தமிழகத்தின் தண்ணீர் தேவை பாராளுமன்றத்தில் ஒலிக்குமா ?
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பல அதிர்ச்சி, ஆச்சர்யம் கலந்த கலவையாக ஒரு முடிவை தந்துள்ளது.
எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெற முடியாது என ஆரூடம் கூறப்பட்ட நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வேறு முடிவுகள் தந்தன.
பொதுவாகக் கருத்துக்கணிப்புகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் இம்முறை அனைத்து கருத்துக்கணிப்புகளைப் போலவே பாஜக சிங்கிளாக அடித்துத் தூக்கியது !!!
மேலும் சென்ற முறையை விட இம்முறை கூடுதல் இடங்களையும் பெற்றுள்ளது, அதற்குக் கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது. தங்களின் மீதான நம்பிக்கை மக்களிடம் உயந்துள்ளதாகவே அக்கட்சி கருதுகிறது.
வாழ்த்துக்கள் மோடி ஜி !! அனைவருக்கும் பொதுவான பிரதமராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் !!
இந்த எதிர்ப்பார்ப்பிற்குக் காரணம் இருக்கிறது. தமிழகம் உங்கள் கட்சியை முழுவதுமாகப் புறக்கணித்துள்ளது. காரணம் உங்களுக்குப் புரியாமல் இல்லை. அதை விளக்குவதும் இங்கு அவசியமில்லை.
ஒட்டு மொத்த இந்தியாவும் ஒரு தீர்ப்பை வழங்கிய போதும், தமிழகம் ஒரு வித்தியாசமான தீர்ப்பை வழங்கியது !!
மத்தியில் ஆட்சியைத் தீர்மானிக்கும் தேர்தலில் திமுகவிற்கும், மாநிலத்தின் ஆட்சியைத் தீர்மானிக்கும் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்துள்ளனர். அதாவது இடை தேர்தல் நடந்த தொகுதிகளில் உள்ள மக்கள் ஒரு ஓட்டை அதிமுகவிற்கு மற்றோரு ஓட்டை திமுகவிற்கும் 'தெளிவாக' அளித்துள்ளனர்.
இதை வெறும் பாஜக எதிர்ப்பாக எடுத்துக்கொள்வதா ? அல்லது மக்கள் அதிமுக மீது கோவத்தில் இருந்தாலும் திமுகவை ஆட்சியில் அமர வைக்க விரும்பவில்லையா என்ற கோணத்திலும் சிந்திக்க வேண்டியுள்ளது.
எது எப்படியோ !! ஒரே சமயத்தில் நடந்த இரு வேறு தேர்தலில் இரு வேறு தீர்ப்பளித்து மக்கள் தாங்களே ஒரு குழப்ப நிலையில் உள்ளதை வெளிப்படுத்தி உள்ளனர் !!
மத்தியில் தமிழகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கவும், மாநிலத்தில் மக்களின் நலனை காத்திடவும் ஒரு சரியான தலைவனைத் தமிழகம் தேடுகிறது என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
தலைவர் சட்டசபை தேர்தல் தான் எனக் கூறினாலும், அந்தத் தேர்தல் நெருங்கும் போது தாம் என்ன பிரச்னையை முன்வைக்கிறோமோ அதற்கான தீர்வை நோக்கி தமிழகம் நகர வேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறார்.
தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கும் கட்சிக்கு வாக்களிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தது தான் தாமதம் !! தேசிய கட்சி முதல் லெட்டர் பேட் கட்சி வரை அவர்களது தேர்தல் வரைவுரையில் நதி நீர் இணைப்பை சேர்த்தன !!
இதோ மாநிலத்தில் வெற்றி பெற்ற கட்சியும் சரி, மத்தியில் வெற்றி பெற்றுள்ள்ள கட்சியும் சரி, தங்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் கடமையில் உள்ளனர்.
நிதின் கட்கரி அவர்கள் இதற்கான வாக்குறுதியை அளித்தது மேலும் நம்பிக்கையூட்டுகிறது.
மத்தியில் மோடியோ ராகுலோ மம்தாவோ நீங்கள் நானோ இருந்தால் கூடத் தலைவர் அவர்களோடு நல்ல நட்புறவில் இருந்து தமிழகத்திற்குத் தேவையானவற்றைப் பெறுவதிலும் தேவையில்லாதவற்றை எதிர்ப்பதிலும் கவனமாக இருப்பார்.
இது தலைவரின் ஆன்மீக அரசியல் !!! எவரையும் அன்போடு ஏற்க வைக்கும்.
ரஜினி முத்து, ரஜினி அந்தோணி, ரஜினி பாஷா எனப் பெயரிலேயே எம்மதமும் சம்மதமாக இருப்பவரை மத்தியில் ஆளும் அரசு இவர் வைக்கும் நியாயமான கோரிக்கையை ஏற்பதால் அவரை ஒரு சிறு வட்டத்துக்குள் அடைப்பது சரியாகாது !!!
அரசியல் சூட்டில் அனைத்து கட்சியும் தகித்துக் கொண்டிருந்த மக்களின் தாகம் தீர்க்கும் நடவடிக்கையில் ரஜினி மக்கள் மன்றம் ஈடுபட்டது . தண்ணீர் தான் இனி வரும் காலங்களில் தலையாயப் பிரச்சனையாக இருக்கும் எனத் தலைவர் கணித்துள்ளார் .
அவரது கனவு திட்டமான நதி நீர் இணைப்பு விரைவில் நிறைவேறி அனைத்து மக்களின் ; அனைத்து உயிர்களின் தண்ணீர் தாகத்தைப் போக்க விடும் என வேண்டிக்கொள்கிறேன்.
- விக்னேஷ் செல்வராஜ் .
|