இன்று நேற்றல்ல எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் யார் யாரோ இந்த நதிநீர் இணைப்பு பற்றி பேசியுள்ளார்கள்.மறந்தும் கடந்தும் சென்றார்கள்.
ஆனால் ஒரே ஒருவரின் குரல் மட்டும் இன்று வரை தொடர்ந்து மாறாத குரலாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
அந்தளவு இந்த மனிதன் இக்கனவை காதலிக்கிறார்.. கனவு நனவாகும் சூழல் வந்தால் வாழ்த்துகிறார்.
ஆனால் கிடைப்பதென்னவோ நாத்திசைகளில் இருந்தும் ஏச்சுகளும் பேச்சுகளும் மட்டும் தான்.. சலிக்கவில்லை.. இப்போதும் வாய்ப்புக் கிடைத்தால் வலியுறுத்த மறப்பதில்லை.
நாளை இவரே ஆட்சிக்கு வந்தால் தான் இத்திட்டம் நனவாகும் என்ற சூழல் கூட கனிந்து கொண்டிருக்கிறது.. ஆம் அன்புத் தலைவர் ரஜினியின் ஒரே கனவு நதி நீர் இணைப்பு...
இந்தியா முழுதும் நதிகளை இணைக்க வேண்டும்.. முடியாவிட்டால் குறைந்தபட்சம் தென்னிந்திய நதிகளையேணும் இணைக்க வேண்டும்.. 2002 ல் தலைவர் உதிர்த்த முதல் பேட்டி.. முன்னர் கூட பேசியிருக்கலாம்.. எனக்கு நினைவில் இல்லை.
அன்று முதல் நேற்றைய பேட்டி வரை சொல்லிக்கொண்டே தான் இருக்கிறார்.. காலா இசை வெளியீட்டு மேடையில் கண்கலங்கிய போது தான் புரிந்தது.. தலைவர் எந்த அளவு இத்திட்டம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று..
ஒரு புவி தகவிலியல் பொறியாளனாக நதி நீர் இணைப்பின் சாத்தியங்கள் நன்கு தெரிந்தவனாக சொல்கிறேன் இந்தியா போன்ற நாடுகளில் நதி நீர் இணைப்பு சாத்தியமானால் உண்மையிலேயே வறுமை ஒழியும்..வளம் பெருகும். நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் தழைத்தோங்கும்..
சுற்றுச்சூழல் பிரச்சனை ஏற்படும் சூழலியல் மாறும் என்றெல்லாம் சொல்கிறார்களே என கேள்விகள் எழலாம்..!
அனைத்தும் ஏற்கத்தக்க வாதங்கள் தான்..அதையும் தாண்டி அதை சாத்தியப்படுத்த முயற்சிப்பது தான் மனிதனின் வேலையே அன்றி ரஜினி சொல்லிவிட்டார் என்பதற்காகவே ஒரு திட்டத்தை கண்மூடித்தனமாக விமர்சிப்பது நல்லதல்ல...
தமிழகம் முழுதும் இருக்கும் நதிகளை தென்னிந்திய நதிகளோடு இணைப்பது எவ்வித சூழலியல் மாற்றத்தையும் ஏற்படுத்தாது.. இது ஆய்வுப்பூர்வ உண்மை.. அதை செய்ய எந்த அரசுகள் முன்வரும்..?
திமுக தென்மாவடங்களில் நம்பியாறு குண்டாறை இணைத்தது.. இது தொடர்ந்திருக்க வேண்டும்.. தொடராமல் தடுத்த சக்தி எது?
ஆக நதி நீர் இணைப்பு யாருக்கோ எதற்கோ பிடிக்கவில்லை..ரஜினி சொல்வதைச் செய்பவர்.
அதனால் தான் என்னடா இவர் இந்த நதி நீர் இணைப்பையே சொல்லிட்டு இருக்காரே... சொல்றமாதிரியே செய்துவிடுவாரோ என ஒரு கூட்டம் எல்லாவிதத்திலும் அச்சம் கொள்கிறது.
மத்தியில் பாரதிய ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் வாஜ்பாயின் கனவான நதி நீர் இணைப்பை சேர்த்திருக்கிறது..( கடந்த 5 வருடம் ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்தது என யாரும்கேட்காதீர்கள்) மாநிலத்தில் திமுகவும் சொல்கிறது, அதிமுகவும் சொல்கிறது (50 வருடங்களாக இருகட்சிகளும் தான் ஆட்சி செய்கின்றன).
இவர்களை விடுங்கள்.. வேறு யார் சொன்னாலும் வரவேற்பார் தலைவர்.. ஆனால் யார் செய்வார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.
யார் செய்கிறார்களோ இல்லையோ நாளை நமது ஆட்சியில் தலைவர் செய்வார்.. அந்த நம்பிக்கை எனக்கு இருப்பது போல மக்களுக்கும் இருக்கிறது.
எனவே ரஜினி பிஜெபி டாவ் ரஜினி ஆர்.எஸ்.எஸ் டாவ் ரஜினி கர்நாடகா டாவ் என கதறும் கோஸ்டிகள் கதறிக்கொண்டே இருக்கட்டும்.
நமக்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது.. தேர்தல் வெகு தூரத்தில் இல்லை.
அதன் பிறகு, நம்ம தலைவரின் தர்பாரும் வெகுதூரத்தில் இல்லை.. நான் சினிமாவ சொன்னேன் :-) .
- ஜெயசீலன்
|