சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் கூட ஒரு சில படங்களை ரசிகர்கள் என்றைக்குமே மறக்க முடியாது. பொதுவானவர்கள் கூட விரும்பி எத்தனை தடவ போட்டாலும் குடும்பத்தோட உட்கார்ந்து பார்ப்பார்கள். அதில் மிக மிக முக்கியமான படம்தான் படையப்பா. இந்த பெயரை சொல்லும்போதே ஒரு புள்ளரிப்பு என்பது தானாக உண்டாகும்.
படையப்பா திரைப்படம் கடந்த எட்டு வருடங்களாக சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பவில்லை. அதுக்கு காரணம் என்னவென்றால் படையப்பா படத்தினுடைய சாட்டலைட் உரிமம் எட்டு வருடத்திற்கு முன்பே முடிந்துவிட்டது, அதற்க்கு பிறகு சன் தொலைகாட்சியும் அதை புதிபிக்கவில்லை. அதேமாதிரி பாபா, அருணாசலம் படங்களும் சன் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பு ஆகி ரொம்ப நாள் ஆகிவிட்டது.
இந்த வகையில் படையப்பா திரைபடத்தினுடைய சாட்டலைட் உரிமம் பற்றிய தகவல் தற்போது வந்துள்ளது. அது என்னவென்றால் படையப்பா படத்தினுடையா சாட்டலைட் உரிமைத்தை சன் தொலைகாட்சி புதிபித்து உள்ளது என்பதுதான் , இது சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
படையப்பா படத்தை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கையில் முக்கியமான படம் என்றுதான் சொல்லவேண்டும். அவருடைய 25வது திரையுலக வாழ்கையில் வந்த படம் தான் படையப்பா , 1999ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தினுடைய வெற்றிவிழாவில் தான் கமல் உட்பட பல்வேறு கலைஞர்கள் கலந்து கொண்டனர், அப்போது பட்டிமன்றத்தில் பேசிய பேச்சை பார்த்துவிட்டு மணிகண்டன் என்பவருக்கு அந்த நிகழ்ச்சியில் தங்க சங்கிலி ஒன்றை பரிசளித்தார் சூப்பர் ஸ்டார். அந்த மணிகண்டன் தான் இப்போது ஊடங்களில் அரசியல் விமசர்கராகவும், பத்திரிக்கையளராகவும் இருக்க கூடிய பெருமாள் மணி என்பது பலபேர் அறிந்த விஷயம்.
மேலும் இந்த படத்தில் வரக்கூடிய, பாம்பு புத்தில் இருந்து பாம்பு எடுக்ககூடிய காட்சி, ஊஞ்சல் காட்சி என்பது பலபேராலும் இன்று மறக்க முடியாத காட்சி. இந்த படத்தில் ஏ ஆர் ரஹ்மான் போட்ட இசை ஆகட்டும், அவருடன் ஹாரிஸ் ஜெயராஜ் சேர்ந்து பணியாற்றியது ஆகட்டும் எல்லாமே சிறப்பான விஷயம்தான். இந்த படத்தில் வந்த பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பரவியது. படத்தின் ஆரம்ப காட்சியை பார்த்து பார்த்து சி டி யை தேய்த்த ரசிகர்கள் ஏராளம்.
அதுமட்டுமில்லாமல் சிவாஜிகணேசன் இந்த படத்தில் ரஜினியின் தந்தையாக நடித்து அனைவரையும் உருக வைத்திருப்பார் . சிவாஜியுடைய நிறைவான படமாக திரையுலகில் இந்த படம் அவருக்கு அமைந்திருந்தது. சூப்பர் ஸ்டார்க்கு இணையான ஒரு கதபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் வில்லியாக நடித்திருந்தார். ரஜினிக்கு ஜோடியாக எத்தனையோ கதாநாயகிகள் நடித்திருந்தாலும், இந்த படத்தில் சௌந்தர்யா நடித்திருந்தது சிறப்பாக இருந்தது. இவர்களுது ஜோடி பொருத்தம் அருமையா இருந்தது என்று தான் சொல்லவேண்டும்.
இப்படி ஏராளமான சிறப்புகள் உள்ள இந்த படையப்பா திரைப்படத்தை மறுபடியும் எல்லாரும் குடும்பத்தோடு உட்கார்ந்து சன் தொலைகாட்சியில் பார்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
|