தலைவரின் அரசியல் வாழ்வில் எத்தனையோ முறை அவர் அளித்த பேட்டிகளை மீடியாக்கள் திரித்துவிட்டிருக்கின்றன.
இன்று நேற்றல்ல.. அவர் அரசியல் குறித்துப் பேச ஆரமித்த காலத்திலேயே இது நடக்க ஆரம்பித்துவிட்டது.. அதிலும் 2017 டிசம்பர் 31 க்கு பிறகு அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது.
அதன் ஒரு பகுதி தான் நேற்றைய தலைவரின் பேட்டியும் அதற்குத் தலைவரே விளக்கம் அளித்துக் கொடுக்க வேண்டி இருந்த இன்றைய பேட்டியும்.
தூத்துக்குடி விசயத்தில் ஊடகங்கள் சேர்ந்து கொண்டு, போராடியவர்களைச் சமூக விரோதிகள் என்று ரஜினி சொல்லிவிட்டார் என்று திரித்துச் சொன்னது போல, நேற்று எதார்த்தமாக எந்த ஏழுபேர் என்று கேட்டதைத் திரித்துச் சொல்ல ஆயத்தமாகின.
சில ஊடகங்கள் டிக்ளரே செய்துவிட்டனர்.
"ஏழு பேரை தெரியாதவர் தான் ஏழுகோடி பேருக்கு தலைவரா?" என்று.. அது எந்த ஊடகம் என்று உங்களுக்கே தெரியும்.
ஆனால் இம்முறை உடனடியாகத் தலைவர் ஊடகங்களை அழைத்து வலுவான விளக்கத்தை அளித்துத் தூத்துக்குடி போல ஆகிவிடாமல் பார்த்துக்கொண்டார் ( துண்டு ஒரு முறை தான் தவறும் )
எடுத்த எடுப்பிலேயே மீடியாக்களைக் குட்டியவாறே தான் ஆரம்பித்தார்.
ஏழு பேர் குறித்துத் தெரியாதவனா இந்த ரஜினி..? நீங்க கேள்விய ஒழுங்கா கேட்காமல் ட்விஸ்ட் பண்ணிட்டு என்னை சொல்றீங்க..!
வீடியோ இருக்கு, மக்கள் பார்க்குறாங்க, ஏன் ட்விஸ்ட் பண்றீங்க? எனச் சொன்னது நிறையச் சானல்களுக்கு உறுத்தியிருக்கக்கூடும்.
இந்தப் பேட்டியால் வெளிவந்த கூடுதல் செய்தி, தலைவர் ஒரு ஆண்டு முன்பே பேரறிவாளனோடு தொலைபேசியில் பேசிய தகவல்.. யாருக்குமே தெரியாது இந்த விசயம்.
அவனவன், பேரறிவாளனை பார்த்து சிரித்துவிட்டு வந்தாலே பல கதைகளைச் சொல்லி அரசியல் மைலேஜ் தேடிக்கொள்ளும் இந்தக் காலத்தில் தலைவர் இதுவரை அதை வெளியிலேயே சொல்லவில்லை என்பது வியப்பான விசயம்.
இப்போதும் கூடச் சொல்லியிருக்கமாட்டார், 7 பேர் குறித்து எதுவுமே தெரியாது என்று ப்ரொஜெக்ட் செய்ய முயன்றதால் தான் சொல்லியிருக்கிறார்.
இது போல இன்னும் எத்தனை எத்தனை செய்திருக்கிறாரோ அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும்..
ராஜிவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை மனிதாபிமானம் கருதி விடுதலை செய்வதே நலம் எனத் தன் கருத்தை மிகத்தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.
மற்றவர்களிடம் இதைக் கேட்டால் 1991 ம் ஆண்டுனு தங்கள் அரசியலுக்கு ஏற்றவாறு கருத்தை முன்வைப்பர்.
அதே போலப் பாஜக விசயத்தில் அவர்கள் எதிர்கட்சிகளுக்கு ஆபத்தானவர்கள் .. இத்தனை கட்சிகள் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் கண்டிப்பாக அந்த ஒருவர் பலமானவராகத் தானே இருக்க முடியும் எனவும் கேட்டிருக்கிறார்.
அரசியல் அரங்கிற்குள் முழுதும் அடியெடுத்து வைக்காமலேயே இத்தனை வெளிப்படையாக ரஜினி பேசியும் ஏன் அரசியலுக்கு வரல வரலனு கேட்கின்றனர்.
பலசாலி, ஆபத்தானவர்கள் என்பதெல்லாம் அவரவர் பார்வைக்கு.. நல்லவரா கெட்டவரா என்பது தான் இறுதி.. அதை மக்கள் முடிவு செய்வார்கள்..
2019 ல் தெரிந்துவிடும்... இதையும் ரஜினியே தான் சொன்னார்..ஆனால் ஊடகங்கள் வழக்கம்போல ரஜினி மோடியை பலசாலி என்று சொல்லிவிட்டார் so, ரஜினி பாஜகடாவ் எனக் கத்த ஆரம்பித்துவிட்டனர்.
கபாலி படத்துல தலைவர் சொல்ற டயலாகத் தான் நியாபகம் வருது.. ஊடகங்கள் வேலையே கதறுவது தான். கதறட்டும் விடு,. அதுல உண்மை இருக்கா இல்லயானு மக்கள் முடிவுபண்ணட்டும். 😎😂
இவற்றையெல்லாம் தவிர்த்து தமிழக நலன் சார்ந்து அவர் தெரிவித்த கருத்துகள் மிக மிக முக்கியம் என்பேன்.. குறிப்பாக இலவசங்கள் குறித்து.
கண்டிப்பாக இலவசங்கள் அவசியம்.. ஆனால் யாருக்கு, என்ன, எப்போது என்பது அவசியம்.. வெறும் ஓட்டுக்காகக் கொடுக்கப்படும் இலவசங்கள் பயனற்றது.
வார்த்தை உபயோகங்களே ரஜினியின் அரசியல் பார்வையை மிக மிக விரிவாக எடுத்துரைக்கிறது.
திராவிட அரசியலில் இருக்கும் இலவசங்களுக்கும் இவர் சொல்லும் இலவசங்களுக்கும் உள்ள இந்த வேறுபாடு தான் எதிர்கால அரசியலாய் இருக்கும் என்பது என் கணிப்பு..
இன்னொரு முக்கிய விசயம் வன்முறை எதிர்ப்பு.. எந்தச் சூழ்நிலையிலும் வன்முறை இருக்கவே கூடாது என்பதில் மிக உறுதியாய் நிற்கிறார்.
யாரானாலும் இதைத் தானே சொல்வார்கள் எனக் கேட்கலாம்.. இல்லை, திராவிட அரசியலில் வன்முறை என்பது ஒரு பக்கம் சார்ந்தது தான்.
உதாரணம் சர்கார் திரைப்பட எதிர்ப்பு.. அதாவது அவர்களுக்கு ஏதாவது என்றால் வன்முறையையும் கையில் எடுக்கத் தயங்கமாட்டார்கள்.
அதை ரஜினி புரிந்து தான் வன்முறையை அறவே வேண்டாம் என்கிறார்.. நீண்டகாலத் தமிழக நலனில் இவரின் இந்த இரண்டு பதில்கள் பல கேள்விகளுக்கு விடைகளாய் அமையும்..
இவை இல்லாமல் அமைச்சருக்கு ஒரு பெரிய கொட்டு வைத்திருக்கிறார்.
வர வேண்டியது, மைக்கப் பார்த்தவுடனே கத்திக் குதற வேண்டியது எனத் தமிழ்நாட்டில் ஒரு அமைச்சர் இருக்கிறார்.. ஆனால் இதைச் சொல்லி என்ன அவர் திருந்தவா போகிறார்.
விமர்சனம் வேறு தனிமனித தாக்குதல் வேறு என்பது கூடப் புரியாமல் உளறுபவருக்குத் தலைவர் சொல்வதும் காதில் விழப்போவதில்லை தான்.
நாளை இதற்கும் ஒரு பலமான எதிர்வினை வைக்கத்தான் போகிறார்.. அதற்கென ரஜினி அமைச்சரை கொஞ்சம் கூடக் கடிந்து சொல்லவில்லை. ஹர்ட் பண்ணாம விமர்சனங்கள் வையுங்கள் என்று தான் சொன்னார்.. #ஆன்மிகஅரசியல் 🤘
கஷ்டப்பட்டு உழைக்கின்றோம்.. வருமானவரி கட்டுகிறோம்.. பணம் சம்பாதிக்கின்றோம் உனக்கென்ன என்கிற அந்தக் கடைசிப் பதில் உரைக்கிறவர்களுக்கு உரைக்கும் என நம்புவோமாக..
குறிப்பாக இந்தப் பதில் அனைவருக்குமானது என்பேன்..அதிகமாகப் பணம் சம்பாதிப்பவர்களை ஏதோ தீயவர்கள் போலப் பார்க்கும் பொதுப் புத்தி அதிகரித்து வருகிறது..
அதிலும் நடிகர்கள் மீதான பார்வை.. அவர்களும் உழைக்கிறார்கள்..நடிப்பும் ஒரு தொழில் என்பதை மறந்துவிடுகின்றேன்.. நாமும் நினைவு படுத்துவோம்..
நடிப்பு தான் தொழில் சாரே.. ஆனால் நீங்கள் அரசியலையே ஒரு தொழிலாகச் செய்துவருகிறீர்கள் என்பதை மறக்கவேண்டாம்.. ðŸ˜
பத்து நிமிட கலகலப்பான பேட்டிக்குப் பின் கேட் வரை சென்றவர், நிருபர்களில் ஒருவர் "சார் ஒரு போட்டோ என்றதும்., டக்கெனத் திரும்பி போட்டோவா!" என்றாரே.. செம்ம மொமண்ட்.. அவ்ளோ அழகு தலைவர் இன்னைக்கு.
உடனே எல்லா நிருபர்களும் நாங்களும் ஒரு போட்டோ எனச் சூழ்ந்து கொள்ளப் பெரிய சிரிப்பு. இவரைப் போய் தவறாக எழுத எப்படி மனசு வருகிறதோ!
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மை தானடா.. 🤘