எம் ஜி ஆர் உருவாக்கி வைத்திருந்த மாஸ் ஹீரோ பார்முலாவை மாற்றியமைத்த ரஜினி பின்னாளில் ரஜினி என்பதையே ஒரு ஜோனர் ஆக்கிவிட்டார். தம்பிக்கு எந்த ஊர் படம் மூலம் மாஸ் ஹீரோ பார்மேட்டில் காமெடியையும் கொண்டு வந்தார். அன்றைய விஜயகாந்த், சத்யராஜ் முதல் இன்றைய டாப் ஸ்டார்களனா அஜித், விஜய் வரை ரஜினி உருவாக்கி வைத்த ஜோனர் திரைக்கதைகளாகவே அமைக்கபடுகிறது. ரஜினி உருவாக்கி வைத்த அந்த ஜோனர் இன்று வரை மாற்றியமைக்கப்படவில்லை. ஒரு புதிய அஸ்த்திவாரம் போட்டு அதன் மேல் ஒரு கட்டிடம் கட்டி தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய பாலமும் போட்டு தொடர்ந்து மாபெரும் வெற்றி பெற்று வருகிறார் ரஜினி. அவர் போட்டு வைத்த பாலத்தின் மீது தான் இன்று வரை இப்போதைய ஹீரோக்கள் பயணிக்கின்றனர்.
வீரம், ஜில்லா படங்கள் வெளியான போது இரண்டுமே ரஜினி ஜோனரில் தான் வந்தது என தி ஹிந்து நாளிதழில் அப்போதே வெளியானது. மாஸ் ஹீரோ பார்முலா ரஜினி என்கிற ஜோனர் மட்டுமல்ல அவரின் ட்ரேட் மார்க் ஸ்டைல்களும் இன்று வரை மற்ற நடிகர்களால் பின்பற்றபடுகிறது. ரஜினி போட்டு கொடுத்த பாதை அது அதன் பிறகு எந்த ஒரு நடிகரும் பெரிதாக எந்த ஒரு புது விஷயத்தையும் தமிழில் இன்று வரையும் கொண்டுவரவில்லை. ரஜினியின் பார்முலாவை மாற்றவும் இல்லை. ரஜினியின் அண்ணாமலையை முன்னுதாரனமாக கொண்டு சினிமாவில் நுழைந்த விஜய், மாப்பிள்ளை, சிவாஜி படங்களில் ரஜினி செய்த ஸ்விங்கமை வாயில் போடும் ஸ்டைலை அடிக்கடி பின்பற்றிவருகிறார். பாபா படத்தில் பந்தை சுழற்றும் ஸ்டைலையும் பிகில் படத்தில் பின்பற்றி இருந்தார். நல்லவனுக்கு நல்லவனில் கையை தூக்கி ஊதுவதில் சர்க்கார் படத்தில் பின்பற்றினார். ரஜினியின் ரெபரன்ஸ் அதிகமாக வைக்கப்பட்ட படங்கள் விஜய் படங்கள் தான். அஜித் வான்மதியில் ரஜினி ரசிகராக ஒரு மாஸ் காட்சி வைத்திருந்தார். ரஜினியின் பில்லாவை ரீமேக் செய்து அதில் மாபெரும் வெற்றியும் பெற்றார்.
ரஜினியின் கண்ணாடி சுழற்றி மாட்டும் ஸ்டைல் இன்று வரை பெரும்பாலான மாஸ் ஹீரோ படங்களில் பின்பற்றி வருகிறது. தமிழில் அதிகமாக விரும்பி வைக்கப்படும் டைட்டில்கள் ரஜினியுடையதுதான். 25 சதவித டைட்டில்கள் திரும்பவும் வைக்கப்பட்டுவிட்டன. அதன் பிறகு அவரின் பாடல்களில் வரும் வரிகளை டைட்டில்களாக மாற்றினார்கள். அவ்வளவு ஏன் அவர் பேசிய பன்ச் வசனங்களையும் டைட்டிலாக வைத்திருக்கிறார்கள்.
ஒரு கதாநாயகனின் பேருக்கு ஒரு தனி டைட்டில் கார்டையும் அதற்கு ஒரு இசையையும் இந்தியாவிலேயே முதன் முதலாக அண்ணாமலை படத்தில் உருவாக்கினார் ரஜினி. பட டைட்டிலை தாண்டி ஹீரோ பெயருக்கென்று ஒரு தனி ஸ்டைலை கொண்டு வந்தார் ரஜினி. இடைவேளைக்கு முன் ஒரு மாஸ் சீனை பாஷா படத்தில் தொடங்கி வைத்தார் ரஜினி. இன்று வரை அதுதான் தொடர்கிறது, ப்ரி இன்ட்ரெவெல் என்ற ஒரு வார்த்தை அதற்க்கு பிறகு தான் உருவாகியது. ஒரு தத்துவ என்ட்ரி பாடல் மூலம் ஒரு மாஸ் ஹீரோ என்ட்ரி ஆவதை மாவீரன், வேலைக்காரன், ஊர்க்காவலன், மனிதன் என தொடர்ச்சியாக நான்கு படங்களில் வைத்து அதிலும் ஒரு ட்ரென்டை கொண்டு வந்தார் ரஜினி. பின் அதை அண்ணாமலை படம் மூலம் அடுத்த லெவெலுக்கு எடுத்து சென்றார். அதுதான் இன்று வரை அனைத்து மாஸ் ஹீரோக்களாலும் பின்பற்றபடுகிறது.
தமிழ் சினிமாவில் பன்ச் வசனங்கள் என்பதை ஒரு மாஸ் நடிகருக்கான ஒரு தகுதியாக மாற்றியது ரஜினிதான். எம் ஜி ஆர் தத்துவங்கள் சொல்வார் ஆனால் ரஜினி போகிற போக்கில் சொல்லி போனதெல்லாம் பன்ச் வசனங்களாக்கின. அதே போல் ஹீரோ ஸ்லோ மோஷனில் நடந்து வர அதன் பின் ஒரு நான்கைந்து பேர் தொடர ஒரு தீம் மியூசிக்குடன் ஒரு மாஸ் காட்சி அமைக்கபடுவதை அண்ணாமலை படம் மூலம் தொடங்கி வைத்தவர் ரஜினிதான். தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கென சிறப்பு காட்சி தொடங்கி வைத்தவர் ரஜினிதான். பழனியில் ரஜினி படம் திரையிடும் நாளன்று படபெட்டியை பழனி மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து பூஜை செய்து யானை மேல் ஊர்வலமாக ஏற்றி தியேட்டர்க்கு கொண்டு வருவார்கள். இப்படி ஒரு வரவேற்பு ரஜினிக்கு முன்னும் பின்னும் யாருக்கும் கிடைக்கவில்லை. சிறப்பு காட்சிகளிலும் அதிகாலை காட்சியை ரஜினி தான் தொடங்கி வைத்தார். 1980 களிலே அதிகாலை சிறப்பு காட்சி ரஜினி படத்துக்கு போடப்பட்டுவிட்டன. சூப்பர் ஸ்டாரின் சிவாஜி பட அதிகாலை காட்சிகள் என் டி டி வி, சி என் என், ஐ பி என், டைம்ஸ் நொவ் போன்ற சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது என்பது இன்றைய விடலை சிறுவர்களுக்கு தெரியுமா? அதிகாலை ஒரு படத்தை திரையிட்டால் அது மிகபெரும் வருமானம் ஈட்டும் என்று இந்திய தயாரிப்பாளர்களுக்கு தெரிந்ததே ரஜினி படம் மூலமாகதான். எப் டி எப் எஸ் என்ற வார்த்தையை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியவரே ரஜினிதான். அப்படி பொது மக்களுக்கு தொல்லையின்றி தனது ரசிகர்கள் முதல் காட்சி பார்ப்பதற்கும் அதன் மூலம் ரசிகர் மன்றத்துக்கு நிதி திரட்டி கொள்வதற்கும் முதன் முதல் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என நல்ல விஷயத்துக்காக கொண்டு வந்ததை இன்றைய இளவட்ட நடிகர்களும் தனது ரசிகர்களும் பொறுப்பற்ற வகையில் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தனிக்கதை.
ஒரு நடிகரின் பிறந்த நாளுக்காக அந்த நாள் முழுவதும் தொலைகாட்சியில் அவர் நடித்த படங்களை மட்டுமே ஒளிபரப்பியது முதன் முதலாக ரஜினிக்குதான். ராஜ் டிவி ஒரு படி மேலே போய் டிசம்பர் மாதம் முழுக்க ரஜினி படங்களை ஒளிபரப்பியது. தமிழ் நாட்டில் 12 12 என்கிற தேதி தீபாவளிக்கும் பொங்கலுக்கும் இடையே ஒரு பண்டிகையாகவே பார்க்கப்பட்டது. காலண்டர்களில் ரஜினியின் படங்கள் இடம்பெற்றது. ரஜினியின் பிறந்த நாளுக்காகவே சிவாஜி படம் 3டி யில் வெளியிடப்பட்டது. இப்படி ரஜினியின் ஒவ்வொரு சாதனைகளையும் பட்டியலிட்டு கொண்டே போகலாம்.
- மனோகரன்
|