தண்ணீர் இல்லாமல் தவித்த தமிழகம் .. களத்தில் இறங்கியரஜினி மக்கள் மன்றம் :
ரஜினி ரசிகர்கள் ரஜினியின் பன்ச் வசனங்களை விட அதிகம் கேட்ட வாக்கியம், "ரஜினி என்ன செய்துவிட்டார்தமிழகத்திற்கு”?
காவிரி பிரச்சினை, இலங்கை போர், ஜல்லிக்கட்டு ஆதரவு, தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு ஆளும் அரசிற்கு கண்டனம், 8 வழி சாலைப் பிரச்சினையில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல், இயலாதவர்களுக்கு உதவி, ஏழைகளுக்கு இலவச திருமணம், கஜா புயலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி என எத்தனை ஆதாரம் கொடுத்தாலும் இந்க் கேள்வி மாறாது.
பல முறை நாமும் "ஆமா டா, இனிமேல் வீட்டு குழாய்ல தண்ணி வரலானாலும் நீங்க ஓட்டு போட்டவன் கிட்ட கேக்காதீங்க, ரஜினி கிட்டயே கேளுங்க " என்று கடுப்பில் கூறி இருப்போம்.
இன்று அது நடந்தே விட்டது !!!
குழாயில் தண்ணீர் வரவில்லை, ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தவர்கள் நடைமுறை சாத்தியங்களைப் பற்றி யோசிக்காமல் யாகம் வளர்க்கலாம் என ஐடியா சொல்கிறார்கள் !! இன்னொரு சாரார் நிவர்த்தியினைப் பற்றி பேசாமல் போராட்டம் எனும் பெயரில் அரசியல் செய்து கொண்டுள்ளனர்.
ஆனால் எந்த ரஜினியை சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம்கருத்து சொல்ல அழைத்தார்களோ, அந்த ரஜினி மக்களைபோராட சொல்லவில்லை, கண்டன அறிக்கையும் விடவில்லை அவ்வளவு ஏன் ஒரு சின்ன ட்வீட் கூட பதிவிடவில்லை.
ஆனால் ரஜினியும் ரஜினி மக்கள் மன்றமும் செய்தது களத்தில்நிவாரணப்பணி!
இணையத்திலும், கட்சி சார்புத் தொலைக்காட்சிகளிலும் வரும் செய்திகள் மட்டுமே உலகில் நடக்கிறது என நினைப்பவர்களுக்கு விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.
முதலில் சென்னையில் (குறிப்பாக தண்ணீர் தட்டுப்பாடு முதலில் தொடங்கும் வடசென்னை பகுதிகளில்) ரஜினி மக்கள் மன்றம் (RMM) தண்ணீர் விநியோகம் செய்ய துவங்கிய போது, 'சும்மா ஒரு ஆர்வத்துல பண்ணுறாங்க, ஒரு வாரம் கழிச்சிஅடங்கிடுவாங்க ' என்ற கருத்தே பிரதானமாக இருந்தது.
ஆனால் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆன பின்பும் இது தொடர்ந்து நடைபெறுவது மட்டுமின்றி சென்னையோடு குறுகிவிடாமல் தங்களுடைய சேவையை / பணியை தமிழகம் விரிவடைய செய்தார்கள். உச்சகட்டமாக வெளிநாட்டு ரஜினிமக்கள் மன்றங்களும் தமிழக ரஜினி மக்கள் மன்றத்தினரோடுகைகோர்த்தனர்.
ரஜினி ரசிகர்கள் என்றால் போஸ்டர் அடித்தும் விசிலடித்தும்ஆராதனை செய்யும் கூட்டம் என குறைவாக எடைபோட்டவர்களுக்கு... மற்ற கட்சிகளுக்கு மக்கள் நலப் பணியில்எவ்வாறு இருக்க வேண்டுமென பாடம் எடுத்துள்ளார்கள்.
இத்தனை நாட்களாக ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள்பொதுமக்களையும் தங்களுடன் சேர்த்துககொண்டுஅர்ப்பணிப்போடு இந்த சேவையில் ஈடுபட்டு வருகின்றார்கள்என நெஞ்சார வாழ்த்திய மக்களுக்கு களத்தில் உள்ள உண்மைபுரியும்.
சிட்லபாக்கம் ஏரியை சுத்தம் செய்ய திரண்ட ரஜினிரசிகர்களுக்கு இந்தியாவின் முதுபெரும் தலைவரான அய்யா நல்லகண்ணு வாழ்த்தினாரே ! ரஜினியை ஆதரிப்பதற்குப்பதிலாக திரு.நல்லகண்ணு அவர்களை ஆதரிக்கலாம் எனச்சொன்னார்களே...அவர்கள் இப்போது எங்கே!?
நான் எதிர்ப்பு அரசியல் செய்யப்போவதில்லை என அவர் கூறிய பின்பு சிலரிடம் எழுந்த சிறுபிள்ளைத்தனமான கருத்துக்கள்:
'எதிர்த்து கருத்து சொல்ல மாட்டாராம், போராட்டம் பண்ணாசுடுகாடு ஆகிடும்ன்னு சொல்வாராம், கட்சி பெயரை சொல்லமாட்டாரம், ஒரு மாநாடு பொதுக்கூட்டம் கிடையாதாம், ஆனால் ஸ்டிரைடா சிஎம் ஆகிடணுமாம் '.
'போராட்டம் வேறு தீர்வளிப்பது வேறு என்பதுஅச்சிறுவர்களுக்கு விளங்கவில்லை!
போராட்டம் செய்தால் நமது உரிமை கிடைக்கும் என்பது உண்மை தான். ஆனால் நாம் இன்று என்ன மனநிலையில் இருக்கிறோம் ?
தண்ணீர் பஞ்சத்திற்கு போராட்டம் செய்கிறோம்.
அரசு தண்ணீரை சேமிக்க வழிவகை செய்யாமல் இருக்கிறது என்றோ, ஏறி குளம் ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறதென்று போராட்டம் செய்தால் ஒரு அர்த்தம் இருக்கிறது.
குடம் இங்கே தண்ணீர் எங்கே என மக்களை போராட தூண்டுவதில் என்ன பயன் உள்ளது ? தண்ணீர் எங்கே என போராடினால் மேஜிக் செய்து மழை வர வைக்க முடியுமா ?தற்காலிக தீர்வினை ஏற்படுத்திவிட்டு கேள்விக் கணைகளைஎய்திருக்கலாம் எதிர்க்கட்சிகள்.
சரி .. உண்மையாகவே மேஜிக் செய்து பார்க்கலாம் என யாகம்வளர்க்க கிளம்பிவிட்டார்கள் ஆளுன்கட்சியினர்!
எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையில் கிடைத்த வரை லாபம் என மக்களை தூண்டி விட்டுக்கொண்டிருக்கும் இந்நிலையில் ரஜினியும் மக்களை திரட்டினார். ஆனால் வேறொரு விஷயத்திற்கு...
வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி / மர நடுத்தலின் அவசியத்தை முன்னிறுத்தி ஒரு பிரமாண்ட விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள்.
உண்மையில் இந்த வகையில் மக்களை திரட்டுவது தான் இன்றைய தேவையே தவிர, அவர்களை தூண்டி விடுவது அல்ல.
இவ்வளவு நாள் ரஜினி எவ்வளவு செய்தாலும் அவர் எதுவுமே செய்யவில்லை என கூறியவர்கள் நேற்று விமான நிலையத்தில்அவரிடம் கேட்ட போது, நாங்கள் இதை பல காலமாகசெய்கிறோம் இப்போது தான் வெளியே தெரிகிறது என வழக்கமான புன்சிரிப்புடன் கடந்தார்.
பார்க்கத்தானே போறோம்.... ஆன்மீக அரசியலை..
கடைசியாக, ரஜினி எனும் ஒற்றை மனிதருக்காகஒன்றிணைந்து, மக்களுக்கு தன்னலமற்று உதவி செய்த அனைத்து காவலர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் !!!
வாழ்க தமிழ் !! வளர்க தமிழக மக்கள் !! ஜெய் ஹிந்த் !!
- விக்னேஷ் செல்வராஜ்.
|