கொரானா நிவாரணமாக தமிழ் திரையுலகத்தைச் சார்ந்த ஃபெப்ஸி அமைப்பு, தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் சங்கம் ஆகியவற்றிற்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக சூப்பர் ஸ்டார் அவர்கள் பலவிதமான உதவிகளைத் தொடர்ச்சியாக செய்துவருகிறார். மேலும் தயாரிப்பளர் சங்கத்திற்கு இன்றும் பலவிதமான உதவிகளைச் செய்துவருகிறார். அதுமட்டுமில்லாமல், தமிழகம் முழுவதுமுள்ள எல்லா மாவட்டங்களிலும் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக எண்ணிலடங்கா நிவாரண உதவிகளை சூப்பர் ஸ்பார் அவர்கள் செய்துவருகிறார்.
சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு பிறருக்கு உதவி செய்யக்கூடிய மனம் எந்த அளவுக்கு நிறைந்திருக்கிறது என்பது பற்றி பல்வேறு விஷயங்களை , கே.ராஜன் அவர்கள் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். மேலும் 'தாங்கள் ஏன் ரஜினியை மட்டும் தேர்ந்தெடுத்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு உதவிக் கேட்டீர்கள்? கமலஹாசனும் ஒரு முன்னனி நடிகர்தானே அவரிடம் ஏன் அணுகவில்லை? ' என்று பலர் கே.ராஜனிடம் கேட்டதற்கு, அவர் ' சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் பிறருக்கு உதவிச் செய்யக்கூடிய நல்ல மனம் படைத்த வெள்ளையுள்ளம் படைத்தவர். ஆனால், கமலஹாசன் அவர்கள் ரஜினிக்கு நேர்மாறானவர். இது என்னுடைய அனுபவத்தி்லிருந்து நான் சொல்கிறேன் ' என்றார்.
" ஹே ராம் திரைப்படம் வெளிவந்தபோது, ஒரு கலவரம் நிகழ்ந்தது, அப்போது நான் கைது செய்யப்பட்டேன். அதை திரையுலகத்தைச் சார்ந்தவர்கள் பலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடினர். இது குறித்து டைரக்டர் கே. ஆர். அவர்கள் தொலைபேசியில் கமலஹாசனிம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் என்னை நேரில் அழைத்தோ, தொலைபேசியில் தொடர்புக்கொண்டோ அதுகுறித்து இதுநாள் வரையில் பேசவில்லை. இன்றும் அந்த கேஸ் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. அவருக்காக அன்றுநான் அவருடன் நின்று போராடினேன், ஆனால், அவரோ இன்றுவரை என்னைக் கண்டுக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட எண்ணமுடைய கமலஹாசன் கண்டிப்பாக இந்த நேரத்தில் உதவி செய்வார் என்று எப்படி நம்பமுடியும். ஆனால், நமது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்,
கமலஹாசனால் பல தயாரிப்பளர்களுக்கு ஏராளமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ரஜினியின் படங்களைப் பொருத்தமட்டில், 95 சதவீதம் லாபம்தான், 5 சதவீதம் வேண்டுமானால் நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் அதுவும் அவரால் ஏற்பட்ட நஷ்டமல்ல, அவரை வைத்து இயக்கிய இயக்குனர்கள் அதிகமாக செலவு செய்ததால் ஏற்பட்டதே. தாயாரிப்பாளர்களுக்கு 95 சதவீதம் லாபம் மட்டுமே கொடுத்தவர் ரஜினி அவர்கள் மட்டும்தான். இவற்றையெல்லாம் தெரிந்துதான் நான் சூப்பர் ஸ்டாரைத் தேர்ந்தெடுத்து உதவிக்கோரினேன். நான் உதவிகோரிய இரண்டு மணிநேரத்திற்குள் என்னைத் தொலைபேசியில் அழைத்து, தன்னால் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு என்னனென்ன உதவிகள் செய்துத்தரமுடியுமோ அதைக் கட்டாயம் செய்துத்தருவதாக உறுதியளித்தார். உறுதியளித்தது மட்டுமில்லாம் அதை நிறைவேற்றியும் தந்தார். இப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவர் சூப்பர் ஸ்டார் என்பது எனக்கு முன்பே தெரிந்ததால்தான் கமலஹாசனிடம் கேட்காமல், ரஜினியை அணுகினேன் " என்று தயாரிப்பாளர் கே. ராஜன் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.
ஒரு தயாரிப்பாளரே, சூப்பர் ஸ்டார் குறித்து இவ்வாறு கூறியது, எல்லோரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ரஜினி பிறருக்கு உதவி செய்யும் தூயஉள்ளம் படைத்தவர் என்பதும் அது எந்த அளவுக்குப் எல்லோராலும் போற்றப்படுகிறது என்பதும் கே. ராஜன் அளித்த விளக்கம் மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது. உண்மையாகவே, பிறர் கஷ்டப்படும்போது அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவேண்டுமென்பதில், சூப்பர் ஸ்டார் ஒரு முன்னுதாரானமாக உள்ளார். திரையுலகம் மட்டுமல்லாமல் பொதுவாழ்க்கையிலும், தமிழகத்திலுள்ள அனைத்து மாவாட்டங்களிலும் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக அவர் செய்யம் பல உதவிகளால் பிறருக்கு எடுத்துகாட்டாக விளங்குகிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
|