ரஜினி குரல் கொடுக்கல டாவ்வ்வ்... இது வாட்ஸ் ஆப் போராளிகளின் டிரேட்மார்க் டெம்ப்ளேட்.
தலைவர் குரல் கொடுத்தால் தான் எப்பேற்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் தீரும் என்று அவர்களை அறியாமல் அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்.
ஆனால் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு, அழுத்தமான, ஆத்மார்த்தமான, நியாயமான குரல் , முதலில் தலைவரிடம் இருந்து தான் வரும் என்பதை அவர்கள் வசதிக்கேற்ப மறைத்து / மறந்து விடுகின்றனர்.
அனைத்து தலைமுறையினர் மத்தியிலும் தலைவர் தான் நெ. 1 என்றாலும் இளைய தலைமுறையினர் விஜய் அல்லது அஜித்தின் ரசிகராகவும் உள்ளனர்.
அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது சக நடிகராக தோளோடு தோள் நிற்பவர் நம் தலைவர்.
இன்று சர்க்கார் திரைப்படத்திற்கான பிரச்சனையில் ஒருவர் ஆதரவு தெரிவிக்கிறேன் என்று அரசு கவிழும், ஆட்சி மாறும் என்று தனக்கான பொலிடிகல் மைலேஜை ஏற்றிக்கொள்ளப் பார்க்கும் தருவாயில், தணிக்கை செய்யப்பட்ட படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வைப்பது “சட்டப்படி” தவறு என்று கண்ணியமாகக் கூறியுள்ளார் தலைவர்.
"புலி" படத்திற்கு மோசமான விமர்சனம் வந்த போதும், படத்தை ஆதரித்துப் பேசியதும் தலைவர் தான்.
மெர்சல் விவகாரத்திலும் தன் ஆதரவை தெரிவித்தது தலைவர் தான். இன்று சர்காருக்கு சட்டப்படி துணை நிற்பதும் தலைவர் தான்.
இது ஏதோ விஜய் மீது மட்டும் வாய்த்த பாசம் இல்லை. திரை துறையில் மிக முக்கியமான பிரச்சனைகள் அனைத்தும் தலைவரின் தலையீடு இல்லாமல் தீர்ந்ததே இல்லை.
‘கூட்டத்திற்கு வர சொல்லி மிரட்டுறாங்கைய்யா’ என்று அஜித் கூறிய போது, அப்போதைய முதல்வரை அருகில் வைத்துக்கொண்டு எழுந்து நின்று கை தட்டிய தைரியம், பின்னர் அக்கட்சியினரால் அஜித்திற்குப் பிரச்சனை வந்த போது அதைத் தீர்த்து வைத்ததெல்லாம் எவரும் அவ்வளவு எளிதில் மறக்க கூடியதல்ல.
"ஜக்குபாய்" திரைப்படம் வெளிவர பண உதவி செய்தது, விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தின் போது முதல் ஆளாகத் தன்னுடைய நண்பனுக்காக நின்றது என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
ஆனால் அவருக்கு என்று ஒரு பிரச்சனை வரும் போது ??
நடிகர் சங்கம் கூட வந்த மாதிரி எனக்கு நினைவில்லை.
பாபா பட விவகாரத்தின் போது படப் பெட்டியையே தூக்கிக்கொண்டு சிலர் ஓடிய போதும் எவரும் வாய் திறக்கவில்லை.
இப்போதைய சர்க்கார் படத்தின் எதிர்ப்போடு நிச்சயமாகப் பாபாவை ஒப்பிட்டு பார்க்க முடியாது. சர்க்கார் படத்தின் எதிர்ப்பை விட 100 மடங்கு வீரியமாக அமைந்தது அந்த எதிர்ப்பு.
உண்மையில் எவராவது தலைவரின் பக்கம் நின்று இருந்தால் அது தலைவருக்கு ஆறுதலாக இருந்து இருக்கும். ஆனால் அன்று அவருடன் நின்றது அவரது ரசிகர்கள் மட்டுமே !!
அன்றைய நிலையில் தலைவர் லேசாகக் கண்ணைக் காட்டிஇருந்தால், பெரிய கலவரம் ஆகி இருக்கும்.
ஆனால் அன்று அவர் ரசிகர்களிடம் கூறியது என்னமோ ‘முதலில் உங்கள் குடும்பத்தைப் பார்துக்கொள்ளுங்கள், பிரச்சனையை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று தான்.
பட விவகாரம் முடிந்த பின்பு அன்புமணி அவர்களின் கோரிக்கையில் நியாயம் இருந்ததால் அதனை ஏற்கவும் செய்த பெருந்தன்மை குணம் வேறு யாருக்கு அமையும் ??
"குசேலன்" திரைப்படப் பிரச்சனையின் போதம் அமைதி காத்த போராளிகள், ரஜினி வருத்தம் தெரிவித்ததை மன்னிப்பு கேட்டு விட்டதாகத் திரித்துக் கூறுவதற்கு மட்டும் வாய் திறந்தனர்.
அனைத்தையும் கடந்து வந்த போதும் நியாயத்தின் பக்கத்தில் நிற்பதை தலைவர் விடுவதாய் இல்லை.
பொது மேடையில் முதவரிடம் புகார் கூறி அவர் சங்கடப்படுதிய அஜித்தை அறவழியில் காப்பதற்கும் அவர் வருவார். தேவை இல்லாமல் கருத்துச் சுதந்திரத்தை கேள்வி குறியாக்கும் விஷயங்களில் ஆளும் கட்சியை எதிர்த்தும் குரல் கொடுப்பார்.
காலாவை விடக் காவிரி தான் முக்கியம் என்று அரை நூற்றாண்டு கால நண்பர் முதுகில் குத்தினாலும் அவர் படத்திற்கு வாழ்த்து கூறுவார்.
விஜய் ரசிகர்கள் இவரது பேனரை கிழித்தாலும் விஜயின் பேனர் கிழிக்கப்படும் போது அதை எதிர்ப்பார்.
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
உரைத்தார் வள்ளுவர் ; வாழும் உதாரணம் தலைவர்.
-விக்னேஷ் செல்வராஜ்.
|