Related Articles
கனவு மெய்படட்டும் தலைவா... ! நமக்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது
சிவாஜி கணேசனும் சிவாஜி ராவும் இணைந்த படையப்பாவிற்கு 20 வயது..
எனக்குள் இன்னொரு ரஜினி இருப்பதை காட்டியவர் மகேந்திரன் - அஞ்சலி செலுத்திய தலைவர்
Avengers climax was almost inspired from Superstar's Enthiran, director Joe Russo reveals
Most Popular Superstar Rajinikanth Punch Dialogues
சொன்னதைச் செய்வேன்... செய்யவும் வைப்பேன் !!!
Celebrating 30 years of Rajathi Raja
Petta 50th day celebrations by Superstar Rajinikanth with Petta team
பேட்ட 50 வது நாள் வெற்றி திருவிழா கொண்டாட்டம் போல் இதுவரை கண்டதில்லை
2.0 movie exclusive exhibition in Chennai attract visitors

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
பிரமாண்டமாக ஆரம்பித்த தலைவரின் "தர்பார்" பூஜை..!
(Thursday, 11th April 2019)

ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரிப்பில் தயாராக இருக்கும் படம், 'தர்பார்'. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இன்று ஆரம்பமானது. 


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'பேட்ட' படத்தைத் தொடர்ந்து, 'தர்பார்' படம் மூலம் ஏ.ஆர்.முருகதாஸோடு கைகோத்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். இதற்கு முன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம், 'கஜினி'. தவிர, 27 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், சந்தோஷ் சிவன். 'பேட்ட' படத்தைத் தொடர்ந்து அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

 

வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்று சொல்லப்பட்டுவந்த நிலையில், அது உண்மையல்ல என்று படக்குழு அதை மறுத்துவிட்டது. மேலும், படத்தைப் பற்றி பல செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில், நேற்று 'தர்பார்' என்ற டைட்டிலோடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று போஸ்டரில் குறிப்பிட்டிருந்தது. படத்தின் கதை மும்பையில் பயணிப்பதுபோல போஸ்டரிலும் சில குறியீடுகள் இருந்த நிலையில், இன்று காலை, படத்தின் ஷூட்டிங் மும்பையில் இனிதே ஆரம்பம் ஆனது. 

 

 

 

 

 





 
0 Comment(s)Views: 473

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information