கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில், 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கஜா புயல் பாதிக்கப்பட்ட நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில், ரஜினி மக்கள் மன்றத்தினர் நிவாரண உதவிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் உதவிட வேண்டும் என, நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில், முதற்கட்டமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி , மதுரையிலிருந்து நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு வந்தடைந்துள்ளது. நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில், ரஜினி மக்கள் மன்றத்தினர், உணவு மற்றும் அத்தியவாசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். இது தவிர்த்து பிற மாவட்டங்களில் இருந்து 2 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய் வரையிலான நிவாரண பொருட்களை அனுப்ப ரஜினி மக்கள் மன்றத்தினர், முடிவு செய்துள்ளனர்.
|