என்ன ஜாதி என்று தெரியாமல், முன்பின் பார்த்து இருக்கிறோமா என அறியாமல், ஏழை பணக்காரன் பேதம் இல்லாமல் ஒரே இடத்தில பலர் கூடிக் கொண்டாடும் சமத்துவத்தை பார்த்ததுண்டா ?
பணக்கார கெத்து , ஏழ்மை ஒடுக்கம், டாக்டர் என்ஜினீயர் என்ற Society Status எல்லாம் காற்றில் பறக்க விட்டு தன்னை மறந்து போய் தரை லோக்கல் குத்தாட்டம் ஆடி பார்த்ததுண்டா ?
இது தமிழகத்தின் 40 ஆண்டுகால பழக்கம். ரஜினியின் படம் ரிலீஸ் ஆகும் அந்த நாள்.....தன்னுடைய கஷ்டம், வருத்தம், மன உளைச்சல் அனைத்தையும் மறந்து "தலைவா" என தொண்டை கிழிய கத்தி விசில் அடிக்கும் போது இந்த உலகையே மறக்கும் அந்த தருணம்.... ரஜினி ரசிகன் மட்டுமே உணரக்கூடிய நவரசம் / பரவசம்....
S-U-P-E-R S-T-A-R என்ற வார்த்தையும் "R-A-J-N-I" என்ற அந்த மந்திர சொல் நமது கண்ணுக்குள் செல்வதை அனுபவிக்கும் அந்த தருணம்.... அதற்கே பைசா வசூல் !!!
அண்ணாமலை வெளிவந்த போது நான் பிறக்கவே இல்லை. முதன் முதல் டைட்டில் கார்டு தலைவருக்கு போட்ட போது ரசிகர்கள் என்ன ஆரவாரம் செய்திருப்பார்கள் என்பதை அந்த எழுத்துக்கள் ஏன் கண்ணுக்குள் செல்லும்போது நான் அடைந்த "Goosebumps" உணர்த்தியது.
ஹேட்டர்ஸ்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ். படத்துக்கு Hypeஏ இல்ல டாவ்வ் என கதறியே Hype ஏத்தி விட்டீர்கள் !!!
ஆனால் நடந்தது என்னவோ உங்களுக்கு வயிற்றெரிச்சலை கொடுக்கக் கூடியது தான் !!!
வெளி மாநிலத்தில் தற்போது நான் இருப்பதால், 3 மொழிகளில் தலைவரை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் காலை 6 மணி காட்சிக்கும் சரி இரவு 11 மணி காட்சிக்கும் சரி, எனக்கு முதல் வரிசையில் இடம் கிடைப்பதற்கே படாத பாடு ஆகி விட்டது (அனைத்த்து மொழியிலும்)...
இரவு 3 மணிக்கு பட்டாசு வெடித்து பூஜை செய்கிறார்கள்... தமிழகத்திலா ? இல்லை, மும்பை தாராவியில் !!!
அடுத்த சூப்பர் ஸ்டார் கனவில் வாழும் அனைவருக்கும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து என்றால் என்ன என்பதை விளக்கும் உச்சமாக அமைந்ததே இந்த 2.0 ... நன்றிகள் பல ஷங்கர் சார்.
கெடுதலிலும் நல்லது என்று கூறுவதற்கேற்ப ஹாலிவுட் நடிகர் அர்னால்டு விலகியது நிச்சயமாக படத்திற்கு நல்லதையே செய்துள்ளது என்று தான் கூற வேண்டும். அக்ஷய் குமாரை தவிர வேறு எவராலும் அதை செய்திருக்க முடியாது...
இரண்டரை மணி நேரம் எப்படி போனதென்றே தெரியாத வண்ணம், படம் இன்னும் ஒரு எக்ஸ்ட்ரா 10 நிமிடம் இருந்திருக்கலாமோ என்று தொடரும் அளவிற்கு முதல் நொடி முதல் கடைசி பிரேம் வரை ஜெட் வேகம்.
400 கோடியில் படம் எடுத்தாலும் எங்களுக்கு 400 MB தான் டாவ்வ் என கதறிய கும்பலுக்கு அந்த தமிழ் ராக்கர்ஸ் தளமே "போய் 3D யில் பாருங்க டா" என கூறியதெல்லாம் அந்த கரடியே காரி துப்புன மொமெண்ட் !!!
நவம்பர் 29, தமிழகத்தில் பல திடீர் ஸ்பெஷலிஸ்ட்கள் அவதரித்த நாள் !!
VFX இன் Full Form அறியாதரவாகள் கூட திடீர் ஸ்பெஷலிஸ்ட் ஆகி, VFX அப்படி பண்ணி இருக்கலாம், சவுண்ட் சிஸ்டம் பெட்டரா பண்ணி இருக்கலாம் என மேதாவியை போல பேச ஆரம்பித்தார்கள்.
ஆனால் மிஞ்சியது என்னமோ பல்பு தான் !!
திடீர் ஸ்பெஷலிஸ்ட்களை போல திடீர் சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் உருவானார்கள் !!
"நான் ரஜினிகாந்த் எனும் நடிகரின் ரசிகன், ஆனால் ரஜினிகாந்த் எனும் அரசியல்வாதிக்கு அல்ல" என ஒரு கும்பல் கிளம்பி உள்ளது...
போக்கிரியில் வடிவேலு அவர்கள் போட்ட கெட்டப்பை விட அதிகமாக போட்டு விட்டார்கள்.
அடேய் ஹேட்டர்ஸ்களா நீங்க என்ன தான் முக்கினாலும் ஒன்னும் கிழிக்க முடியாது !!
"Save Agriculture" என்று முகநூலில் DP மாற்றி விட்டால் விவசாயம் செழிக்கும் என நினைக்கும் முட்டாள் கூட்டத்தின் நடுவே, நீங்கள் கூத்தாடி என இகழும் ரஜினியின் தொண்டர் படை, அவரது பட ரிலீசைக் கூட பொருட்படுத்தாமல் "காஜா" புயல் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த விசில் அடிக்கும் கூட்டத்தை எப்படி கட்டுக்கோப்புடனும், ஒழுக்கத்துடனும் வைத்திருப்பதிலேயே ஏன் நாங்கள் அவரை "தலைவர்" என அழைக்கிறோம் என புரிந்திருக்க வேண்டும்.
நிவாரண பணிகளில் ஈடுபட்டிருக்கும் மன்ற காவலர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் !!!
தலைவரின் வெறியாட்டத்தின் அனலை தாங்க முடியாமல் BOX OFFICE பஸ்பமாகிப் போய் இருக்கும் இந்த நேரத்தில், ஹேட்டர்சின் பிரதான கதறலை கேட்க வேண்டும் போல இருக்கிறது..
Dear Haters , எனக்காக ஒரே முறை கதறுங்கள் பாப்போம்...
"ரஜினிக்கு மார்க்கெட் போனதால அரசியலுக்கு வராரு டாவ்வ்வ்வ்வ்"
- விக்னேஷ் செல்வராஜ்.
|