"இவரு வீட்டுலயே சிஸ்டம் சரி இல்லயாம், இவரு தமிழ்நாட்டோட சிஸ்டம் கேட்டு போச்சுன்னு சொல்றாரு" சௌந்தர்யா அவர்களின் திருமணத்தின் போது ரஜினியை கேவலப்படுத்துவதாக நினைத்து பலர் பேசிய வசனம் இது.
அவர்களது Timeline பார்த்தால், ரஜினி பாஜக டாவ்வ்வ், RSS சித்தாந்தம் டாவ்வ்வ், இது பெரியார் மண்ணு , சமூக நீதி, புரட்சி எனத் தெறிக்க விட்டு இருக்கிறார்கள்.
சமுகத்தளங்களில் ஒரு வாழ்க்கை, நிஜத்தில் ஒரு அருவருக்கத்தக்க வாழ்க்கை என வித்யாசமான படைப்புகள் தாம் இவர்கள்.
எத்தனை திருமணம் செய்தாலும் ஒரு ஆணை கேள்வி கேட்காத இந்தச் சமூகம், இரண்டாம் திருமணம் செய்த உடன் ஒரு பெண்ணை, "இவள் இதோடு நிறுத்துவாளா" என ஏளனமாகக் கேட்கும் ஆணாதிக்கத்தின் உச்சநிலை.
இவையல்லாம் வருங்காலச் சந்ததியினர் துறந்து விடுவார் என்ற நம்பிக்கை சமுகத்தளங்களில் தெரிந்தாலும், கேவலம் ஒரு தனி மனித தாக்குதலுக்காக இவ்வளவு கீழ்த்தனமாக நடந்து கொள்வார்கள் என யாரும் எதிர் பார்க்கவில்லை.
என்னைப் பொறுத்தவரை தமிழன் போர்வையில் அலைந்து கொண்டு இருக்கும் இந்த மிருகங்களை "டுமீலன்ஸ்" எனச் சோசியல் மீடியாவில் கிண்டல் செய்வது தப்பே இல்லை.
இரண்டாவது திருமணம் செய்வது தவறு என்றால், கலைஞர் தொடங்கி எம்ஜிஆர் வரை, அவ்வளவு ஏன், வார்த்தைக்கு வார்த்தை பெரியார் மண் எனச் சொல்லும் நிலையில் உள்ள பெரியாரே ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்தவர்களே.
அவர்கள் அமைதி காத்த உள்ளங்கள் இப்போது பொங்குவது ஏன்? ஆணாதிக்கச் சாக்கடை வெறியா ? இல்லை ரஜினியை மட்டப்படுத்துவதில் உள்ள அலாதி இன்பமா ?
அதென்ன ரஜினி ஒன்றை செய்தால், அதை நீங்கள் விரும்பும் மாற்றமாக இருந்தாலும் அதை நிராகரிக்கும் எண்ணம்?!
பிஜேபி ஆதரவாளர் என நீங்கள் முத்திரை குத்தும் ரஜினி தான் பெரியார் / பாரதியார் காண விரும்பிய பெண் விடுதலையை நிலைநாட்டியுள்ளார்.
உடனே சிலர் ஆக்ரோஷமாகக் கேட்கலாம், பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிட்டா நல்லவரா ? எத்தனை சினிமாவில் பெண்களை இழிவு படுத்தியுள்ளார் ரஜினி என்று ?
உதாரணமாக மன்னன் & படையப்பா ( அதே படங்களில் தான் பெண்களையும் போற்றியுள்ளார் (பண்டரிபாய், சவுந்தர்யா))
சினிமாவும் வாழ்க்கையையும் ஒன்னு இல்லை, அதை வேறுபடுத்திப் பாருங்கன்னு எங்களுக்கு அறிவுரை சொல்லிட்டு உங்களுக்கு எங்க சார் போச்சு அந்த அறிவு??
எங்களுக்கு, நாட்டியக்காரியை கொளுத்துன வேட்டையனை தான் பிடிக்கும், படைத்தவன் காதலியை கடத்துன சிட்டியை அதை விட ரொம்பப் பிடிக்கும்.
ஊரை காப்பாத்துன ராஜா லிங்கேஸ்வரனை விட, ஊரை ஏமாத்துற இந்திரன் சந்திரனை தான் பிடிக்கும்.
நாங்க தெளிவா தான் சார் இருக்கோம், ரஜினியை எந்த விதத்தில் பின்பற்றனும் என்று. நீங்க தான் சினிமாவையும் நிஜ வாழ்க்கையையும் கொழப்பிக்கிறீங்க !!
சரி இருந்தாலும் உங்க குருட்டு லாஜிக்குக்கே வரேன்...
ரஜினி படையப்பா படத்தில் "மொத்தத்துல ஒரு பொண்ணு, பொண்ணு மாதிரி இருக்கனும்" அப்படினு சொன்னதை மேற்கோள் காட்டி அவர் ஆணாதிக்கவாதி என்று சொல்லும் நீங்கள்...
அதே படத்தில் தனது மனைவியை "என் வீட்டு எஜமானியம்மா" என்று சொன்னதை உங்கள் வசதிக்கேற்ப மறந்து விட்டீர்கள்.
இன்றைக்கும் "அம்மா" என்றால் மன்னன் பட அம்மா என்றழைக்காத பாடலே அனைவரின் விருப்பமாக உள்ளது.
நிஜ வாழ்விலும் அவர் நடிப்பை தவிர, அநேக நிர்வாக விஷயத்திலும் முன்னிருப்பது அவரது மனைவியே. சும்மா ரஜினி எதிர்ப்பு என்ற ஒற்றை வார்த்தைக்காகக் கம்பு சுற்ற வேண்டாம்.
சௌந்தர்யா அவர்களது திருமணம் ஒரு காதல் திருமணம். இருவரது மனமும் ஒத்துபோய் இருக்கிறது. முதல் கணவரும் பிரிந்து விட்டார். எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
தனது மகளின் தலைவிதியை தவறு இருந்தால், அதையும் மாற்றும் ஒரு தந்தையாகத் தலைவர் தனது கடமையைச் சிறப்பாகச் செய்துள்ளார்.
காதல் திருமணம் செய்து அதில் உண்மையாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும் தலைவருக்கு அந்தக் காதலின் ஆழம் புரியும்.
Happy Valentine's Day Thalaivaa and Mrs. Soundarya Vishaagan !!!
- விக்னேஷ் செல்வராஜ்
|