வீட்டு பூஜையறையினுள் ஆரம்பித்து.... ஏதேனும் வேலைக்கு நடுவே 'சட்'டென நினைவிற்கு வந்து 'விறைப்புடன்', முனுமுனுப்புடன் கன்னத்தில் போட்டுக் கொண்டு, கோயில் சென்று அர்ச்சனை செய்து விட்டு எந்த செய்தியை, யாரை நம்புவது எனப் புரியாமல் 'இன்று இட்லி, வடை சாப்பிட்டார் என சொன்ன டாக்டரையும் நம்பி.... ஹேய், மயக்கம் போட்டு விழுந்துட்டாராம்ல... ரொம்பவே கஷ்டமாம்... என் ப்ரெண்டோட சித்திப் பொண்ணோட பெரியம்மாவோட பேத்தியோட மூத்த பாட்டி ராமசந்திராலதான் ஸ்டாஃப் நர்ஸா வேலைப் பார்க்கறாங்களாம்... அவங்க வேலைப் பார்க்கற ஃப்ளோர்லதான் அட்மிட் ஆயிருக்காராம் என சொன்னவர்களை நம்பாமல் இருந்தபோதும்... ஒரு வேளை உண்மையாக இருந்து தொலைக்குமோ என்று பயந்து இருந்த நாட்கள்.
இப்போதும் நினைவில் உள்ளது... இன்னிக்கு நைட்டு சிங்கப்பூருக்கு கொண்டு போறாங்களாம்ல என சொன்னவனிடம்... லூஸூ, கூட்டிட்டுப் போறாங்கனு சொல்லுடா வெண்ணைனு எகிறிவிட்டு தங்கமணியுடன் ஷாப்பிங் முடித்து விட்டு திரும்பி வருவதற்க்காக காரை ஸ்டார்ட் செய்யும் முன் ஃபோனில் அந்த "ஆடியோ" டவுன்லோடியிருந்தது.
"ஹ..ல்ல்லோ, நான் ரஜினிகாந்த் பேசறேன்" என்ற குரலைக் கேட்டவுடன் என்னடா இது ரஜினி பேசறேன்னுட்டு யார் குரலோ கேட்குது எனக் குழம்பி 'சட்'டென உண்மை புரிந்து ஸ்டீயரிங்கை பிடித்தபடி குலுங்கி அழத் தொடங்கியிருந்தேன். மனைவி எனது இந்த நிலையைக் கண்டு என்ன செய்வது எனப்புரியாமல் உறைந்து போய் உட்கார்ந்திருந்தாள். [6 வருடங்களுக்குப் பிறகு 2016 அக்டோபரில்... மதுரை அப்பல்லோவில் அது போன்று உணர்ந்தேன் ]
வீட்டிற்கு வந்த பின்பு தனியாக உட்கார்ந்து கொண்டு அந்த ஆடியோவை 4-5 தடவை ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு கேட்டேன்.
திரையில் நாடி நரம்பெல்லாம் துடிக்க வைத்திருந்த ரஜினியின் குரலை Youtubeல் ரிப்பீட் modeல் சலனமே இல்லாது பார்த்துக் கொண்டிருந்தேன்.
ரஜினி அரசியலுக்கு வரார்/ வரலை , இப்டீயே சொல்லிட்டு இருக்கப் போறார், தமிழ் மக்களுக்கு என்ன செஞ்சார்/ செய்வார் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்கறேன். ரஜினி & ரசிகனுக்கு இடையில் இருக்கும் இந்த உறவை இது போன்ற வெட்டிப் பேச்சுகளும், மீம்ஸ்களும் மாற்றாது. அலட்டிக் கொள்ளாமல் நகர்ந்து சென்றுவிடுங்கள்.
- விஜய் (UK)
|