Related Articles
Happy RAJINIKANTH to Birthday
தமிழ் ரசிகர்களை ஜெர்க்காக்கிய தெலுங்கு ரசிகர்கள்!
2.0 : சரித்திரம் திருத்தி எழுதப்பட்டது
Thalaivar's exclusive interview to India Today
டியர் ஹேட்டர்ஸ்.....Mehhh
2.0 விமர்சனம் - முரட்டு சிட்டி
பிற நடிகர்கள் படங்களை ரஜினியின் படங்களுடன் ஒப்பிட முடியாது - அயர்லாந்து சினிமா விநியோகஸ்தர்
Superstar on 2.0 : The film will be pride of Indian cinema
2.O விற்கு ப்ரோமோஷன் இல்லையா?
கஜா புயல் - 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் - களப்பணியில் ரஜினி மக்கள் மன்றம்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
(Friday, 14th December 2018)

சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட படத்தின் பாடல்கள் இன்று மாலை வெளியாக இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள பேட்ட படத்தின் ஆறு பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் கொண்ட  ஆடியோ அனத்தும் இன்று மாலை 6.30 வெளியாகவுள்ளது. இந்த இசை வெளியீடு நிகழ்ச்சியை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடத்த அனைத்து ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், இயக்குநர் சுப்புராஜ், நடிகர் ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் கலாநிதி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உட்பட படக் குழுவினர் அனைவரும் கலந்துக் கொள்ள இருக்கின்றனர். இந்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு :

முதலில் கஜ புயலால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்கு அனுதாபங்கள். அதற்கு என் மூலமாகவோ, ரஜினி மக்கள் மன்றம் சார்பாகவோ, இப்போது சாய் ராம் கல்லூரி உதவி தொகை கொடுத்திருக்கிறார்கள். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்புஅனைவரும் சேர்ந்தால் தான் புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க முடியும்

அடுத்ததாக 2.0 படம். இயக்குநர் ஷங்கர் உருவாக்கிய இந்த படம் நிறைய சவாலை சந்தித்தது. இதற்கு முன்னால் இருந்த நிறுவனம் படம் தாமதம் ஆவதால் பணத்தை திரும்ப தருமாறு குண்டு தூக்கி போட்டார்கள். அப்போது இதற்கு பிள்ளையார் சுழி போட்டது கலாநிதி சார் தான். இழப்பு தொகையும் கொடுத்து, சங்கர்ரஜினி இருக்கிறார்கள் அதனால் எனக்கு நம்பிக்கை இருக்கு. எப்போது ரோபோ 2 பண்ணாலும் சன் பிக்சர்ஸ் பண்ணும் என்று சொன்னார்.

இரண்டு வருடத்திற்கு பிறகு ஒரு கதை கார்த்திக் சுப்புராஜ் சொல்லியிருந்தார். அப்போது அந்த கதையை மீண்டும் சொல்லும்படி கேட்டேன். முதல் தடவையை விட இரண்டாம் முறை பிரமாதமாக சொன்னார். இதே கதையை கலாநிதி சாரிடம் சொல்ல சொன்னேன். கதை ஓகே ஆனது.

படத்தின் ஷூட்டிங் வட நாட்டில் நடந்தது. பிறகு படத்தின் பிற கேரக்டர்கள் செலக்ட் செய்ய வேண்டும். வில்லன் கேடக்டருக்கு விஜய் சேதுபதி ஒகேவா என்று கேட்டார் சுப்புராஜ். நானும் அவர் நடிக்க ஒற்றுக் கொள்வாரா என்று கேட்டேன். மறுநாள் ஒப்புக்கொண்டார் எனக்கு சந்தோஷம்

விஜய் சேதுபதி படமெல்லாம் பார்த்திருக்கிறேன். நல்ல நடிப்பார் என்பது தெரியும். ஆனால் அவருடன் பழகிய பிறகு தான் தெரியும், அவர் சாதாரண நடிகர் இல்லை மகா நடிகர். ஒவ்வொரு ஷாட்டும் பிரமாதமாக கவனித்து நடிப்பார். நடிப்பு மட்டுமல்ல நிஜத்திலும் நல்ல மனிதர். நல்ல சிந்தனைகள் உடையவர்.

அடுத்ததாக படத்தில் ஒரு ஃப்லேஷ்பேக் கதை வேறு இருக்கிறது. அப்போ அந்த கேரக்டர் யார் என்று யோசிக்கும்போது தான் த்ரிஷா பற்றி கூறினார்கள். எப்படி செட் ஆகுமா என்று யோசித்தபோது, நிச்சயமாக சரியாக இருக்கும் என்று கார்த்தி கூறினார். அதற்கு ஏற்றார் போல் த்ரிஷா ஆர்வத்துடன் நடிக்க தயாராக இருந்தார்.

மற்றொரு கேரக்டர் இருக்கே யார் என்று அதற்கும் உட்கார்ந்து யோசித்தோம். சிம்ரன் என்று சொன்ன உடன் எல்லாருக்கும் ஒகே ஆனது. அருமையான நடிகை. அதே போல் சசிகுமார் நான் இதுவரை சந்தித்த நல்ல மனிதர்களில் ஒருவர்.

அனிருத் சிறு வயதில் இருந்தே இசையில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தவர். அடுத்த .ஆர். ரகுமான் அவர் தான் என்று தனுஷ் சொல்லிட்டே இருப்பார். அந்த அளவுக்கு துள்ளல் கொண்டவர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு குழந்தையை ரசிப்பது போல எனக்கு மேக் அப் போட்டு நடிக்க வைத்து அழகு பார்த்தார்.

இது அருமையான படம், என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்த கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ரசிகர்கள் அனைவரும் நன்றி.” என பாடல் போலவே மரண மாஸ் பேச்சும் கொடுத்தார்.

பேட்ட படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மேடையில் பேச்சு. “எனக்கு சினிமா என்றாலே பெரிய இன்ஸ்பிரேஷன் தலைவர் தான். என் படத்தை பார்த்து என்றாவது பாராட்ட மாட்டாரா என்று பல நாள் நினைத்திருக்கிறேன். அப்போது ஒரு நாள் எனக்கு ஒரு போன் வந்தது. பீட்சா படம் வெளியாகி இருந்த நேரம் அது. அந்த படத்தை பார்த்துட்டு என்னை பாராட்டினார்.

பின்பு ஒரு நாள் அவரிடம் கதை சொல்ல காத்திருந்தேன். அந்த தருணமும் நிறைவேறியது. இப்படி தான் பேட்ட படம் நிஜமானது. நான் வேறு எதாவது படம் பண்ணியிருந்தாலும், ஆஸ்கர் விருதே வாங்கியிருந்தாலும் என் வாழ்க்கை நிறைவாக இருந்திருக்காது. இப்போது தான் சந்தோஷமாக இருக்கு.” என்றார் “எல்லாரும் சொன்னது போலவே நானும் சூப்பர் ஸ்டார் ஃபேன். இது ரஜினி சாருக்கு 165 படம். ஆனாலும் அவரிடம் தான் ஒழுக்கம் கற்றுக்கொள்ள வேண்டும். காலை 6 மணிகெல்லாம் ஷூட்டிங் வருவார். இவ்வளவு பெரிய படத்தில் அவருடன் நடிக்க எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி கார்த்திக் சுப்புராஜ்” என்றார்.

 “இந்த படம் எனக்கு ஒரு பரிசு. என் பிறந்தநாளன்று இந்த படத்தின் வாய்ப்பு எனக்கு வந்தது. நான் சின்ன வயதில் இருந்தே சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலுக்கு ரசிகர். இந்த படத்தில் அவருடன் நடித்தது மகிழ்ச்சி.” என சிம்ரன் தெரிவித்தார்.

 “ரஜினி சாருடன் இணைந்து நடிப்பது காணாத கனவு ஒன்று நிறைவேறுவது போல் உள்ளது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் முதலில் நான் சந்தித்தது ஒரு குறும்படத்தில் நடிக்கப்பதற்கு தான். இப்போது அவர் சூப்பர் ஸ்டார் இயக்குநர் என்பது பெருமையாக இருக்கு. நாம் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை மாஸ் என்று சொல்லி பார்த்திருப்போம்… மாஸாக, க்யூட்டா, கெத்தா, ஸ்டைலா அது தான் பேட்ட” என்று பேசினார் விஜய் சேதுபதி.

 

 

 

 

 

 

 






 
0 Comment(s)Views: 473

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information