|
Kazhugu
திருமணத்துக்குப்பின்
வெளிவந்த முதல் படம் "கழுகு'' (6-3-1981). பஞ்சு
அருணாசலத்தின் பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் தயாரித்த படம்.
வசனத்தையும், பாடல்களையும் பஞ்சு அருணாசலம் எழுத, இளையராஜா
இசை அமைத்தார். டைரக்ஷன்: எஸ்.பி.முத்துராமன்.
ஒரு போலிச்சாமியாரின் அந்தரங்க ரகசியங்களை கண்டுபிடித்து,
அதை அம்பலப்படுத்தும் பத்திரிகை நிருபர் ஒருவரைப்
பற்றியதுதான் கதை. நிருபராக ரஜினி நடித்தார்.
இந்தப் படத்தில், கதாபாத்திரங்களுடன் ஒரு பஸ் முக்கிய இடம்
பெற்றிருந்தது. இதற்காக ஒரு பஸ்சை வாங்கி, அதன் சீட்களை
நீக்கிவிட்டு, ஒரு வீடு மாதிரி மாற்றி அமைத்தார்கள். சமையல்
அறை, பெட்ரூம், பாத்ரூம் எல்லாம் உள்ளேயே அமைக்கப்பட்டன.
சுருக்கமாகச் சொன்னால், "நடமாடும் வீடு'' மாதிரி இருந்தது
இந்த பஸ்!
இந்தப்படம் நடுத்தரமாக ஓடியது. ரஜினி படங்களில் "நடுத்தரம்''
என்றால், லாபம் குறையும். அவ்வளவுதான்!
|