இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார்.
குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ‘குழந்தைகளுக்கான அமைதி’ என்ற பெயரில் நடத்தும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மேரிகோம் அழைக்கப்பட்டிருந்தார்.
குடும்பத்துடன் வந்திருந்த அவர் போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி, அவர் மனைவி லதா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது ரஜினிகாந்த்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் மேரி கோம். அவருடன் குத்துச் சண்டை போஸ் கொடுத்து கலகலப்பாக்கினார் ரஜினி. இந்த புகைப்படம் வெளியான சில நிமிடங்களில் வைரலானது.
|