.jpg) சற்றே தலை குனிந்தவாறு அமர்ந்திருந்த ஒரு பொழுதில்...
சரக்கென ஒரு மின்னல்...
- ஹா!! ராம் என்றவாறு என் அருகில்.... மிகவும் அருகில் தன் முகம் முழுவதும் நிரம்பிய புன்னகையோடு நின்ற அந்த மனிதனைப் பார்த்த நொடியில் தரையில் ஒங்கி அடித்த பந்து வேகமாக எழும்பியதைப் போல எழுந்து நின்றேன்.
சில விநாடிகள் ஒன்றும் புரியாது, கைகளை குவித்து வணக்கம் தெரிவிப்பதா, அம்மனிதனின் கைகளை குலுக்குவதா எனக் குழம்பி என் வயிற்றுக்கும் நெஞ்சிற்கும் இடையில் கைகளை வைத்தவாறு நான் மலங்க மலங்க முழித்தவாறு நின்று கொண்டிருக்க...
என் நிலை உணர்ந்து அணைத்துக் கொண்டார்.
அந்த நொடியில் என் வயது, பொறுப்பு, சூழல் எல்லாம் மறந்து அழத் தொடங்கி விட்டேன். அழுகை என்றால்... கண்கலங்கி, உதடுகள் மட்டும் துடித்தவாறு அல்ல.. "தேம்பி தேம்பி" அழுது விட்டேன்.
ஹேய்! So sweet of you, ரிலாக்ஸ் என்றவாறு என் தோள் தொட்டு அமர வைத்து விட்டு தனது கைகளால் தண்ணீர் பாட்டிலை திறந்து, 2-3 tissue பேப்பர்களை எடுத்து எனக்குத் தந்தார்!
இவ்வுலகில் நான் செய்ய வேண்டிய ஒரே வேலை அழுது தீர்ப்பது என்பது போல கர்ம சிரத்தையாக எனது கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு tissue பேப்பர்களால் எனது கண்களை அழுத்திப் பிடித்தவாறு கொண்டிருந்தேன்.
நான் தலை குனிந்து, கண்கள் மூடி இருந்தாலும்... பரிவோடு என்னை ஒரு ஜோடிக் கண்கள் பார்த்த வண்ணம் இருந்ததை நன்றாகவே உணர்ந்திருந்தேன்.
Sorry சார், அழுதுவிடக் கூடாது என எனக்கு நானே சொல்லிக் கொண்டிருந்தேன்.... but I couldn't control எனச் சொன்னவனிடம்
ஹே... இட்ஸ் ஓக்கே.. ரிலாக்ஸ் என்றார்.
அடுத்த 20 நிமிடங்கள் ... 35 வருடங்களாக மனதில் தேக்கியிருந்ததை பேசினேன்... பேசினேன்.. பேசிக் கொண்டேயிருந்தேன். ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக உள்வாங்கி, தலையை அசைத்து ஆமோதித்து, அக் கேள்விக்கான பதில் அளித்து, எனது கருத்தினைக் கேட்டு, ஊக்கப்படுத்தி, சிறு குழந்தை போல நான் சொன்ன சில விஷயங்களுக்கு உற்சாகமாகி, அதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளும் விதமாக அவரது சந்தோஷத்தினை கேள்வியாக மாற்றி பதில் மூலம் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு, முகத்திற்கு நேராக செய்த சிறு விமர்சனத்தையும் முகம் சுளிக்காது.... ஆமோதித்து ...
எனது மொட்டைத் தலைக்கான காரணம் அறிந்து ஒரு சிரிப்பு, புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர் ... கண்ணாடி இல்லாமல் ஒரு ஃபோட்டோ என்றவனை Sure...sure என மீண்டும் அருகில் நிறுத்தி, என் தோள் மீது கை போட்டு, அதிகப்பிரசங்கித்தனமாக நான் செய்த சில செயல்களை பெருந்தன்மையோடு ஒதுக்கி ...
சொல்லிக் கொண்டே போகலாம்
"தலைவர்" என அவரைச் சொல்வதற்கு மிகவும் தகுதியானவர்தான் மீண்டும் நிரூபித்தார்.
யாரென்றே தெரியாத, முகம் அறியாத ஒருவனின் கருத்தினை முகம் சுளிக்காது கேட்டு, கேட்ட கேள்விகளுக்கு நிதானமாக அதே வேளையில் தீர்க்கமாக பதில் அளித்து விட்டு...

இன்னும் உங்களோடு பேச ஆசை ஆனால் இப்போது பேட்டிக்காக வர இருக்கிறார்கள் என பக்குவமாக விடையளித்து அனுப்பி வைத்தார்.
எனது அழுகைக்கு அம்மனிதரை நேரில் பார்த்த மகிழ்ச்சி மட்டுமே காரணம் இல்லை... கடந்த 2 தினங்களாக வாழ்க்கை எனக்கு அளித்த சந்தோஷ அதிர்ச்சிகள், அதை அனைவரிடமும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முடியாமல் மெதுவான முனுமுனுப்போடு பகிர்ந்து கொண்டதன காரணமாக மனதில் தேங்கியிருந்த அந்த சந்தோஷத் தருணங்கள் நெகிழ்ந்து
..அழுகையாக வெளி வந்துள்ளது
Genuineness, caring, supportive, patience, *listening* (not hearing) skill, observation, clearful answer/ vision, honesty, acceptance, practical... இதுதான் #ரஜினிகாந்த்
100கிமி மராத்தான் ஓட்டம் ஓடி வென்றது போல ஒரு உற்சாகம். இன்னமும்... தலைவர் அருகிலேயே இருப்பது போன்ற உணர்வு.
திரையில் மட்டுமே பார்த்து பிரமித்த, அவரைப் போல காப்பி அடிக்க முயன்று தோற்று... திரையைத் தாண்டியும் என் போன்றவர்களை பாதித்து, அவரைப் பின் தொடரச் செய்ததையெல்லாம் ...அவரை நேரில் சந்தித்ததை போன ஜென்மத்து புண்ணியம் எனச் சொல்லி அடைத்து விடமுடியாது.
என்னளவில் ரஜினி எனும் நடிகர் ஒரு தலைவராக உருவகமெடுத்து... குடும்பத்து அங்கத்தினருள் ஒருவராக மாறியது போன்ற எண்ணமே உள்ளது.
நண்பர்களிடத்தில் சொல்வது...
#Rajinikanth is an addiction; a positive addiction.
- ராம் சுவாமிநாதன்
|