சின்னத்திரைக்கு தற்போதுப் புத்துயிர் அளித்துக்கொண்டிருப்பவர் நம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் என்று சொன்னால், பலரால் நம்பமுடிவதில்லை. ஆனால் அதுவே உண்மை. ஏனெனில், இன்றைய சூழலில் சூப்பர் ஸ்டார் திரைப்படம் ஒளிபரப்பாத சேனல் இல்லை என்றே கூறலாம். அவர்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்துவதே இவரது திரைப்படங்கள்தான். உதாரணத்திற்கு இன்று (12.05.2020) சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களை காண்போம்.
கேப்டன் டிவி - காலை 8.30 - அலாவுதீனும் அற்புதவிளக்கும்
ராஜ் டிவி - காலை 9.00 - எல்லாம் உன் கைராசி
கைரளி டிவி - காலை 10,30 - பாட்ஷா
ஜீ தெலுகு - மாலை 6.00 - 2 பாயின்ட் 0
கலைஞர் டிவி - இரவு 9.00 - அன்புள்ள ரஜினிகாந்த்
இப்படி ஒரு நாளில் எடுத்துக்கொண்டால், பெரும்பாலான சேனல்களில் சூப்பர் ஸ்டார் அவர்களின் திரைப்படங்களை ஒளிபரப்பாத நாட்கள் இல்லை என்றே கூறலாம். இந்த வகையில் சின்னத்திரையை மறைமுகமாக வாழவைத்துக் கொண்டிருப்பவர் ரஜினி அவர்கள் தான் என்பது நமக்குத் தெரியவருகிறது. இவரது திரைப்படங்களை ஒளிபரப்பினால் தங்களுடைய சேனல்களின் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், அதனால் அவர்களது டி.ஆர்.பி ரேட்டிங்கும் அதிகரிகும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். செய்திச்சேனல்கள் அவரது திரைப்படங்களை ஒளிபரப்ப முடியாது என்பதால், அவரது வாழ்க்கை மற்றும் திரைத்துறை வரலரறு, மற்றும் அவரது பழைய திரைப்படங்களின் கண்ணோட்டம், அவருடன் நடித்த நடிகர்கள் அவருடன் தங்களது அனுபவங்களைப் பகிர்வது போன்று அவரைக் குறித்த ஏதோவொரு நிகழ்ச்சி ஒளிபரப்பி தங்களது டி.ஆர்.பி ரேட்டிங்கையும் உயர்த்திக் கொள்கிறார்கள். இப்படி எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்றால், அவர் கூறிய அல்லது அவர் செய்த நிகழ்வு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறார்கள். இதிலிருந்து, சின்னத்திரையை மறைமுகமாக வாழவைத்துக் கொண்டிருப்பவர் நம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
|