முதல்வன் படத்தின் தொடக்க விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது : - இங்கு வருகை தந்திருக்கும் எனது குருநா தர் , மாஸ்டர் ஆப் மாஸ்டர் கே . பாலச்சந்தர் சார் மற்றும் வருகை புரிந்திருக்கும் திரையுலகி னருக்கும் , தமிழ் திரையுலக ஷோமேன் ஷங்கர் மற்ற அனைவருக்கும் எனது வணக்கம் . நான் கொஞ்ச நாளா பட ஆரம்ப விழாவுக்கு போவ தில்லை . சமீபத்தில் என்னை சந்திச்ச டைரக்டர் ஷங்கர் ' முதல்வன் ' படபூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார் . நான் வெளியூர் போவதாக அவரிடம் கூறினேன் . அப்போது கூட ' இல்லே , இல்லே நீங்க என்னோட முந்தைய படங்கள் ளே கலந்து கொண்டு வாழ்த்தி இருக்கீங்க . இந்த படம் எனது சொந்த படம் நீங்க வரலேன்னா அது எனக்கு ஒரு குறையா இருக்கும் என்று கூறி னார் . படம் தொடங்க ரப்போ மனக்குறை யோடு இருக்கக்கூடாது என்பதற்காக எனது வெளியூர் பயணத்தை தள்ளி வைத்து விட்டு இந்த விழாவுக்கு வந்தேன் . அரங்கத்திற் குள் நான் வந்தவுடன் டைரக்டர் கே . எஸ் . ரவிகுமார் என்னை ஒரு மாதிரியா பார்த்தார் . கொய்ராலா நீகூட படத்துக்கு ஆபீஸ் பையனுக்கு கூட பூஜை போட்டது தெரியலே. இங்கே நடக்கும் இந்த பூஜையை பார்த்தியா ' என்று என்னை பார்த்து கேட்பது போல் அவரது பார்வை இருந்தது .
ஷங்கருக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கு . அவர் டைரக்ட் செய்த முதல் படத்திலே அர்ஜூன் கதாநாயகனாக நடிச்சார் , தற்போது ஷங்கர் தயாரிக்கும் முதல் படத்திலேயும் அர்ஜுன் நடிக்கி றார் .
இந்த படத்தின் சப்ஜெக்ட் நான் கேட் டிருக்கிறேன் . ரொம்ப நல்ல சப்ஜெக்ட் . இந்த நேரத்திலேயே ஷங்கருகிட்ட நான் ஒண்ணு கேட்டுக்கிறேன் . வருடக் கணக் கில் படத்தை எடுக்காமல் சீக்கிரம் படத்தை எடுத்து முடிங்க . . . ஆனா ஏப்ரல் 14ந் தேதி படையப்பா ' ரீலீஸ் ஆகறதாலே உங்க படத்தை கொஞ்சம் தள்ளி ரிலீஸ் செய்யுங்க . ஒருவடத்துக்கு ஒரு படம்னு செஞ்சிகிட்டிருக்கேன் , நீங்க முதல்லே வரதா இருந்தா சொல்லுங்க , நான் என் படத்தை தள்ளி போட்டுக்கிறேன் .
இவ்வாறு தனது பேச்சை ரஜினி முடிக்கும் போது தமாஷாக குறிப்பிட் டார் .
|