சன் பிக்சர்ஸ் "பேட்ட" படத்தின் "Modified" படங்களைப் பகிர்ந்தவர்களின் கணக்குளை முடக்கி வருகிறார்கள். இதனால் பலரும் பீதியடைந்து அதிகாரப்பூர்வமாக விடப்பட்ட படங்களையும் எதற்கு வம்பு என்று நீக்கி வருகிறார்கள்.
மிகப்பெரிய அளவில் பின் தொடர்பாளர்கள் வைத்து இருந்த கணக்குகள் கூட முடக்கப்பட்டு விட்டன.
சிலர் மீட்டு விட்டார்கள், இன்னும் சிலர் இதுவரை முடியவில்லை.
சன் பிக்சர்ஸ் இது போலச் செய்வதில் என்ன நியாயம் உள்ளது? என்பதை அவர்கள் விளக்கினால் நலம்!
படத்தின் காட்சிகள், படப்பிடிப்பு நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட காணொளிகளை நீக்கி கணக்கை முடக்கினால் ஒரு நியாயம் உள்ளது.
நிழற்படங்களைப் பகிர்பவர்கள் கணக்கையெல்லாம் முடக்குவது எந்த வகையில் சரி?!
ஒரு நிழற்படம் அதிகாரப்பூர்வமாக விடப்பட்டால், அதை தங்கள் கற்பனை வளத்துக்கு ஏற்ப இன்னும் சிறப்பாக மாற்றம் செய்து விடுவது ரசிகர்கள் இயல்பு.
இதில் என்ன பெரிய குற்றத்தைக் கண்டார்கள்?!
லைக்கா நிறுவனம் ரசிகர்களை உற்சாகப்படுத்திப் பல்வேறு வகையான Fan Made Poster களை உருவாக்க ஆதரவு தரும் நிலையில், சன் பிக்சர்ஸ் அவர்கள் தயாரிப்புப் படங்களைப் பகிரவே நெருக்கடி தருகிறார்கள்.
லைக்கா கொடுத்த சுதந்திரம் தான் 2.0 Fan Made Poster களை உருவாக்க வைத்துள்ளது. பலரிடையே தற்போது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தங்களின் தலைவரின் படத்தைச் சுதந்திரமாகப் பகிர கூட நெருக்கடியை கொடுப்பது என்ன மாதிரியான மன நிலை?!
இதைக் கார்த்திக் சுப்பராஜு ஒரு தலைவர் ரசிகனாகவும், படத்தின் இயக்குநர் என்ற முறையிலும் சன் பிக்சர் க்கு எடுத்து செல்ல வேண்டுகிறோம்.
காணொளிகளுக்குத் தடை விதியுங்கள் ஆனால், நிழற்படங்களுக்கு அல்ல!
- ரஜினிபேன்ஸ் அட்மின்
|