கடந்த சில நாட்களாக "I Love Actor Rajini, But not Politician Rajini" என்ற தொனியில் மீம்ஸ் மற்றும் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.
நடிகராக பார்க்கும் போது ரஜினி என்றுமே "தலைவர் " தான். ஆனால் அரசியல் என்று வரும் போது அவரை தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிலர் கூறுகின்றனர்.
சரியாக சொல்லவேண்டும் என்றல் 2.0 ரிலீஸுக்கு பிறகு இந்த சத்தம் அதிகமாக கேட்கிறது. கபாலி, காலா என எந்த ஒரு உச்ச நடிகரும் நடிக்கத் தயங்கும் கதை / கதாபாத்திரத்தில் நடித்த பின்னர், அவருக்கு மாஸ் எலிமண்ட்ஸ் குறைந்து விட்டது ; அப்படியே திவால் ஆகி விடுவார் என எண்ணி விட்டார்கள் போல.
இப்போது 2.0 வில் அந்த மாஸ், கூடவே பேட்ட படத்தின் பாடல், டீசெர் என அத்தனையிலும் "ஒரிஜினல்" ரஜினியை பார்த்த உடன் அவர்களுக்குள் இருந்த அந்த "ரஜினி ரசிகன்" வெளியே வந்துவிட்டான்.
இத்தனை நாள் வன்மத்தோடும் வெறியோடும் பழித்த அந்த வாய், ரசிகர்களின் மகிழ்ச்சி வெள்ளத்தில் விசில் அடிக்க துடிக்கிறது. ஆனால் "இவ்வளவு நாள் இந்த வாய் தானே ரஜினியை மட்டம்தட்டுச்சி ?" என எவனாவது கேட்டு விட்டால் ?
எடுத்தார்கள் ஒரு புது கான்செப்டை !!! Actor ரஜினி / Politician ரஜினி என ஒரு புது தியரி பிறந்தது !!
இவர்களது Concept சத்தியமாக புரியவில்லை.
ஏன் Politician ரஜினியை பிடிக்கவில்லை ?
ஊழல் செய்தாரா ? தமிழகத்தில் ஆபத்தான திட்டம் செயல்படுத்தினாரா ? திருடி சொத்து சேர்த்தாரா ?
பிறகு ஏன் எதிர்க்க வேண்டும் ? சிலரிடம் வெளிப்படையாகவே கேட்டு விட்டேன்.
அதற்கு அவர்கள் சொன்ன பதில் : "ரஜினி நல்லவரு, அதனால அரசியலுக்கு வர கூடாது "
இப்படி வித்யாசமான கதறல் சத்தம் நம்மூரில் மட்டும் தான் கேட்கும்.
அதாவது ஒருவரை தலைவராக ஏற்றுக்கொள்வதில் இவர்களுக்கு என்று சில "Basic Qualifications" ஐ வகுத்து வைத்து உள்ளார்கள்.
உதாரணமாக பாக்ஸிங் செய்து பிரியாணி திருடுவது, ஒரு பெண்ணை தாக்கியதற்கு தற்காலிகமாக நீக்கி விட்டு மீண்டும் கட்சியில் சேர்ப்பது, ஊழல்வாதி என்று கூறி விட்டு தமது கட்சியில்சேர்ந்தவுடன் உலக மகா உத்தமன் என Certificate கொடுப்பது போன்ற செயலில் ஈடுபட்டால் அந்த இயக்கத்தை ஆதரிப்பதில் தவறில்லை.
மாறாக தனது ஆஸ்தான ஹீரோ நடித்த படம் வெளி வந்தாலும், காஜா புயல் நிவாரண பணியில் டுபடுவது, அரசு பள்ளிகளை புரனமைப்பது, வட சென்னையில் காவல் நிலையம் கட்டி கொடுப்பது போன்ற செயலை செய்யும் இயக்கம் அரசியலுக்கு லாயக்கு இல்லை.
அருமையான சித்தாந்தம் !!
சரி இவ்வளவு அக்கறையாக பேசுகிறார்களே, இவர்களுக்கு Actor ரஜினி உண்மையில் பிடிக்குமா என அவர்களது டைம் லைனில் பின்னோக்கி சென்றால், கமலின் நடிப்புக்கு முன்னால் ரஜினி ஒன்றும் இல்லை என கதறி இருக்கிறார்கள்.
சரி நடிப்போடு விட்டார்களா என்றால் அதுவும் இல்லை. அந்த பிரச்சனைக்கு குரல் கொடுக்கல , இந்த பிரச்சனைக்கு காசு கொடுக்கல, எங்கள் கட்சி தலைவர் மக்களை வெள்ளம் வந்த போது சந்தித்தார், உங்க தலைவர் கொடுத்த காசு பத்தலை என ஒரு அரசியல்வாதியிடம் கேட்க வேண்டிய கேள்வியை "Actor" ரஜினியிடம் கேட்டு வைத்துள்ளனர்.
நல்லா இருக்குங்கடா உங்க நடுநிலை தனம் !!!
ஆக, உங்களுக்கு Actor ரஜினியோ Politiician ரஜினியோ பிரச்சனை இல்லை. "ரஜினி" என்றாலே பிரச்சனை ; வயித்தெரிச்சல்.
அது என்ன ரஜினியின் சொந்த பணமா ; தமிழக மக்கள் கொடுத்தது அல்லவா? தமிழக மக்கள் போட்ட பிச்சையில் ரஜினி வாழ்கிறார்... இது இன்னொரு போராளி குரூப்ஸ் இன் கதறல்.
உங்கள் தெருவில் இருக்கும் மளிகை கடைக்காரரிடம் சென்று, நான் பொருள் வாங்குவதால் தான் உனக்கு வியாபாரம் நடக்கிறது, ஒரு கிலோ சக்கரை கொடு என்று சொன்னால் எப்படி இருக்கும் ?
ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் நான் சவாரி செய்வதால் தான் உனக்கு பிழைப்பு ஓடுகிறது. அது நான் போட்ட பிச்சை என்று சொன்னால் சரியா ?
சினிமா ஒரு வியாபாரம். மேல சொன்ன வியாபாரங்களை போல Customer களை நம்பி ஓடும் தொழில். நீ கொடுத்த காசுக்கு 3 மணி நேரம் படம் காட்டினார்கள். பணத்தை வாங்கி கொண்டு ஓடிவிடவில்லை .
சரி இதெல்லாம் சொன்னால் புரிந்து கொள்வார்கள் என பார்த்தால், அவர் நல்லவர், அதனால் அரசியல் சரி பட்டு வராது என ஒரு புது கண்டுபிடிப்பு.
இவர்கள் டைம் லைனை ஆராய்ந்தால், We miss you Captain என விஜயகாந்த் அவர்கள் தோற்றதற்கு வருத்தம் தெரிவிக்கிறார்கள். விஜயகாந்த் ஒரு நல்லவர் என்பதை இவ்வளவு லேட்டாக உணர்ந்த இந்த கூட்டம், அவரை இழந்து விட்டோம் என வருந்தும் கூட்டம், இன்று ஒருவர் நல்லவர் என்பதாலே அரசியல் வேண்டாம் என தடுக்கிறது.
இன்னும் ஒரு கோஷ்டி சினிமா நடிகன் பின்னல் செல்லும் மூடர் கூடம் என விமர்சனம். "Actor" / "Politiian" என வித்தியாச கோணத்தில் பார்ப்பதால் அவர்கள் அதி மேதாவிகள் என நினைப்பு.
ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள், சினிமா மோகத்தில் நாங்கள் அவரை பின் தொடரவில்லை. அவர் எங்களுக்கு வழிகாட்டி.
தினமும் செய்தி வாசிக்கும் நீங்கள், ரஜினி ரசிகரால் பிரச்சனை என்று இந்த 40 ஆண்டு காலத்தில் படித்தது உண்டா ? குற்ற செயலில் ஈடுபட்ட ரஜினி ரசிகர் / மன்ற நிர்வாகி கைது போன்ற செய்தியை கேட்டதுண்டா ?
அவர் என்றுமே எங்களை தவறான பாதையில் கொண்டு சென்றதில்லை. அரசியல் வெற்றிக்காக மாணவர்களை சீரழிக்கும் கட்சிகளுக்கு மத்தியில், நானே தோற்றாலும் பரவாயில்லை, மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என கூறும் தலைவனை பெற்று இருக்கிறோம்.
இது தான் ரஜினியின் தலைமை. பெருமையாக சொல்வேன் எனக்கு "Actor" ரஜினியை விட "Politician" ரஜினி தான் வழிகாட்டி !!
- விக்னேஷ் செல்வராஜ்
|