சற்று முன்பு தலைவர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்ட பதிவு ஒட்டு மொத்த மீடியா வையும் அலற விட்டிருக்கிறது. அந்த அளவுக்கு அனைவரிடத்திலும் மிக பெரும் வரவேற்பு பெற்றுவருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரஜினி மக்கள் மன்றம் தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரண நிதிகள் வழங்கி மக்களுக்கு உதவி செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைகளை திறந்தது. ஆனால் உயர்நீதிமன்றம் மூட உத்தரவிட்டு, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. அரசாங்க வருவாய்க்கு டாஸ்மாக் கடைகளை திறப்பதை விட்டால் வேறு வழியில்லை என்பதால், இதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையிட்டது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் ட்விட்டர் பக்கத்தில், " இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவு கூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் " என்று பதிவிட்டுருந்தார். இந்த பதிவு போட்ட சிலமணி நேரங்களிலே அனைத்து மீடியாக்களிலும் ட்ரென்டிங் ஆனது. டாஸ்மாக்-ஐ திறக்க கூடாது என ஏற்கனவே பிரதான எதிர்கட்சியான தி மு க வின் தலைவர் ஸ்டாலின் கூட போராட்டம் நடத்தினார். ஆனால் அது சமூக வலைதளங்களிலும் மீடியாக்களிலும் ஒரு வரி செய்தியாகத்தான் பார்த்தார்கள். அதற்க்கு பிறகு அதை பற்றி இன்று வரை பேசுவதாக கூட தெரியவில்லை. ஆனால் ரஜினிகாந்த் போட்ட ஒரு ட்விட் போட்ட சில மணி நேரங்களிலே இந்திய அளவில் ட்ரென்டிங் ஆனது. இது ரஜினிகாந்த் ன் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை தி மு க விற்கு உணர்த்தியிருக்குனு சொல்லலாம்.
இந்த ட்விட்டை ட்ரெண்டு ஆக்கியது தி மு க தான் என்று சொல்லலாம். ரஜினியை வச்சி செய்வதாக நினைத்து கொண்டு திமுக, ரஜினியை பிரதானமாக வைத்து மது கடை போராட்டத்தை நடத்துகிறது. அதாவது, "மோடியிடம் இருந்து தமிழக அரசுக்கு என்ன நிதி வாங்கி கொடுத்திருக்க, இப்போ மது கடை திறப்புக்கு மட்டும் வந்து பேசறியே இது நியாயமா என்று" அதிமுக தரப்புல இருந்து திமுக போராடி ரஜினிகாந்த் ட்விட்ட ட்ரெண்டு ஆக்குகிறது.
இப்போ மது கடைக்கு ஆதரவா திமுக நிக்குதா? இல்ல எதிரா நிக்குதா? என்ற எண்ணம் நமக்கு வருகிறது, திமுக மது கடை திறப்புக்கு எதிரா நிக்குதுனா ரஜினிகாந்த் ஆதரவா பேசிருக்கணும், ஆனால் பேசியது என்னவோ,"மோடியிடம் இருந்து என்ன நிதி வாங்கி கொடுத்த? இப்போ அதிமுக மது கடை திறக்கும்போது மட்டும் வந்து பேசுற" என்று சொல்கிறார்கள். இன்னொரு தரப்பு என்ன பேசுகிறார்கள் என்றால், என்னையா ரஜினி நீ, "கட்சி ஆரம்பிச்சு தனித்து நின்னு ஆட்சி ஆளபோரனு சொல்ற, ஆனா அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரத பத்தி பேசுறியே" என்று ரஜினியை தாழ்வாக பேசுவதாக எண்ணி அதிமுகவ ஆதரிச்சுட்டு இருக்காங்க.
அனைத்து எதிர்கட்சிகளும் அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள், அதேபோல் ரஜினியும் எதிர்ப்பு தெரிவிச்சார், அது அவரோட கருத்து என்று கடந்து போயிர்க்கலம், ஆனால் திமுக ரஜினியை எதிர்த்து மல்லுக்கட்டி அவரின் ட்விட்டை ட்ரெண்டு ஆக்கியதுதான் மிச்சம்.
ஆனால் உண்மை என்னவென்றால் ரஜினி தன் ஒரே ட்விட்டால் திமுகவோடு சேர்த்து ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்து தமிழகத்தில் தன் செல்வாக்கை நிரூபித்துருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரஜினி மக்கள் மன்றம் தமிழகம் முழுவதும் பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். அதுமட்டுமில்லாமல் மருத்துவர்களுக்கு முககவசம் கொடுப்பது, மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரனங்கள், சாலையோரத்தில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குவது இந்த மாதிரியான நிறைய உதவிகள் செய்து வருகிறார்கள். இதுமட்டுமில்லாமல் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மட்டும் 50 இலட்சதுக்கும் மேற்பட்ட கொரோன நிவாரண நிதிகள் வழங்க பட்டது, அதேபோல் வேலூரில் 11 இலட்சதுக்கு கொரோன நிவாரண நிதிகள் வழங்க பட்டது.
இப்படி அனைத்து மாவட்டதுக்கும் நிவாரண நிதிகளை கொடுத்து சிறப்பாக செயல் பட்டு வருகிறது. இதுமட்டுமில்லாமல் சினிமா துறையிலும் சின்னத்திரை நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், தென்ன்னிந்திய நடிகர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம்,பெப்சி அமைப்பு என்று அனைத்து தரப்புக்கும் சூப்பர் ஸ்டாரின் உதவி சென்றிருக்கிறது .இப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் ஏராளமானோர் பயனடைந்து இருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு எதிராக சூப்பர் ஸ்டார் கொடுத்த குரல் (ட்விட்) ரொம்பவும் அவசியமான ஒன்று. அவரது கடைமையை அவர் சிறப்பாக செய்து மக்களுக்காக குரல் கொடுத்து அசத்தியிருக்கிறார். சூப்பர் ஸ்டாரின் இந்த ட்விட் ஆனது மிகபெரிய அளவில் எல்லாராலும் கவனிக்கபடும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
|