ராணி வார இதழில் "ரியல் சூப்பர் ஸ்டார் தல" என ஒரு செய்தி வெளியிட்டதை தொடர்ந்து நடிகர் அஜித்தின் ரசிகர்கள், #ரியல்சூப்பர்ஸ்டார்தல என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.
வாழ்த்துக்கள் அஜித் ரசிகர்களே !!! உங்கள் ட்விட்டர் அக்கௌன்ட், உங்கள் டேக். நீங்கள் எது வேண்டுமானாலும் போடலாம். உங்களுக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தின் மீது தான் அத்தனை ஆசை என்றால் தாராளமாக உங்கள் ஆதர்ச நாயகனை அந்த பட்டதோடு அழைக்கலாம்.
ஆனால், சூப்பர் ஸ்டார் என்றல் ஒரு பட்டம். அதை வைத்து இருப்பவர் தான் முதல் இடத்தில இருப்பவர் என்று நீங்கள் நினைப்பதே தவறு.
ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை தாணு அவர்கள் அளித்ததுடன் அவர் ஏதோ டிகிரி முடித்ததை போல முதல் இடத்தில அமர்ந்து விடவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ரஜினிக்கு குப்பன் சுப்பன் என ஒரு டைட்டில் கொடுத்து இருந்தாலும் அடுத்த குப்பன் சுப்பன் யார் என இந்த அரை நூற்றாண்டுக்கு விவாதம் நடந்து இருக்கும் . காரணம் அந்த பட்டம் இல்லை. அந்த பட்டத்தை தாங்கும் நபர்.
சரி ரஜினி என்ன அப்படி கிழித்து விட்டார்? சரி அவர் படம் கோடி கோடியாக வசூலிக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் ஜஸ்ட் லைக் தட் அஜித்தும் விஜய்யும் 100 கோடியெல்லாம் வசூல் செய்கிறார்களே? சில ஏரியாக்களில் ரஜினியின் வசூலை முந்தியதாக புள்ளி விவரங்கள் கூறினாலும் முதல் இடம் எனும் ஸ்தானத்தை மக்கள் மடதியில் எப்படி இழக்காமல் இருக்கிறார்? (சூப்பர் ஸ்டார் என்பது பட்டம், முதல் இடம் என்பது அந்தஸ்து)
அந்த அந்தஸ்து மட்டுமின்றி ரஜினி ஏன் இந்த அளவுக்கு கொண்டாடப்படுகிறார் என்பதை அறிந்துக்கொண்டு ட்விட்டர் டேக் போடுங்கள்...
ஒரு தயாரிப்பாளருக்கு அதிக வசூல் கொடுத்து விட்டதால் தான் ஒரு நடிகர் முதல் இடத்தை பிடிக்கிறார், அதனால் தான் அவர் கொண்டாடப்படுகிறார் என்பதே ஒரு தவறான புரிதல்.
இங்கே பல நடிகர்கள் தயாரிப்பாருக்கு லாபம் கொடுப்பவர்கள்தான். ஆனால் ரஜினி என்று வரும்போது நிலைமையே வேறு.
படத்தின் வசூல் என்பது திரையரங்கம் விற்கும் டிக்கெட் அடிப்படையில்தான் கணக்கிடப்படும். ஆனால் திரையரங்கம் வெறும் டிக்கெட் கிழிப்பதை வைத்து மட்டும் வருவாய் ஈட்டுவதில்லை. அவர்கள் நடத்தும் கேன்டீன், பைக் பார்க்கிங் என இந்த எக்ஸ்ட்ரா வசூலும் அவர்களுக்கு முக்கியம். இது தயாரிப்பாளருக்கு செல்லாது. இது போல ஆட்டோ, ரிக்ஷா, தள்ளு வண்டி, சிற்றுண்டி , நடைபாதை வியாபாரி என அனைத்து தரப்பினரும் அவரது பட வெளியீட்டின் போது லாபம் அடைந்தனர்.
ஓப்பனிங் கிங் என அஜித் சொல்லப்பட்டாலும், அவரிடம் உள்ள பெரும் பிரச்சனை ஓப்பனிங் மட்டும் தான். படத்தின் வீரியத்தை தீர்மானிக்கும் இரண்டாம் திங்கட்கிழமை அவரது படம் வெறிச்சோடும் என்பது பொதுவான கருத்து. இங்கே தான் ரஜினி கிங்காக உள்ளார்.
அஜித் படங்களுக்கு சிங்கள் டிக்கெட்ஸ் அதிகமாக விற்பனை ஆகும். கூட்டமாக வருவதும் இளைஞர்கள் தான். நான் உட்பட பெரும்பாலான இளைஞர்கள் திரையரங்க கேன்டீனை நிராகரிப்பது நிதர்சனம். ஆனால் ரஜினியின் பலமே பேமிலி ஆடியன்ஸ் தான். சிங்கள் டிக்கெட் விற்பனை மிக மிக சொற்பம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கவரப்படுவர்.
அப்படி பார்த்தால் விஜய்க்கும் பேமிலி ஆடியன்ஸ் உள்ளது. ஆனால் ஏன் அவர் அந்த முதல் இடத்திற்கு வரவில்லை ?
மீண்டும் திரையரங்க வசூல் என்ற குறுகிய எண்ணமே அதற்கு காரணம்.
ஒரு ரஜினி படம் வெளி வருகிறது என்றால் அதனால் பயனடையாத வியாபாரிகளே இல்லை என சொல்லலாம்.
அந்த காலத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் மற்றும் கழிவறைக்கு காண்ட்ராக்ட் உண்டு. ரஜினி படம் என்றால் அந்த சைக்கிள் காண்ட்ராக்டர் கூட லாபம் பார்த்து விடுவார் என்பது பொது பேச்சு.
அதிகாலை ஷோ எனும் கலாச்சாரத்தை ஆரம்பித்தது ரஜினி !! காலையில் படம் பார்க்க வருபவர்கள் காபி/டீயை கண்டிப்பாக அருந்துவார்கள். ஷோ முடிந்த பின்பு உணவு. (ஒரு சாதாரண டீ வியாபாரி முதல் ஓட்டல் வரை லாபம்)
பூ தூவி ஆரவாரம் செய்யும் சம்பிரதாயம் ஆரமித்ததும் ரஜினி !! (எனது தந்தை எம்.ஜி.ஆர் காலத்தில் கலர் பேப்பர் தூவி மகிழ்ந்தவர்) . ஒரு சாதாரண பூ வியாபாரிக்கு பண்டிகை தினத்தன்று கிடைக்கும் லாபம் !!
கட் அவுட் அமைக்கும் பணியில் சாதாரண கூலி தொழிலாளிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு வாரம் முழுக்க வேலை.
இப்படி ரஜினியின் படத்தால் மறைமுகமாக பயன் பெற்ற அனைவரும் இது ரஜினியால் தனக்கு கிடைத்த வருவாயாகவே கருதினர். அது ரஜினியின் மேல் ஒரு சாதாரண ஈர்ப்புக்கும் மேலான மரியாதையை கொண்டு வந்தது. ரஜினி படம் வதால் நமக்கு பொழப்பு இருக்கும் என்ற நம்பிக்கையை விதைத்தது.
அருணாச்சலம் படத்திற்கும் படையப்பாவிற்கும் இடையிலான அந்த இரண்டு வருட இடைவெளியில் ரஜினியின் படம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது என்பதை உணர செய்தது.
அதெல்லாம் தெரியாமல் லைக்ஸ் வாங்கினால் சூப்பர் ஸ்டார், சர்வே எடுத்தால் சூப்பர் ஸ்டார் என பட்டத்தின் பின்னாடி அலைந்தால் கடைசி வரை முக்கினாலும் முடியாது.
கடைக்கோடி மக்கள் வரை பயன் பெரும் வகையில் தனது மார்க்கெட்டை விரிவு படுத்தியது தான் ரஜினியின் ராஜ தந்திரம்.
ரஜினியால் மட்டும் அந்த பட்டம் வலிமை பெறவில்லை. ரஜினி ரசிகர்களால் மட்டும் அந்த ஸ்தானம் வழங்கப்படவில்லை. இது மக்கள் அளித்த முதல் இடம். இது அந்த ஆண்டவன் நினைத்தாலும்......
ஹஹ் ஹஹ் ஹாஹ் போடா அந்த ஆண்டவனே நம்ப பக்கம் இருக்கார் !!!
- விக்னேஷ் செல்வராஜ்
|