Gayathiri (1977)
1977 ம் ஆண்டு வெளிவந்த படம் காயத்ரி ரஜினிகாந்த், ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, ராஜசுலோச்சனா நடித்த படம். இது சுஜாதா எழுதிய ஒரு குறுநாவலை மையமாக கொண்டு தயாரான படம் ஒரு குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டு திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்களை குறிவைத்து ஏமாற்றுகிற கதை.
ஸ்ரீதேவிக்கு மணமகன் தேவை என்ற அவரது அப்பா விளம்பரம் செய்வார். அதை பார்த்து இந்த ஏமாற்றுக் குடும்பம் தன் குடும்பதில் ஒருவரான ரஜினிக்கு ஸ்ரீதேவியை திருமணம் செய்து வைக்கும் திருமணத்துக்கு பிறகு மனைவியை கொடுமைப்படுத்தும் ரஜினி அவரை தப்பான படங்களில் நடிக்க சொல்வார், ஆபாசமாக படம் எடுக்க முயற்சிப்பார். அதற்கு சம்மதிக்காத அவரை அடித்து துன்புறுத்துவார். ஸ்ரீதேவி தன் கஷ்டத்தை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி பழைய பேப்பர் மற்றும் புத்தகம் வாங்கும் கடையின் மூலமாக அதை எடைக்கு போட்டு அந்த புத்தகத்தை ஜெய்சங்கர் படித்துவிட்டு ஸ்ரீதேவிக்கு உதவுவார்.
சுஜாதாவின் கதையில் ஒருவன் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களுடன் தனிமையில் இருக்கும் காட்சியை படம் எடுத்து விற்பான் இந்தக் கதையைத்தான் அப்படியே எடுக்கிறார் என்று தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் பஞ்சு அருணாசலத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது பஞ்சு அருணாச்சலம் நீலப் படம் எடுக்கிறார் என்று பத்திரிக்கைகள் எழுதின தணிக்கை குழுவிற்கே புகார் கடிதங்கள் குவிந்தன . ஆனால் படம் தணிக்கைக்கு சென்றபோது " மக்கள் திருமண மோசடி கும்பல்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்கிற படம் " என்று கூறி யூ சான்றிதழ் கொடுத்தது படமும் வெளிவந்தது.
இளையராஜாவின் இசையில் காலை பனியில் ஆடும் மலர்கள் - ' வாழ்வே மாயமா பெருங்கனவா கடும்புயலா போன்ற இனிமையான பாடல்கள் படத்தில் இடம்பெற்றது.
|