சென்னை: சினிமா தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி பொது மக்களுக்கும் நிவாரண உதவிகளை ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
களத்தில் இறங்கிய ரஜினி ரசிகர்கள் | Rajinikanth Fans
முன்னதாக கொரோனா நிவாரண நிதியாக நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய் FEFSI தொழிலாளர்களுக்கு வழங்கி இருந்தார்.
மாநிலம் மற்றும் மத்திய அரசு நிவாரண நிதிக்கு எந்த தொகையும் வழங்கவில்லை என்ற பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், நேரடியாக மக்களுக்கே ரஜினி ரசிகர்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
ரஜினி படை
#CoronaReliefByRAJINIsoldiers என்ற ஹாஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் வேற லெவலில் டிரெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் நாட்டின் பல மாவட்டங்களில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்ற நிர்வாகிகள் வீடு வீடாக சென்றும், சாலை ஓரங்களில் இருக்கும் மக்களுக்கும், அத்தியாவசிய பொருட்களை வழங்கி வரும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
தனி ராஜங்கம்
திருவள்ளூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பூண்டி ஒன்றியம் சிறுவானுர் ஊராட்சியில் உள்ள 800 குடும்பங்களுக்கு 10கிலோ அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனி ராஜங்கம் நடத்தி மக்கள் நலனில் அக்கறை கொள்கிறார் என அவரது ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
எப்போதுமே
கஜா புயலின் போதும், பல்வேறு பேரிடர் காலங்களின் போதும், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வரும் இந்த நேரத்திலும், மக்களுக்காகவும், தனது ரசிகர்களுக்காகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நடிகர் ரஜினிகாந்த், ஒரு உன்னத தலைவன் செய்வதை போல செய்து வருகிறார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஓயாத உழைப்பு
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தமிழகமெங்கும் இந்த ஏப்ரல் மாதத்தில் எண்ணற்ற உதவிகளை செய்துள்ளனர் என்றும், தலைவர் ரஜினியின் மேற்பார்வை மற்றும் உத்தரவின் பேரில் இத்தனை சேவைகளும் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்களை துடைத்து வருகிறது என்றும் பதிவிட்டு வருகின்றனர். சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் ஏழைகளுக்கு ஓயாது உழைத்து அவர்களின் பசியை போக்கி வருகிறார்களாம்.
முக்கியமான கடமை
சமூக சேவை செய்வது வேலை அல்ல அந்த நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை ரஜினி ரசிகர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். ரஜினி எதிர்பார்த்த புரட்சி மற்றும் எழுச்சியான இளைஞர்கள் படை இப்படி இறங்கி செய்து வரும் சேவை, நாளைய தமிழகத்தின் வளர்ச்சியையும் உண்டாக்கும் எனவும் அரசியல் கருத்துக்களையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Courtesy : https://tamil.filmibeat.com/news/coronareliefbyrajinisoldiers-trending-in-twitter/articlecontent-pf136222-070314.html
Click the image to see full size resolution
|