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் போகிறாள்.  அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட, அவளது கண்டிப்பான கார்டியன், லாயர்  கணேஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார்.

‘‘குமுதம்’ வார இதழில் வெளியான ஒரு பரபரப்பான தொடர். சுவாரஸ்யமான இந்தக் கதையின் பாதியில் கதாநாயகி இறந்துவிடுகிறாள். சற்று அவசரமாக கொன்றுவிட்டேனோ என்று தோன்றியது.   குமுதம் ஆசிரியர் திரு.எஸ்.ஏ. பி. போன் செய்து அவளுக்கு எப்படியாவது மறுஜன்மம் கொடுத்துவிடுங்கள் என்றும், குமுதம் ஆசிரியர் குழுவுடன் ஆலோசித்து அதற்கு ஒரு வழியும் சொன்னார்.

ப்ரியா புத்தகமாக வந்தபோது முதல் பதிப்பில்,  ‘இந்தக் கதையை ஒரு முக்கியமான கட்டத்தில் திசை திருப்பிய ஆசிரியர் எஸ்.ஏ. பி.  அவர்களுக்கு’ என்று சமர்ப்பணம் செய்தேன்.

Nothing succeeds like success என்பார்கள். ஒரு காலத்தில் மகரிஷி, ஜெயகாந்தன், அனுராதாரமணன், சிவசங்கரி, உமாசந்திரன் போன்றவர்களின் பத்திரிகைக் கதிகள் சினிமாவில் வெற்றி கண்டன.  புவனா ஒரு கேள்விக்குறி, சில நேரங்களில் சில மனிதர்கள், சிறை, 47 நாட்கள், முள்ளும் மலரும் போன்ற உதாரணங்களைச் சொல்லலாம்.  இப்போது இந்த வழக்கம் அறவே ஒழிந்துபோய், கதை என்கிற வஸ்து படம் பிடிக்கும்போது தான் தேவைப்பட்டால் பண்ணப்படுகிறது.

பத்திரிகைகளிலோ நாவலாகவோ வந்ததை அப்படியே எடுக்கிறார்களா என்பது வேறு விஷயம். ஹெமிங்வேயிடம் Farewell to Arms, For Whom the Bell Tolls போன்ற கதைகளின் திரைவடிவத்தைப் பற்றி கேட்டபோது ‘Take the money and run’ என்றாராம். ‘ப்ரியா’ ஓர் உத்தம உதாரணம்.

பஞ்சு அருணாசலம் அது தொடர்கதையாக வந்தபோதே அதற்கு கர்ச்சீப் போட்டு வைத்திருந்தார். கன்னடம், தமிழ் இரண்டு மொழிகளிலும் எடுக்க பூஜை போட்டார்கள். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, அம்பரிஷ் நடிக்க இளையராஜாவின் இசையில் சில பாடல்கள் இன்றும் ஒலிக்கின்றன.

‘லண்டனில் எல்லாம் போய் எடுக்க முடியாது. மிஞ்சிப்போனால் சிங்கப்பூரில் எடுக்கிறோம். அங்கே நீர்ச்சறுக்கல், டால்ஃபின் மீன்கள் என்று அற்புதமான காட்சிகள் வைக்கலாம்’ என்றார்.
லண்டன், சிங்கப்பூராக மாற்றப்பட்டு வெற்றிப்படமாக ஓடியது.

இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது என்று கேட்பதை முதலிலேயே நிறுத்திவிட்டேன். சினிமா என்பது மற்றொரு பிராணி என்பதை என் குறுகிய கால சினிமா அனுபவமே உணர்த்தியிருந்தது.

கதாநாயகி பாதியில் இறந்துபோகக் கூடாது என்ற அதே விதி இதிலும் காரணம் காட்டப்பட்டது. ரஜினிகாந்த் இதில் கணேஷாக வந்து டூயட் எல்லாம் பாடினார். சிங்கப்பூரில் ராஜகுமாரன் வேஷத்தில் வந்தார். பல மாடிக் கட்டிடங்கள் முன் ‘ஓ ப்ரியா’ என்று பாட்டுப் பாடினார். பாஸ்போர்ட் கிடைக்காததால் வசந்தாக நடித்த நோஞ்சான் நடிகர் உடன் வரவில்லை.

அதன் துவக்க விழாவில், முதல் காட்சி…  சென்டிமெண்டாக ஒரு பூகோள உருண்டையைச் சுழற்றி  ‘உலகத்தை ஜெயிச்சுக் காட்டறேன் பாரு’  என்று திரையில் வராத வசனத்தைத் தனியாக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.

‘ப்ரியா’ படம் வெற்றிகரமாக 110 நாள் ஓடினதுக்கு எனக்கு ட்ராஃபி தந்தார்கள். இப்போது கூட இதன் பின் கதையைச் சரியாக அறியாதவர்கள், ‘என்னா ஸ்டோரி சார்; என்னா டைலாக் சார்’ என்று சிலாகிக்கும்போது எங்கோ நிறுத்தாமல் உறுத்துகிறது.

  

 

பிரியா - ஆனந்த விகடன் விமர்சனம்

ஜாய்ஃபுல் சிங்கப்பூரையும், கலர்ஃபுல் மலேசியாவையும் ப்ரியாவுக்காக சுருட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள் எஸ்.பி.டி. பிலிம் சார். கவர்சிகரமான டைட்டில்களுக்காக பிரசாத் புரொடக்ஷனுக்கு முதுகில் ஒரு தட்டு தட்டலாம் !

ஜூலியஸ் சீசர் நாடகத்தில் ரஜினியின் நடை, உடை, பாவனை உறுமல் ஆனாலும் சிவாஜியை நினைவுபடுத்தும் படியாக செய்திருக்க வேண்டாம் !

அடிக்கடி 'ரைட்' என்ற மேனரிசம். அதை ரஜினி வெளூத்துக் கட்டுகிறார். ஆனால் தியேட்டரில் 'ஹோல் டான்' என்று கத்துமளவுக்கு ஓவர் டோஸ் !

கண்ணுக்கு குளிர்சியான சிங்கப்பூர் காட்சிகள். கிளிகள் சர்க்கஸ் செய்யும் அழகு, துள்ளி விளையாடும் நீர் நாய்கள் வந்து விளையாடுவது, இவை எல்லாமே குழந்தைகளோடு பெரியவர்களூம் கண்களை அகல விரித்துப் பார்க்கும் படியான காட்சிகள். இதற்கே நாம் கொடுக்கும் காசு செரித்துப் போகிறது.

ரீ ரீகாட்டிங்கில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார் இளையராஜா. ஆனால் பாடல்களில் அவருடைய வழக்கமான 'பெப்' இல்லையே..! டார்லிங்...டார்லிங் தவிர.

ஆங்கிலப் படங்களுக்கு இணையாக ஒரு கார் சேஸை இணைக்க வேண்டிய (ஒட்டு வேலை பிரமாதம்!) இடத்தில் இணைத்திருக்கிறார்கள். ஹாட் லி சேஸ் காவல் மாதிரி விறு விறுப்பு!

தே.சீனிவாசனின் தயாரிப்பாளர் - டைரக்டர் காமெடி நயமான ஸடயைர். பக்கோட காதர் கூட ரொம்ப பிஸி என்னும் போது தியேட்டரில் தான் எத்தனை கைதட்டல்! ( கன்னடத்து தங்கவேலு) சிவராமுடன் சேர்ந்து நல்ல கலகலப்பு. அந்த உடம்பு பிடிப்பு காட்சி உச்சம்!

ரஜினியைக் கொலை செய்ய வில்லன் கூட்டம் கொக்கின் தலையில் வெண்ணையைத் தடவுகிறது. 'சீஸர்' நாடகத்தில் நிஜக்கத்தியை வைத்து விடுவதன் முலம். ( அந்த காலத்து இல்லற ஜோதியில் 'சாக்ரடீஸ்' நாடகத்தில் சிவாஜியைக் கொல்ல உண்மையான விஷத்தை வைத்து விடுவார்கள்.) இதில் ரஜினி தப்பிய மர்மம்? அவர் என்ன வக்கீலா அல்லது மந்திரவாதியா?

இறந்ததாகச் சொல்லி காட்டப் பட்ட ப்ரியா, மெழுகு பொம்மை என்கிறார் இன்ஸ்பெக்டர் கடைசியில் இந்த 'ப்ரியா' கொலை மர்மம், மூலக் கதையில் அழகாகப் பின்னப் பட்டிருந்தது. அதைப் படத்தில் கொலை செய்த்து விட்டார்கள்.

சிங்கப்பூர் 97% கதை 3% - கலவை விகிதம் சரியாக இல்லையே!

ஒரு ரகசியம்: குமுதத்தில் சுஜாதா 'ப்ரியா' என்ற தலைப்பில் தொடர் கதை ஒன்று எழுதியிருந்தார். அதிலிருந்து 'நைஸாக' இரண்டொரு காட்சிகளை இந்தப் படத்தில் 'காப்பி' அடித்து விட்டார்களோ என்ற சந்தேகம் லேசாக உண்டாகிறது - நம்கேன் வம்பு!

Tailpiece: இந்த படத்தை அண்ணா தியேட்டரில் பார்த்தோம். படம் முடிந்து வெளியே வர தியேட்டரில் ஒரே வழிதான். அதுவும் எங்கோ பாதாளத்துக்குப் போய், மாடிப் படி ஏறி, எட்டுப் படி இறங்கி.... மவுண்ட் ரோடிலிருந்து மந்தை வெளிப்பாக்கத்துக்குப் போகிறோமோ என்ற பிரமை! ஆபத்து என்றால் தப்பி ஓடக் கூட வழியில்லையே!!

முன்பாதி 28/50 + பின்பாதி 24/50 = மொத்தம் 52/100
-விகடன் விமர்சனக்குழு



PRIYA MOVIE KALKI MAGAZINE REVIEW

(07.01.1979 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து . .  .)





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information