என் 41ஆண்டு கால மன்ற அனுபவத்தில் தென்சென்னை(கிழக்கு) மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஆல்பர்ட் திரையரங்கில் நடைபெற்ற மக்கள் தலைவரின் பேட்ட 50 வது நாள் வெற்றி திருவிழா கொண்டாட்டம் போல் இதுவரை கண்டதில்லை... அழைப்பிதழ் தொடங்கி அனைத்தும் பிரம்மாண்டம் விழாவில் முத்தாய்ப்பாக மக்கள் தலைவரின் அன்பு துணைவியார் அம்மா வை அழைத்து மூன்று பச்சிளம் குழந்தைகளுக்கு மறைந்த இராணுவ வீரர்கள் பெயர் சூட்டி தங்க சங்கிலி தங்க மோதிரம் அம்மாவின் பொற்கரங்களால் அணிவித்து தேச பக்தியையும் நம் அம்மாவின் குழந்தைகள் காப்போம் திட்டத்தை வெளிப்படுத்திய விதம் அருமை!.. அவ்வளவு கூட்டத்திலும் வருகை தந்த மாவட்ட செயலாளர்களை அன்புடன் வரவேற்று உபசரித்தது மிக அருமை!.. படம் தொடங்கி முடியும் வரை அம்மா கார்த்திக் சுப்புராஜ் அனிருத் ரசிகர்களுடன் சேர்ந்து அமர்ந்து படம் பார்த்து ரசித்தது மகிழ்ச்சி இத்துனை ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்த மாவட்ட செயலாளர் சினோரா அசோக் மற்றும் நிர்வாகிகளுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் பல!...
- ரசிகன்
|