Related Articles
ரஜினி பிஜேபியின் B டீம்மா?
பாராளுமன்ற தேர்தல் உணர்த்தும் பாடம்
விகடனாரே! நீங்கள் மன்னிப்புக் கட்டுரை வெளியிடத் தயாரா?
க்யாரே! செட்டிங்கா??
கணவர் விசாகனின் கரம் பற்றிக் கொண்டு பேசுகிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த்
'படையப்பா' திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இப்படம் குறித்த ஒரு ரீவைண்டு!
பிரமாண்டமாக ஆரம்பித்த தலைவரின் "தர்பார்" பூஜை..!
கனவு மெய்படட்டும் தலைவா... ! நமக்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது
சிவாஜி கணேசனும் சிவாஜி ராவும் இணைந்த படையப்பாவிற்கு 20 வயது..
எனக்குள் இன்னொரு ரஜினி இருப்பதை காட்டியவர் மகேந்திரன் - அஞ்சலி செலுத்திய தலைவர்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
`மோடி என்கிற தனிமனிதரின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி!' - ரஜினி
(Thursday, 6th June 2019)

(28 May, 2019) - மக்களவைத் தேர்தலில் 303 இடங்களில் வென்ற பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நாளை பதவியேற்க இருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்கிறார். இந்தப் பதவியேற்பு விழாவில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க இருக்கின்றனர். அதேபோல், தமிழகத்தில் ஸ்டாலின், ரஜினி, கமல் உள்ளிட்டோருக்கும் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. இதில், தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். அதேநேரம், மோடி பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்று தெரிகிறது. 

இந்தநிலையில், சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். அவரிடம் பா.ஜ.க வெற்றி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்த ரஜினி, `இது மோடி என்ற தனிமனிதரின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி. பொதுவாகவே தேசிய அளவில் என்றாலும் மாநில அளவிலும் ஒரு தலைவரின் செயல்பாடுகள், நடவடிக்கைகளை வைத்தே அவரது கட்சிக்கு வெற்றிகிட்டும். 

தேசிய அரசியலில் நேருவுக்குப் பின்னர் இந்திரா காந்தி, அவருக்குப் பின்னர் ராஜீவ் காந்தி போன்ற பெரிய தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அவருக்குப் பின்னர் வாஜ்பாய் அந்த இடத்தில் இருந்தார். அவர்கள் வரிசையில் இப்போது மோடி இருக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா என தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அதைவைத்துப் பார்க்கும்போது மோடியின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி இது. தமிழகத்தில் தோல்வி அடைந்திருந்தாலும் நதிகளை இணைப்போம் என்று கூறியிருக்கும் நிதின் கட்கரியின் கருத்தை நான் வரவேற்கிறேன்'' என்றார்.

தமிழக தேர்தல் முடிவுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த ரஜினி, ``இந்திய அளவில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் மோடிக்கு ஆதரவான அலை வீசியது. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசியது. அரசியலில் அதுபோன்ற ஒரு அலை வீசும் சூழலில், அதற்கு எதிராக யாரும் நீந்த முடியாது. அவர்கள் அந்த அலையால் அடித்துச் செல்லப்படுவார்கள். அலையின் போக்கோடு நீந்திச் செல்பவர்களே வெல்வார்கள்' என்றார். 

தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசக் காரணம் குறித்து பேசிய ரஜினி, ``மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், நீட் தேர்வு மற்றும் எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட சூறாவளிப் பிரசாரம் ஆகியவை காரணம்'' என்றார். கமல்ஹாசன் குறித்து பேசிய ரஜினி, `கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே ஏறக்குறைய 4 சதவிகித வாக்குகள் வாங்கியிருக்கிறார் கமல். அது கணிசமான எண்ணிக்கை. அவருக்கு எனது பாராட்டுகள்' என்றார்.

ராகுல் காந்தி குறித்து பேசிய அவர், ``ராகுல் காந்தியிடம் தலைமைப் பண்புகள் இல்லை என நான் கூற மாட்டேன். காங்கிரஸ் போன்ற பழைமையான கட்சிகளை வழிநடத்துவது என்பது மிகவும் சிரமமான காரியம். மூத்த தலைவர்கள் பலரைக்கொண்ட அதுபோன்ற ஒரு கட்சியை வழிநடத்துவது இளையவரான அவருக்குக் கடினமானது. நான் கவனித்தவரை, ராகுல் காந்திக்குக் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் உரிய முறையில் ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. அவர்கள் கடினமான உழைப்பைக் கொடுக்கவில்லை என்பதுதான் எனது கருத்து. 

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து அவர் விலகக் கூடாது. அந்தப் பதவியில் இருந்துகொண்டு, அவர் தன்னை நிரூபிக்க வேண்டும். ஜனநாயகத்தில் ஆளுங்கட்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு எதிர்க்கட்சியும் அவ்வளவு முக்கியமானது. எதிர்க்கட்சிகள் வலுவாகக் களத்தில் நிற்க வேண்டும்'' என்றார் ரஜினி.  


 
0 Comment(s)Views: 657

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information