பயில்வான் ரங்கநாதன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சொன்ன யோசனையினால் சூப்பர்ஸ்டார் மகிழ்ச்சியடைந்து கட்டித் தழுவிப் பாராட்டியுள்ளார். அது என்னவென்று அவர் கூறியதாவது :
காளி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏ வி எம் தளத்தில் நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டது. அப்போது 10 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது. எல்லாரும் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அன்றைக்கு காலை வெளிவந்த பிரபல நாளேட்டில் "ரஜினிகாந்த்துக்கு டூப் போட்ட நடிகர் தீ விபத்தில் சிக்கி மருத்தவமனையில் அனுமதி, உடன் நடித்த 10 ஸ்டண்ட் கலைஞர்கள் மருத்தவமனையில் அனுமதி, உயிருக்கு போராட்டம்" என்று முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக வந்தது. இந்த செய்தியை படித்த நான், காலை 11 மணிக்கு ரஜினியை பார்க்க ஏ வி எம் ஸ்டுடியோக்கு சென்றேன்.
அப்போது "இன்னிக்கி காலைல பேப்பர் பாத்திங்களா?" என்று கேட்டேன்.
"ஹ்ம்ம் பாத்தானே அதுக்கு என்ன?" என்று கூலாக சொன்னார்.
"என்னவா ரஜினிகாந்துக்கு டூப் போட்ட நடிகர்னு போட்டுருக்கே?" என்றேன்.
"ஆமா அவர் டூப் தான போட்டுர்காரு" என்று ரஜினி சொன்னார்.
"இல்லைங்க எம் ஜி ஆர் சிவாஜிக்குலாம் டூப் போட்டுதா நடிப்பாங்க ஆனா செய்திய வெளியிடும் போது சிவாஜிக்கு டூப் போட்டவாறு எம் ஜி ஆர் க்கு டூப் போட்டவாறுனு செய்தி வெளியிடமட்டாங்க , ஏனா அவங்க இமேஜ் குறைந்துவிடும்.... முதல் முறையா உங்க பேரா யூஸ் பண்றாங்கனு" சொன்னேன்.
"இஸ் இட் அப்டியா" என்று வியந்து கேட்டார்.
"ஆமாம்" என்றேன்
"அப்போ என்ன செய்யலாம் , இப்டி போட்டுர்காங்க, நாம என்ன செய்யலாம்?" என்று கேட்டார்.
"நீங்க போய் அந்த ஸ்டண்ட் நடிகர்களை மருத்தவமனையில பாருங்கன்னு" சொன்னேன்.
"கரெக்ட் இதுக்கு தான் வெல்விஷர் வேணும்னு சொல்றது" என்றார். அவர் என்னை எப்போதுமே அப்படி தான் குறிப்பிடுவார்.
நான் அந்த ஸ்டண்ட் நடிகர்களை போய் பாருங்க என்று தான் சொன்னேன். அவர் நேரடியாக போய் பார்த்து ஸ்டண்ட் நடிகர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிதியுதவி செய்தார். மறுநாள் செய்திதாள்களின் முதல் பக்கத்தில் "தீ விபத்தில் சிக்கிய நடிகர்களுக்கு ரஜினிகாந்த் நிதியுதவி செய்தார்" என்று தலைப்பு செய்தியாக வந்தது. மறுநாள் நான் ரஜினிகாந்தை சந்தித்த போது என்னை கட்டித் தழுவி பாராட்டினார்.
"ஒரு செய்தியை மூன்று வகையாக வெளியிடலாம். செய்தியை செய்தியாக வெளியிடலாம். நேர்மறை செய்தியாக வெளியிடலாம், எதிர்மறை செய்தியாக கூட வெளியிடலாம். ரஜினி விஷயத்தில் முதல் நாள் போட்டது எதிர்மறை செய்தி, இரண்டாவது நாள் போட்டது நேர்மறை செய்தி. இதிலிருந்து அவர் புரிந்து கொண்டது ஒரு செய்தியை சம்பந்தப்பட்டவருக்கு ஆதரவாகவும் போடலாம். கருப்பு கண்ணாடி போட்டுகொண்டு எதிர்மறையாகவும் போடலாம். இது பத்திரிக்கையாளர்களுடைய சுதந்திரம் என்று" அன்று ரஜினிகாந்துக்கு உணர்த்தியதால் இன்றும் ரஜினிகாந்த் அவர்கள் என்னை சந்தித்தால் நட்பு பாராட்டுவார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறினார்.
|