Movie Review
2.0
16 Vayathinille
Aandavan
Aarulirunthu Arupathuvarai
Aayiram Jenmangal
Aboorva Raagangal
Adutha Varisu
Alavudinum Aruputha Vizhakkum
Anbulla Rajinikanth
Anbuku Naan Adimai
Annaatthe
Annamalai
Arunachalam
Annai Oru Aalayam
Athisaya Piravi
Aval Appaadithaan
Avargal
Baba
Baasha
Bairavi
Bhuvana Oru Kelvikuri
Billa
Chandramukhi
Darbar
Dharmadurai
Dharmautham
Ejamaan
Endhiran
Engeyo Ketta Kural
Garjanai
Gayathiri
Guru Sishyan
Illamai Oonjaladukirathu
Jailer
Jhonny
Kaali
Kaala
Kabali
Kai Kodukum Kai
Kazhugu
Kochadaiyaan
Kodi Parakuthu
Kupathu Raja
Kuselan
Lingaa
Manithan
Mannan
Mappillai
Maveeran
Moondru Mudichu
Moondru Mugam
Mr. Bharath
Mullum Malarum
Murattukalai
Muthu
Naan Sigappu Manithan
Naan Vazha Vaipen
Naan Adimai Illai
Naan Mahaan Alla
Naatukku Oru Nallavan
Nallavanukku Nallavan
Netrikan
Ninaithale Inikum
Oorkavalan
Padaiyappa
Padikathavan
Panakaran
Pandiyan
Payum Puli
Petta
Pokiri Raja
Pollathavan
Priya
Puthu Kavithai
Raanuvaveeran
Raja Chinna Raja
Rajathi Raja
Ram Robert Rahim
Ranga
Siva
Sivappu Sooriyan
Sivaji
Sri Ragavendra
Thaai Veedu
Thalapathy
Thambikku Endha Ooru
Thanga Magan
Thanikaattu Raja
Thappu Thalangal
Thee
Thillu Mullu
Thudikkum Karangal
Unn Kannil Neer Vazhindal
Uzhaipazhi
Valli
Velaikaran
Veera
Viduthalai
Hindi Movies
Blood Stone

  Join Us

Movie Review

Darbar (2020)

தர்பார் படம் வெளிவந்த முதல் நாளே முதல் பாதி சூப்பர். இரண்டாம் பாதி சரியில்லை என்ற ரீதியில் விமர்சனத்தை பரப்பி விட்டார்கள். ஆனால் உண்மை நிலவரமோ வேறு. முதல் பாதி நன்றாக இருந்தது. முதல் பாதியை விட இரண்டாம் பாதி சற்று குறைவே தவிர அதுவும் நன்றாகத்தான் இருந்தது.

தற்போது உள்ள சூழ்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பற்றிய பேச்சுக்களும், அரசியல் நடவடிக்கைகள் இல்லாமல் இருந்திருந்தால் இந்தப் படத்தை ஆகா ஓகோ என்று புகழ்ந்து இருப்பார்கள். ரஜினியின் அரசியல் வருகை ஒரு சில ரசிகர்களுக்கே விருப்பம் இல்லாத நிலையில் அவர்களும் தற்பொழுது சில பல குறைகள் அறிவிக்கிறார்கள்.

மேலும் பேட்ட படத்தை விட ரஜினிகாந்த் தர்பார் படத்தில் மிகவும் அழகாக இருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு அற்புதம். பொதுவாக சண்டைக்காட்சிகள், பாடல்கள் இவற்றை வைத்து ஒரு படத்தின் விமர்சனத்தை கூற முடியாது. அதிலும் ரஜினி 10 பேரை அடிக்கிறார் 20 பேரை அடிக்கிறார் என்ற கணக்கெல்லாம் கிடையாது. அப்படி பார்த்தால் விஜய் அஜித் என எல்லா நடிகர்களும் அப்படிதான் சண்டை போடுவார்கள். அந்த லாஜிக் எல்லாம் ரஜினி படத்திற்கு முன்பு இருந்த காலத்தில் இருந்தே கிடையாது. அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார். அதுதான் அவருடைய பிளஸ்.

யோகி பாபுவின் காமெடியை தர்பார் படத்தில்தான் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள். காமெடிக்கு பஞ்சமே இல்லை. ரஜினி, யோகிபாபு இருவரும் சேர்ந்து கலக்கியிருக்கிறார்கள். நயன்தாரா அழகோ அழகு. அவருக்கான இடம் இந்த படத்தில் போதுமான அளவு இருக்கிறது அதுவே போதும். இரண்டாம் பாதியில் உள்ள பாடல் மனதில் ஒட்டவில்லை. ஆனால் அனிருத் பின்னணி இசை நன்றாக இருந்தது.

சுனில் ஷெட்டி வில்லன் கதாபாத்திரம் ஓவர் பில்ட் அப் கொடுத்து விட்டார்கள் ஆனால் அவருக்கான விஷயம் படத்தின் காட்சிகளில் இல்லை. இரண்டாம் பாதியில் உள்ள வில்லன் மற்றும் இரண்டாம் பாதியில் உள்ள பாடல், இந்த இரண்டைத் தவிர படத்தில் மிகப்பெரிய குறைகள் எதுவும் இல்லை.

தற்பொழுது உள்ள சினிமாவில் படங்களை போர் அடிக்காமல் இழுக்காமல் எடுப்பது மிகப்பெரிய விஷயம். ஒரு படத்தை பார்க்கும் பொழுது போரடிக்காமல் எடுத்து சென்றாலே படம் ஹிட்டுதான். அந்த வகையில் தர்பார் படம் நன்றாக இருந்தது. இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் காட்சிகளில் ரஜினியும் அவரது மகளும் உண்மையிலேயே நடிப்பில் தூள் கிளப்பி விட்டனர். நிறைய இடங்களில் முருகதாஸ் டச் இருக்கிறது. வழக்கமாக ரஜினி படங்களில் எப்பவும் ஆபாசம் இருக்காது தர்பாரிலும் ஆபாச காட்சிகள் இல்லை. ரஜினி ரசிகர்கள் மட்டும் அல்ல அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம். தர்பார் வசூல் அள்ளும். குடும்பத்தோடு பார்க்கும்போது சினிமாபேட்டை சொல்வது புரியும்.

முதல் பாதி, இரண்டாம் பாதி, ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்ற கணக்கெல்லாம் விட்டு ஒட்டுமொத்தமாக திரைப்படத்தைப் பார்த்தால் படம் தர்பார் சூப்பர்.

 

Darbar Review in English

Superstar Rajinikanth's Darbar is a cop thriller directed by AR Murugadoss and produced by Subaskaran under the banner Lyca Productions. Nayanthara plays the female lead and Sunil Shetty is the antagonist, while Yogi Babu and Nivetha Thomas play crucial supporting roles. It has music by Anirudh Ravichander and cinematography by Santosh Sivan.

It's been more than 25 years since Rajinikanth donned the Khaki and the first question that arises in our minds is - "Will Thalaivar be able to pull off the role convincingly?" Well, here's a spoiler. Rajini as Aaditya Arunasalam proves that he's still got that unexplainable power of creating magic on the celluloid. He's a vintage bullet bike that has its own rustic charm.

The story starts with Aaditya Arunasalam going on an encounter spree, killing a lot of gangsters in Mumbai. There is a personal motive behind the killings and how he manages to take revenge forms the story. He is not your average cop who does only good deeds. His character is filled with a grey shade which offers strong backing to his actions in the second half. Among the supporting roles, Yogi Babu runs riot with his comedic timing and body language. Nivetha Thomas' acting as Aaditya's daughter holds the film intact during the emotional scenes and plays the perfect foil for our superstar.

The film does justice to the superstar genre, and there are plenty of whistle-worthy moments. These moments are amplified by Anirudh's grand background score. At most places, the BGM is a variant of the Annamalai BGM composed by Deva. However, usage of silence at a few places could have made it a better experience for the audience.

Santosh Sivan, who had last worked with Rajini in Mani Ratnam's Thalapathi has recreated the same magic. Consider Rajini's introduction scene for instance, where Santosh Sivan brilliantly toys with the lighting to give us frames filled with aesthetics and mass in the right proportion. Like most Murugadoss films, the technical work is solid. The film doesn't tire you, but a few romantic scenes between Rajini and Nayanthara could have been trimmed to give us a more crisp product.

The stunt sequences in the film stand out, especially the opening sequence and the scene at the Railway Station. The stunts are choreographed by Ram-Lakshman and Peter Hein, and their styles are seen distinctly in various fight scenes. The former's style is more glossy and over the top, while the latter's style has a tinge of realism to it. This could work in a positive or a negative way depending upon the taste of the viewer. Overall, Darbar does manage to do justice to both the police thriller genre and the superstar genre. It's indeed a neatly written film with excusable minor flaws here and there. 

 

தர்பார் - ஆனந்த விகடன் விமர்சனம்

 

 





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information