சில வருடங்களுக்கு முன்பெல்லாம் அஜித் நடிக்க வேண்டிய படத்தில் சூர்யா நடித்தார், சூர்யா நடிக்க வேண்டிய படம் விஜய்க்கு போனது, விஜய் நடிக்க வேண்டிய படம் அஜித்துக்கு கைமாறியது என்றெல்லாம் செய்திகள் வெளியாவது வழக்கமாக இருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் இது போல ஏதேனும் நிகழ்வுகள் நடந்தது உண்டா? அது பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி வெளிப்படையாக ஏதேனும் கூறியிருக்கிறாரா?
சமீபத்தில் அதாவது இருபது வருட காலத்தில் பெரும்பாலன முன்னணி இயக்குனர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியை மனதில் வைத்து மிக பிரம்மாண்டமான கதைகளை தயார் செய்தார்கள். சில சூழல்களால் சில கதைகளில் அவர் நடிக்க முடியாமல் போனது. முதல்வன், ரமணா போன்ற படங்கள் எல்லாம் சில காரணங்களால் சூப்பர் ஸ்டார் ரஜினியை சென்றடைய முடியம வேறு நடிகர்களை தேடிகொண்டன. அதேசமயம் சூப்பர் ஸ்டார் ரஜினி எண்பதுகளின் மத்தியில் இது போன்று ஒன்றிரண்டு சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. அப்படி வரும் சிக்கல்கள் பெரும்பாலும் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கமல் இருவர்க்கு இடையேயான படங்களில் மட்டுமே ஏற்ப்பட்டன.
உதாரணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த காளி என்கிற படத்தை மலையாள இயக்குனர் ஐ வி சசி என்பவர் இயக்கினார். ஆனால் அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி சற்று உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த சமயத்தில் அதே இயக்குனர் ரஜினிக்காக எழுதி வைத்திருந்த ஒரு கதையை அவரை வைத்து இப்போதைக்கு இயக்க முடியாது என்று நினைத்து, உடனே கமலிடம் கால் ஷீட் வாங்கி இயக்கி முடித்தார். அந்த படம்தான் கமலை ஆக்சன் ஹீரோவாக மாற்றிய மிக பெரிய வெற்றி பெற்ற "குரு" திரைப்படம். அந்த படத்தில் நீங்கள் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கேக்கபட்டபோது, காளி படம் நீண்ட நாட்களுக்கு முன்பே ஆரம்பித்தார்கள். டைரக்டர் கால் ஷீட் மற்றும் நடிகர், நடிகையர் கால் ஷீட் சரி வர கிடைக்காததால் தயாரிப்பாளர்களால் தொடர்ந்து படபிடிப்பை நடத்த முடியவில்லை.குரு படத்தில் கால் ஷீட் சரிபட்டு வந்ததால் படத்தை சீக்கிரம் முடிக்க சுலபாக இருந்திருக்கலாம். இதில் போட்டி என்பதிற்கு இடமில்லை என்று கூறி கமலை விட்டு கொடுக்காமல் தாங்கி பிடித்தார்.
அதே போல பாலச்சந்தர் டைரக்சனில் தில்லு முல்லு படத்தில் நடித்த போது இந்த படத்தில் கமல் நடிப்பதாக சொல்ல பட்டு வந்த நிலையில் நீங்கள் நடிக்க ஒப்புகொண்டது ஏன் என்று நிருபர்கள் கேட்டனர். அப்போது பதில் அளித்த சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த படத்தில் கமல் நடிக்க ஆசைப்பட்டது எனக்கு தெரியாது, பாலசந்தர் சார் என்னை கூப்பிட்டு நடிக்கும்படி சொன்னபோது நான் ஏன் மறுக்க வேண்டும். "எப்போதும் மாறுபட்ட வேடங்களில் நான் நடிக்க விரும்புவேன். முன்பு புவனா ஒரு கேள்விகுறி, ஆறிலிருந்து அறுபது வரை, இப்போது மீசையில்லா தில்லு முல்லு" என்று பதில் சொன்னார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
|