சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படம் வெளியான 4 நாட்களுக்குள் 128 கோடியைக் குவித்து கம்பீரமாக ஓடிக் கொண்டுள்ளது. போகிப் பண்டிகை நாளான இன்று பேட்ட படத்துக்கு எங்குமே டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது. போட்டிப் படம் என்று சொல்லப்படும் அஜித்தின் விஸ்வாசம் படத்துக்கான காட்சிகள், போதிய கூட்டம் இல்லாததால் பல அரங்குகளில் தூக்கப்பட்டு அங்கெல்லாம் பேட்ட திரையிடப்பட்டுள்ளது.
உண்மையில் பொங்கல் பண்டிகை இன்றுதான் தொடங்குகிறது. ஆனால் அதற்கு நான்கு நாட்கள் முன்பே பேட்ட வெளியானது. அந்தப் படத்துடன் போட்டிபோட்டு வெளியான விஸ்வாசம். வெளியான முதல் இரு தினங்களில், அந்தப் படம் பேட்ட படத்தை முந்திவிட்டதாகவும, வசூலில் ரஜினியின் 27 ஆண்டு கால சாதனையை முறியடித்துவிட்டதாகவும் செய்திகளைப் பரப்பினர் சமூக வலைத் தளங்களில். இப்படி தகவலைப் பரப்ப ட்விட்டரில் ட்ராக்கர்கள் என்று செயல்படும் சிலருக்கு தலைக்கு ரூ 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை தரப்பட்டதாக தகவல் வெளியானது. திரையுலகினர், தியேட்டர் உரிமையாளர்கள் இடையில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சில திரையரங்கு உரிமையாளர்கள், விஸ்வாசம் படத்துக்கு கூட்டம் இல்லாவிட்டாலும் காட்சிகளைக் குறைக்கக் கூடாது என அதன் விநியோகஸ்தர் நிர்ப்பந்தம் செய்வதாக வாக்குமூலம் அளித்தனர்.
பேட்டயை விட குறைவான அரங்குகளில் வெளியானது விஸ்வாசம். பேட்டயை விட குறைவான காட்சிகளே அந்தப் படம் ஓடியது. அப்படி இருக்க பாக்ஸ் ஆபீசில் எப்படி இந்தப் படம் ரஜினியின் சாதனையை முந்தியதாகக் கூறுகிறீர்கள் என திரையரங்க உரிமையாளர்களே கேள்வி எழுப்பினர்.
விஸ்வாசம் படத்தை உயர்த்திக் காட்ட நடந்த தில்லுமுல்லுகள் கடந்த இரு தினங்களாக வெளியானதால், நடுநிலையான மீடியாக்கள் அதிர்ச்சியடைந்ததோடு, உண்மை நிலவரத்தை வெளியிட ஆரம்பித்துள்ளன.
இன்று பேட்ட படம் வெளியான 5ம் நாள். போகிப் பண்டிகை. ரஜினியின் பேட்ட படம் 700-க்கும் அதிகமான அரங்குகளில் முழுக்க அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டுள்ளது. புக்மைஷோவில் மட்டும் நான்காம் நாள் இறுதியில் ரூ 20 கோடியை வசூலித்திருந்தது பேட்ட. ஆனால் விஸ்வாசம் படம் ரூ 9.11 கோடியை மட்டுமே வசூலித்திருந்தது.
உலகெங்கும் நான்கு நாட்களில் ரூ 128 கோடியை பேட்ட படம் குவித்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கிறது. தமிழகத்தில் மட்டும் ரூ 67 கோடியை பேட்ட தாண்டியுள்ளது. விஸ்வாசம் படம் ரூ 49 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
– வணக்கம் இந்தியா (https://vanakamindia.com)
|