மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்வில் சந்தித்துக் கொண்ட தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ரஜினிகாந்த் இருவரும் மரியாதை நிமித்தமாக வணக்கம் தெரிவித்துக்கொண்டனர்.
நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றுவருகிறது. மோடி பிரதமராக பதவியேற்றதைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுவருகின்றனர்.
இந்த நிகழ்வில் பல்வேறு மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள், சினிமா, விளையாட்டுத்துறை பிரபலங்களும் கலந்துகொண்டனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை ஆகியோர் கலந்துகொண்டனர். நடிகர் ரஜினி காந்த்தும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்தும் பங்கேற்றனர்.
ரஜினிகாந்த் நிகழ்ச்சிக்கு வருகை தந்தபோது, எடப்பாடி பழனிசாமியும் தம்பிதுரையும் அமர்ந்திருத்தனர். அப்போது, இரு தரப்பினரும் மரியாதை நிமித்தமாக வணக்கம் செலுத்திக்கொண்டனர். அதன்பின்னர், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ்வுக்கும் ரஜினிகாந்த் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
|