தலைவரின் செய்தியை தலைப்பாகப் போட்டு ____ தடவையாக ஆதாயம் தேடி இருக்கிறது விகடன்.
எத்தனையாவது முறை என்று சரியாக எண்ண முடியவில்லை. கம்ப்யூட்டரே கன்ஃப்யூஸ் ஆகிறது. அதனால்தான், அங்கே __ போடப்பட்டிருக்கிறது. பொறுத்தருள்க !
ஒரு காலத்தில் விகடனில் ஒரு கட்டுரையோ, செய்தியோ, புலனாய்வு தகவலோ வெளிவந்தால் பெரும் பரபரப்புடன் விவாதிக்கப்படும். ஆனால் இப்போதோ துணுக்கு செய்திக்கான முக்கியத்துவம் கூடப் பெறுவதில்லை.
இந்த நிலைக்குக் காரணமும் விகடன் தான் !!
நடுநிலை ஊடகமாக நற்பெயரை பெற்று திரு பாலசுப்ரமணியம் அவர்கள் இருந்த போது காப்பாற்றிக்கொண்டிருந்த ஊடக தர்மத்தை, யாரையோ தேரில் ஏற்றுவதற்காகத் தெருவில் இறங்கி கெடுத்துக்கொண்டது.
தலைவரை பற்றிய தாக்குதல் கட்டுரையில், தான் அரசியலுக்கு வருவதாகத் தலைவர் எண்ணற்ற முறை கூறியதாகக் கூசாமல் பொய் கூறியிருக்கிறது விகடன்.
2017 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் தான் அரசியலுக்கு வரப்போவதாகத் தலைவர் கூறியதற்குத் தக்க ஆதாரம் கொடுத்தால் நாங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயார்.
இல்லையெனில் மன்னிப்பு கட்டுரை வெளியிட நீங்கள் தயாரா?
கட்டுரையின் முதல் வரியிலேயே பொய் உரைக்கும் உங்களை நடுநிலை ஊடகம் என நீங்களே அழைத்துக்கொள்வது எத்தகைய செயல் ?
பாஜகவின் நதி நீர் இணைப்பு வாக்குறுதி பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்ததை, ஏதோ தாமாக முன்வந்து பாஜகவை ஆதரித்ததைப் போல எழுதும் நீங்கள், அதற்குச் சௌகித்தார் 2.0 எனக் கேலி சித்திரம் வரையும் நீங்கள், அதே நதிநீர் இணைப்பு பற்றித் திமுக அறிக்கையில் இடம் பெற்ற போது அடக்கி வாசித்த நீங்கள் எவ்வாறு உங்களை ஊடகம் என அழைக்கலாம் ?
இதற்கு வேறு பெயர் உள்ளது Mr. விகடன் !!
ரஜினி அவர்களை அரசியல் சார்ந்த விஷயத்தில் தலைவர் என அழைப்பது தமிழ் சமூகத்தை அவமதிக்கும் செயலாம் !!
சாதாரணக் கருத்துக்கணிப்புக்கே பத்திரிக்கை அலுவலகத்தைக் கொளுத்திய தலைவர்களின் தொண்டர்களுக்கு மத்தியில், எரிச்சலூட்டும் கேள்விகளைக் கேட்டதற்கு ஊடகங்களை த்தூ எனக் காறி துப்பிய தலைவர்களுக்கு மத்தியில், ஒரு பொய்யான கேவலமான சித்தரிப்பை செய்த பின்பும் அமைதியாகப் பதில் கட்டுரை எழுதும் அளவிற்கு எங்களைப் பக்குவப்படுத்தி உள்ளாரே, இது போன்ற தலைவர் உங்களுக்குப் பிடிக்காது தான்.
ஊடக தர்மம் என்ற ஒன்றையே குழி தோண்டி புதைத்த உங்களையெல்லாம் ஊடகம் என்று கூற நேர்வதே தமிழ் சமூகத்துக்கு மோசமான நிலை.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்குச் சமூக விரோதிகள் தான் காரணம் எனக் கூறியதை நக்கல் அடிக்கும் நீங்கள், மக்கள் அதிகாரம் இயக்கம் எங்களை மூளை சலவை செய்தது எனத் தூத்துக்குடி மீனவர்கள் கூறியதை மறைத்ததற்குக் காரணம் என்ன ?
அன்றே சொன்ன ரஜினி என்ற ஹாஷ்டாக் உலக அளவில் ட்ரெண்ட் ஆனதை அன்றைய தினம் உங்கள் பத்திரிக்கையில் போட்ட நீங்கள், யாருடைய லாபத்திற்காக இப்போது மறைக்கிறீர்கள் ?
காவேரி பிரச்சனையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நதி நீர் பிரச்னையைக் கையில் எடுத்ததாகவும், அதுவே பல ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டு இருப்பது தவறு எனும் தொனியில் பேசி இருக்கிறீர்களே ?
உண்மையில் ஒரு தலைவன் என்ன செய்ய வேண்டும் எனச் சொல்ல வருகிறீர்கள் ? நதி நீர் இணைப்பால் சுற்று சூழலுக்குக் கேடு என ஒரு தேர்தலில் சொல்லி விட்டு அடுத்தத் தேர்தல் அறிக்கையில் நதி நீர் இணைப்பை சேர்க்கவேண்டும் எனச் சொல்ல வேண்டுமோ ?
ஒரு விஷயத்தை அடையும் வரை அதைப் பற்றிப் பேசி தான் ஆகவேண்டும்.
உதாரணமாகச் சமூக நீதியை பற்றி முக்கிய திராவிடக் கட்சி பேசுவது போல். அனேகமாக விகடனின் அடுத்தக் கட்டுரையில் 50 வருடமாகச் சமூக நீதி பற்றிப் பேசிக்கொண்டிருப்பதெல்லாம் ஏமாற்று வேலை என எழுதுவார்கள் என எதிர்பார்க்கலாம். சரி தானே ?
வேறொரு கட்சியைச் சாடாமல் அரசியல் செய்வது தான் அரசியல் நாகரிகம் என ரஜினி புதுப் பொழிப்புரையைக் கூறுவதாகச் சாடும் நீங்கள் எதிர்பார்ப்பது எந்த வகையான அரசியலை ?
மற்ற கட்சி மீது சேற்றை வாரி இறைப்பதும், டயர் நக்கி எனக் கூறி விட்டு அவர்களுடன் கூட்டணி வைப்பதும், இரண்டு கட்சிகளிடமும் ஒரே நேரத்தில் கூட்டணி பேரம் பேசுவது போன்ற கட்சிகளைத் தான் எதிர்பார்க்கிறதா விகடன் ?
இப்போதும் தலைவர் சொல்வது ஒன்று தான். நான் வந்தால் என்ன செய்வேன் எனச் சொல்லி வாக்கு கேட்பேன். அது மக்களுக்குப் பிடித்தால் ஓட்டு போடட்டும்.
தேவை இல்லாமல் மற்றவர்களைத் திட்டி ஆதாயம் தேட வேண்டாம் என்பது அவர் கொள்கை. இதில் என்ன தவறைக் கண்டீர்கள்?
உங்களுக்கு விருப்பமான தலைவர்கள் செய்யும் அதே அரசியலை ஏன் எங்கள் தலைவர் செய்ய வேண்டும் விகடன்?
போராட்டம் நடத்துவதே தமிழ்நாடு சுடுகாடாமல் இருக்கத் தான் என விளக்கம் அளிக்கும் நீங்கள், போராட்டம் நடக்கும் அளவிற்கு மோசமான நிர்வாகம் தந்தது தவறு தொனியில் ரஜினி சொன்னதைப் புரிந்துக்கொள்ளும் அளவிற்குக் கூட உங்களுக்குச் சக்தி இல்லாமல் போனதென்னவோ ஊடகத்துறைக்கு ஒரு கருப்பு புள்ளி தான்.
ரஜினி அரசியல் புரட்சிக்காகவோ, சமூக முன்னேற்றத்துக்காகவோ கட்சி ஆரம்பிக்க விரும்பவில்லை எனக் கூறி உள்ளீர்கள். ஆம் அவர் புரட்சி ஏதும் செய்யப் போவதில்லை. கெட்டுப்போய் இருக்கும் இந்தச் சிஸ்டத்தைச் சரி செய்ய மட்டும் தான் போகிறார்.
எதிர்த்துக் கதறிக்கொண்டு இருப்பதே அரசியல் என நினைத்துக்கொண்டு இருக்கும் சில விலை போன ஊடகங்களுக்கு எதிர்ப்பே மூலதனம், அற வழியே எங்கள் அடையாளம் என உணர்த்த வருகிறார்.
(விலைபோன ஊடகம் என உங்களைச் சொல்லவில்லை , பொதுவாகச் சொன்னேன்)
கடைசியாக ஒன்று. நீங்கள் தலைவர் பெயரை உபயோகித்து , உங்கள் இஷ்டத்துக்கு அடிச்சி விட்டு காசு பார்த்த சில அட்டைப்படங்களை இணைத்துள்ளோம்.
ரஜினியின் கருத்து இப்போது சில்வண்டு அளவு கூட மதிப்பதில்லை எனக் கூறும் நீங்கள் அவரது அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு அவருக்கு இருக்கும் மதிப்பை வைத்து காசு பார்ப்பதற்காக அவிழ்த்து விட்ட பொய் மூட்டைகளில் சில...
அதிமுகவை ரஜினி கைப்பற்றுகிறார், காவேரிக்கு உண்ணாவிரதம் இருக்கத் திட்டம், ஆட்சியைக் கலைக்க பாஜகவுடன் பேச்சுவார்த்தை, தீபாவளிக்கு முன்பு கட்சி ஆரம்பிப்பார், பாஜகவிற்கு ஆதரவாகக் கருத்து தெரிவிப்பார் என உங்கள் பொய் மூட்டைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதில் ஒன்று கூட நடக்கவில்லை என்றாலும் உங்கள் உலக மகா investigative journalism தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
நீங்கள் மதிக்காத நபரை பற்றித் தினமும் ஒப்பாரி வைக்க வேண்டியதன் அவசியம் என்ன? புறக்கணித்துச் செல்லலாமே! உங்களை யாராவது எழுதுங்கள் என்று வற்புறுத்தினார்களா?
நடுநிலை ஊடகம் எனும் ஸ்தானத்தை எப்போதோ இழந்து விட்டீர்கள். ஊடகம் எனும் பெயரையாவது காப்பாற்றிக்கொள்ளுங்கள் !!!
நாளை வெக்கமே இல்லாமல் அவரை அட்டை படத்தில் போட்டு உங்கள் விற்பனையைப் பெருக்கப் பார்ப்பீர்கள். பரவாயில்லை. எங்கள் தலைவரால் வாழ்ந்தவர்கள் தான் உண்டு.
எங்கள் தலைவரை வீணாகப் பழித்து ஆண்டவனால் தண்டிக்கப்பட்டவர்கள் தான் அதிகம். ஆண்டவன் இருக்கிறார் !! அவர் பார்த்துக்கொள்வார் !!!
- விக்னேஷ் செல்வராஜ்
இதையும் சற்று படிச்சு பாருங்களேன்
|