Nov 3 காலையில் பார்க்கத் தொடங்கிய டிரைலர் !! அந்த பிரம்மாண்டத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல் எழுதத் துவங்குகிறேன்.
"Will Set your Screen on fire" என்று தலைவர் சொன்னாலும் சொன்னார், உண்மையில் என்னுடைய Mobile Phone சூடாகி வெடிக்கும் நிலை வரும் வரை பார்த்து விட்டேன்.
பார்த்த உடன் ஏற்பட்ட பிரம்மிப்பு என்பது நிச்சயமாக வார்த்தைகளில் விவரிக்க முடியாது !!
டிரைலரை பார்த்தவுடன் பல De-Coding Specialist களைப்போல கண்டிப்பாக டிரைலரை பிரித்து மேயப் போவதில்லை.
ரஜினி எனும் அசகாய சூரன் , 500 கோடி எனும் பட்ஜெட்டை சர்வ சாதாரணமாக தோளில் சுமந்தாலும் , இந்த படத்தின் உண்மையான நாயகன் இயக்குநர் ஷங்கர் தான் என கூறும் அவரின் எளிமை பற்றியோ , காலில் அடிப்படதையும் பொருட்படுத்தாமல் நடிக்கும் அவரின் உழைப்பைப் பற்றியோ நான் சொல்லி தான் தெரிய வேண்டும் என்று இல்லை.
ஆனால் எதற்காக இந்த உழைப்பு ?
அவர் சாதரணமாக தலைமுடியை கோதி விட்டு “How is it?” என்று சொன்ன போதும் ரசித்தோம். கோட் சூட் போட்டுக்கொண்டு “மகிழ்ச்சி” என்று சொன்ன போதும் பரவசம் ஆனோம்.
அதுபோல ஹூ ஹூ என 2.0 வில் கண்ணடித்த போதும், நாங்கள் தன்னிலை மறந்து விசில் அடித்தோம்.
அப்படியே நடித்து விட்டு போய் இருக்கலாமே தலைவா! உங்கள் உடல் நிலையை வருத்திக்கொண்டு ஏன் நடிக்க வேண்டும்? எங்களுக்காகவா ?
அனைத்து படமும் ஒரே மாதிரி இருக்கிறது என்று எங்களுக்கு சலிப்பு தட்டி விடக் கூடாது என்பதற்காகவா ?
இதயம் கணக்கிறது தலைவா.
நிச்சயமாக உழைப்புக்கு முன்னோடி நீங்கள் தான். 40 வருடமாக சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை தக்கவைத்த வரலாறு சொல்லும் உங்கள் உழைப்பின் வீரியத்தை.
ஆனால் ஒரு அக்கறை உள்ள ரசிகனாக வேண்டிக்கொள்கிறேன். தயவு செய்து உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.
சாதாரண ரசிகனை திருப்தி படுத்துவதற்கே இவ்வளவு மெனக்கேடும் நீங்கள், இன்னும் சில மாதங்களில் மக்களை திருப்தி படுத்தும் முயற்சியில் இறங்கவிருக்கிறீர்கள். உங்கள் நலனே எங்கள் நலன்.
Take Care Thalaivaaaa.
நேற்று நடந்த விழாவில் இன்னொரு சுவாரசியமான விஷயம், ரஜினி ஏன் இன்னும் சூப்பர் ஸ்டாராகவே இருக்கிறார் என்ற கேள்விக்கு பல விதங்களில் பதில் கிடைத்தது.
நாம் தான் ஆஸ்கர் வென்று விட்டோமே, ஓய்வு பெற்று விடலாம் என்று நினைத்த ஏ.ஆர்.ரகுமான் அவர்களை, இவ்வளவு சாதித்து முடித்த சூப்பர் ஸ்டாரே இந்த வயதில் இப்படி ஒரு உழைப்பை தரும் போது நாம் எவ்வளவு உழைப்பை தர வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்த தருணம் உண்மையில் மெய் சிலிர்க்க வைத்தது.
நீங்கள் இதுவரை செய்த சாதனைகளே இன்னும் பல வருடங்களுக்கு முறியடிக்காமல் இருக்கப்போகும் இந்த நிலையில் கூட , ஒரு புது Bench Mark யை படைக்க காத்து இருக்கும் நீங்கள் , உண்மையில் ஒரு Inspiration.
2.0 கண்டிப்பாக தலைவர் கூறியதைப்போல தமிழ் சினிமாவை இந்திய அளவிற்கு மட்டும் பேசப்படாமல் , ஒரு உலக லெவல் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தலைவரை நன்கு அறிந்தவர்களுக்கு புரியும், அவர் இவ்வளவு தன்னம்பிக்கையுடன் பேசினால் அதன் வீரியம் எவ்வாறு இருக்கும் என்று.
படம் வெளியிடும் முன்னரே நான் யானை இல்லை, குதிரை என்று கூறிய சந்திரமுகி படம் தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படம்.
டிரைலரே இப்படினா, அப்போ படம் ? என்ற வினாவை தலைவர் எழுப்பிய எந்திரன் திரைப்படத்தின் வசூலை முறியடிக்க தலைவரால் மட்டுமே இதுவரை முடிந்தது.
இப்போது 2.0 விழாவில் தலைவர் பேசியது பார்க்கும் போது, எத்தனை பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகள் துவம்சம் ஆக போகிறதோ என்று தெரியவில்லை.
ஒரு உலக லெவல் மெசேஜ் இதுல இருக்கு என்று தலைவர் கூறுவது, அவர் அந்த கதையில் எவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்கிறார் என்றே காட்டுகிறது.
டீசர் மற்றும் ட்ரைலரில் முக்கிய கதை கருவை ஷங்கர் வெளியிட்டு விட்டார் என்று நாம் நினைத்தாலும், இதில் பல ரகசியங்கள் புதைந்து உள்ளதாகவே நான் நினைக்கிறேன்.
வசீகரன் திடீர் என்று அக்ஷய் குமாராக மாறும் கடைசி ஒரு நொடியே ஆயிரம் கேள்விகளை நம்முள் எழுப்பாமல் இல்லை.
ஒவ்வோர் 30 வருடங்களுக்கும் உலகில் ஒரு மாற்றம் வரும். சிலர் அதை Generaion Gap என்று கூறுவார்கள். சிலர் அதை பேஷன் என்று கூறுவார்கள். இன்னும் சிலர் இது தான் அடுத்த தலைமுறைக்கான Trend என்று கூறுவார்கள்.
அந்த ட்ரெண்டை கொண்டு வருபவனே Trend Setter என்று கூறுவார்கள்.
தமிழ் சினிமா உலக அளவில் கவனம் ஈர்க்கும். இதுவே இனி வரும் காலங்களில் Trend ஆக இருக்கும். 2.0 இந்த Trendக்கான துவக்கப்புள்ளி.
தலைவர் தான் அந்த Trend Setter !!
காத்து இருக்கிறோம் தலைவா.. சாதனைகளை படைக்க! நீங்கள் கூறியதைப் போல ரிலீஸ் ஆவது மட்டும் தான் பாக்கி. நீங்க வந்தா மட்டும் போதும் !!
-விக்னேஷ் செல்வராஜ்.
|