Related Articles
Zee தமிழில் தலைவரின் இன்றைய பேட்டி
தலைவர் தான் அந்த Trend Setter !!
லேட்டாக வந்தாலும் கரெக்ட்டா அடிக்கணும்.. 2.O விழாவில் தலைவர் வைத்த பன்ச்!
தலைவர் சந்திப்பு - என் நிலை உணர்ந்து அணைத்துக் கொண்டார்
‘காலா 100 வது நாள் கறி விருந்து…’ அசத்திய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்!
ரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்!
Kerala flood relief fund distribution by Rajinifans.com
பத்திரிக்கை விற்பனை மந்தமா இருக்கு . . ரஜினியை பத்தி எழுதுனாநெறைய பேரு படிப்பாங்க
முதல்வர் கனவு – சுடலை எனும் மு.க.ஸ்டாலினினுக்கு கானல் நீரான கதை…
Actress Malavika Mohanan thrilled to work with Thalaivar Rajinikanth in Petta
Exercise caution in matters of religion: Rajinikanth on Sabarimala issues
Rajinikanth's 2.0 Songs Raajali And Endhira Logathu Sundariye Released
Vetri Maaran says his film with Superstar Rajinikanth will not happen
Fortunate to work with Thalaivar Rajinikanth in Petta - Nawazuddin Siddiqui
Superstar Rajinikanth visits Kashi Vishwanath Temple in Varanasi
குமுதம் : இப்போ ஹேப்பியா..?
யுத்தத்திற்கு வியூகம் தான் முக்கியம் !!!
ரஜினி தாமதிக்கிறாரா...?
அப்பொழுதுதான் எனக்கு முதன் முதலாக ரஜினி ரசிகனாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது . . .
அரசியலுக்கு ரஜினி ஏன் தேவை? (பாகம் 5)

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2013 2003
2012 2002
2011 2001

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
அட இதெல்லாம் என்னங்க ஸ்டைல்... சும்மா இருங்க - தலைவர்
(Tuesday, 6th November 2018)

நான்கு ஆண்டு கால இடைவேளை!! ஒரு ஒலிம்பிக், ஒரு உலகக்கோப்பை போல ஒரு இடைவேளை !!

2010 இல் எந்திரனுக்காக ; 2014 இல் கோச்சடையானுக்காக ; பிறகு இப்பொழுது. ஆனால் முந்தைய இரு பேட்டிகளை விடவும் இதில் முற்றிலும் மாறுபட்ட தலைவர் !!

என்ன ஒரு புத்துணர்ச்சி !! பேச்சில் என்ன ஒரு வேகம் !! ஒரு வரி பேசுவதற்குள் கை விரல்களில் மட்டும் ஆயிரம் அசைவுகள் !! வாரே வா!! என்ன ஒரு ஸ்டைல் !!

ஒன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை. இதில் தொகுப்பாளினி அர்ச்சனா அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். ஒரு வெறித்தனமான, தனது தலைவனை தெய்வமாகப் பார்க்கும் ரசிகனின் அதே மனநிலையில் அவரது கேள்வியும் அதைக் கேட்கும் விதமும் அமைந்து இருந்தது.

பல இடங்களில் தலைவரே வெட்கப்படும் அளவிற்குத் தனக்குள் இருந்த அந்த ரசிகையை வெளிக்கொண்டு வந்திருந்தார்.

ஸ்பெஷல் தேங்க்ஸ் அர்ச்சனா மேடம் !! எங்களது தலைவரை இவ்வளவு சந்தோசமாக, தேஜசுடன் அந்த ஆத்மார்த்தமான சிரிப்புடன் எங்களுக்குக் காட்டியதற்குக் கோடி நன்றிகள் !!

இந்தப் பேட்டி தலைவரின் பேட்டிகளில் எப்போதுமே தனித்துத் தெரியும். 

சமீபத்திய காலங்களில் வாரம் இரு முறை தொலைகாட்சியில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தவர்கள் எல்லாம் கிடைத்த கேப்பில் தன்னைப் பற்றிய சுய புராணத்தை மட்டுமே பாடிக்கொண்டிருந்த சமயத்தில் , நான்கு ஆண்டுகள் கழித்துப் பேட்டி கொடுத்தாலும் பிறரை பாராட்டுவதையே பிரதானமாகக் கொண்டு இருந்த தலைவரின் பதில்கள் நெகிழ்ச்சியை உண்டாக்கியது.

ஒன்றரை மணி நேர பேட்டியில் தலைவரை சார்ந்து கேள்வி எழுப்பப்பட்ட போதும் கூட அதற்கு மற்றவர்களையே பாராட்டினார் தலைவர்.

உதாரணமாக என்னுடைய வெற்றிக்குக் காரணம் என்னுடைய டைரக்டர்ஸ், சினிமா யூனிட், தன்னடக்கமாக நான் எம்.ஜி.ஆர் காலத்தில் நடிக்கவில்லை, தன்னிலை உணர்ந்தவராகக் கடவுளின் அருள் என்று கூறியது நினைவிருக்கலாம்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக “அட இதெல்லாம் என்னங்க ஸ்டைல்... சும்மா இருங்க” என்று அவர் கூறியது அவர் மீது இருந்த பிரம்மிப்பை இரு மடங்கு ஆக்கியது.

ஒரு பெண் தன்னை ஒரு பிச்சைக்காரன் என்று எண்ணும் அளவிற்கு எளிமையாய் இருக்கும் அவர், அதே எளிமை பற்றிய மற்றொரு கேள்விக்கு “வாழுறது போயஸ் கார்டன், போவது B.M.W கார், இதுல என்ன சிம்ப்ளிசிட்டி” என கேட்டு அசரடிக்கிறார்.

தன்னையன்றி வேறொருவனைத் "தலைவா!" என்று ஒருவர் அழைத்தார் என்று கூற எவருக்கு மனம் வரும் !! 

பெயர் புகழ் ஏதும் நிலையானதல்ல !! எல்லாம் மாயா என்று அவர் கூறுவது பலருக்கு ஒரு தந்தையின் அறிவுரை போல மனதிற்கு நெருக்கமாக அமைந்தது என்பதில் சந்தேகமே இல்லை.

பிடித்த பாடல் “போனால் போகட்டும் போடா”, ‘கனவில் இருக்கும் சந்தோஷம் நிஜத்தில் இருப்பதில்லை’ எனக் கூறிவிட்டு ‘கல்யாணம் உட்பட’ எனச் சொல்லி அந்த டிரேட் மார்க் சிரிப்பெல்லாம் Typical Thalaivar Touch !! அந்தச் சிரிப்பிற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் நான் அந்தப் பேட்டியை பார்ப்பேன்.

தங்களுடைய ஈர்ப்பு சக்திக்குக் காரணம் என்ன என்று கேட்ட போது ஆண்டவனைக் கை காட்டி, நான் என்  கடமையைச் செய்தேன் ; பலனை அவர் வழங்குகிறார் எனச் சொல்லாமல் சொல்லி விட்டார்.

ஆனால், பொதுவாகப் பிரபலம் என்றால் அண்ணாந்து பார்க்கும் நமது சமூகத்தில் ‘350 ருபாய் சம்பளம் வாங்கிய எனக்கு 3 லட்சம் சம்பளம் தந்த போது நான் ஒரு தனிப் பிறவியோ என்ற எண்ணம் வந்தது, பின்பு தான் என்னக்கென ஒரு காலம் அது எனப் புரிந்து கொண்டேன்’ என்று பக்குவமாக அவர் பேசியது, அவர் பிரபலம் என்ற ஒரு பிம்பத்தைத் தாண்டி நம் குடும்பத்தில் உள்ள ஒரு சாதாரண மனிதராக அவரைப் பார்க்க வைத்தது... நான் உணர்ந்த வரையில் இந்த ஒரு Attachment தான் தலைவரின் அந்த ஈர்ப்புக்குக் காரணம் !!

ஒன்றரை மணி நேரத்தில் ஒரு சிறு சுய பெருமை இல்லை; போட்டி பொறமை வஞ்சகம் இல்லை; தன்னுடைய சமகாலப் போட்டியாளராக இருந்த கமல்ஹாசன் பற்றிய கேள்விக்கு ‘கமலோடு ஒரே காரில் பயணம் செய்த போது கிள்ளி பார்த்துக்கொண்டேன்’ எனக் குழந்தை போலக் கூறியதெல்லாம் வேற லெவல்.

அது ஒரு தனி மரியாதையைத் தலைவர் மீது கொண்டு வருகிறது.

இதனால் தான் அந்த நிகழ்ச்சியில் S-U-P-E-R S-T-A-R டைட்டில் கார்டு ஒளிபரப்பான போது அரங்கினுள்ளேயே விசில் பறந்தது.

அர்ச்சனா அவர்களின் கேள்வியே சில இடங்களில் வித்யாசமாக இருந்தது ஆனால், தலைவரின் பதிலோ அதற்கும் ஒரு படி மேலே வித்தியாசம் !!

உதாரணமாக 5 ஹீரோயின்களின் பெயரை அவர் சொன்னாலும் , அந்த லிஸ்டில் இல்லாத இருவரின் பெயரை சொன்னதைக் கூறலாம்.

ஆனால் அர்ச்சனா அவர்கள் Option கொடுக்கும் பொழுது தலைவர் கூறிய இருவரின் பெயர் தான் பெரும்பாலான ரசிகர்களின் மனதிலும் ஓடியது. (என் வீட்டில் கண்கூடாகப் பார்த்தேன்).

நிச்சயமாக ரசிகனின் பல்ஸை இந்த அளவுக்கு வேறு எவரால் அறிய முடியும் எனத் தெரியவில்லை. என்ன மாறி கதை வேண்டும் எனக் கேட்ட போது ‘நமக்குக் கிளாஸ்ஸிக் எல்லாம் ஒத்து வராது, மாஸ் தான்’ எனக் கூறியதும் பொருந்தும்.

மொத்தத்தில் நவம்பர் 29 அன்று தீபாவளி கொண்டாட இருந்த நமக்கு, நேற்றே இனிய தீபாவளியாக அமைத்துக்கொடுத்து விட்டார் தலைவர்.

அந்தப் பேட்டிக்கான வாய்ப்பை அமைத்து கொடுத்த 2.0 குழுவிற்கும், Zee தொலைக்காட்சிக்கும், என்றும் இதை நினைவில் நீங்கா வண்ணம் ஒரு தலைவரின் ரசிகையாகத் தொகுத்து வழங்கிய அர்ச்சனா அவர்களுக்கும் அனைத்து தலைவரின் ரசிகர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

-விக்னேஷ் செல்வராஜ்

Thalaivar Full Interview Video


 
2 Comment(s)Views: 9329

pichaikkaaran,chennai
Sunday, 11th November 2018 at 07:10:15

http://www.pichaikaaran.com/2018/11/blog-post_11.html
Saravanan,India
Tuesday, 6th November 2018 at 23:12:05

Open hearted talk from Thalaivar
உண்மையாக இருக்கக் கூடிய ஒருவரால்தான் இப்படி பேச முடியும். அதுவும் உச்சத்தில் இருக்கும்போது.

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information