Related Articles
சந்திப்புகள் சொல்லும் மனிதநேயம்
அரசியலுக்கு ரஜினி ஏன் தேவை? (பாகம் 4)
ரஜினி மக்கள் மன்ற நிர்வாக விதிகள்
எதிர்ப்பு தான் அரசியலில் மூலதனம் (Part 3)
கலைஞர் நினைவேந்தல் : ரஜினி பேச்சு
கமல் மீது ரஜினி ரசிகர்களுக்கு வெறுப்பு ஏன்?!
அதிமுகவில் ரஜினி : புது வதந்தி
என்னுடைய கலைஞர் ... !
அம்பத்தூர் பாடிகுப்பம் மாநகராட்சி பள்ளியில் Rajinifans.com இனையதளம் சார்பாக உதவி
தமிழ் சினிமாவின் பெஸ்ட் க்ளைமாக்ஸ் சாங் கற்றவை பற்றவை தான்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
தலைவர் ரஜினியின் தரிசனம் - அ .அருள்செல்வன்
(Friday, 7th September 2018)

நேற்று முன்தினம் குன்றத்தூரில் நடந்த துயர சம்பவம், நம் தலைவரின் தீவிர ரசிகர் விஜய் அவர்கள் வீட்டில் தான் நடந்தது என்று நான் தெரிந்து கொண்ட போது இரவு மணி 9:30. அவரிடம் பேசிவிட்டு கவலையில் அமர்ந்து இருந்த எனக்கு, அவரை சிறிது அளவேனும் சமாதானப் படுத்த முடியும் என்றால் நம் தலைவரால் தான் முடியும் என்று தோன்றியது. உடனே மடிக்கணினியை எடுத்து வைத்து நான் எழுதத் தொடங்கினேன். என் எழுத்தின் வழி அந்த துயரம் செல்ல வேண்டும் என்று மிகுந்த நேரம் எடுத்துக் கொண்டேன். அந்த கட்டுரையைத் திரு.மாயவரத்தான் அவர்களிடம் பகிர்ந்தேன். அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தேன்.

சமூக வலைத்தளங்களில் 100 க்கு 99% ரசிகர்கள், தலைவர் அவரை நிச்சயமாக சந்திப்பார் என்று பின்னூட்டம் இட்டனர். சில பேர், இதில் தலைவரை இழுப்பது தேவை இல்லாத வேலை என்றும் கூறி இருந்தனர். இன்னும் சில பேர் உங்களுக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து அவரைப் பார்க்க வைக்க முயற்சி செய்யுங்கள் என்று பின்னூட்டம் இட்டு இருந்தார்கள்." இன்னுமாடா!!! இந்த ஊர் நம்மள நம்முது " என்கின்ற வடிவேலு காமெடியை நினைத்துக் கொண்டு நான் அமைதியாக பதில் அளிக்காமல் இருந்து விட்டேன். நான் உண்மையில் தலைவரை இதுவரை தூரத்தில் இருந்து கூட சந்தித்தது கிடையாது. காவிரியை எதிர்பார்த்து காத்து இருக்கும் தமிழகம் போல, அவரைக் காண மிக ஆவலாக நேற்று வரை காத்து இருந்தேன்.

நேற்று காலை எழுந்தவுடன் நண்பர் விஜயை தொடர்பு கொண்டு தலைமையிடம் இருந்து ஏதாவது அழைப்பு வந்ததா என்று கேட்டேன். தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் தன்னை தொடரபு கொண்டதாகவும். இன்று மாலை 3.30 மணிக்கு தலைவரை சந்திக்க வருமாறு கூறியதாவும் கூறினார். தனக்கு உதவியதற்கு மிகவும் நன்றி என்றும் கூறினார். இனிமேல் ரஜினி ரசிகர்கள் தான் எனது உறவினர்கள் என்றும் கூறினார். ( அப்பொழுது இன்னொரு துயரமான நிகழ்வையும் தெரிந்து கொண்டேன். சிறு வயதில் இருந்து தாய் , தந்தை இல்லாமல் வளர்ந்தவர் தான் நண்பர் விஜய் ). நானும் மிக்க மகிழ்ச்சி என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டேன்.

நேற்று மதியம் மணி 12. திரு.மாயவரத்தான் அவர்கள் மீண்டும் என்னை அழைத்தார். விஜய் அவர்கள் கடுமையான துயரத்தில் இருப்பதால், யாராவது அவரை அழைத்து வந்தால் நன்றாக இருக்கும் என்று தலைமை நினைக்கிறது. அந்த கட்டுரையை எழுதியே நீங்களே வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறினார். எந்த அளவிற்கு திட்டமும், யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்லெண்ணமும் கொண்டு மன்றம் இயங்குகிறது என்று பாருங்கள் !!! இதோடு விட்டு இருந்தால் பரவாயில்லை. "உங்களால் வர முடியுமா?? என்று? ஒரு வார்த்தை கேட்டு விட்டார். 25 ஆண்டு கால தவம். இப்படி ஒரு நாள் வராதா?? என்று நினைத்து ஏங்கி கொண்டிருக்கும் பல்லான கோடி ரசிகனில் நானும் ஒருவன். இதைவிட எனக்கு என்ன பெரிய வேலை இருக்க முடியும்?? அலுவலகம் இருந்தது. தலைவரின் அனைத்து படங்களையும் முதல் நாள்,முதல் காட்சி பார்க்க, உற்றார் உறவினர்கள் அனைவரையும் விண்ணுக்கு அனுப்பிய எனக்கு, இன்று ஒரு பொய்யை சொல்லிவிட்டு வரத் தெரியாதா ?? உடனடியாக அலுவலகத்திற்கு போன் செய்து ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டு, என் மனைவியிடம் இந்த விஷயத்தை கூறினேன்.

எங்களுக்கு பிள்ளை பிறந்த போது , அடைந்த மகிழ்ச்சியை மீண்டும் இருவரும் உணர்ந்தோம். குளித்துவிட்டு, காரை எடுத்துக்கொண்டு நண்பர் விஜய்யை கூட்டிச்செல்ல அவர் அலுவலகம் சென்றேன். (ஆம். நண்பர் விஜய் அந்த துயரத்தை மறக்க அலுவலகம் வந்து விட்டார்.) திருவேற்காட்டில் இருந்து ராகவேந்திரா மண்டபம் 14 கிலோமீட்டர். அந்த வழியில் தான் அவர் அலுவலகமும் உள்ளது. அப்பொழுது கடுமையான போக்குவரத்து நெரிசல். எனது கோவம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் மீது சென்றது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சரின் குலத்தொழிலை மனதிற்குள் மாற்றிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது பழைய நினைவுகள் வந்து சென்றன. நான் முதலில் பார்த்த ரஜினி படம், ரஜினி போல் வேஷம்யிட்டு மாறுவேடப் போட்டியில் நான் வென்ற பரிசுகள், ரஜினிக்காக எழுதிய கட்டுரைகள் என பலவும் என் மனதிற்குள் வந்து சென்றன. திடீரென்று எனக்கு அன்று ஆசிரியர்கள் தினம் என்பது ஞாபகத்திற்கு வந்தது.

சரியான நாளில்தான் தலைவரை சந்திக்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன். உருவம் வெற்றிக்கு தடையல்ல, மொழி வெற்றிக்கு தடையல்ல, ஊர் வெற்றிக்கு தடையல்ல என்று பல படிப்பினைகள் நமக்கு தலைவர் தான் கற்றுக் கொடுத்து இருக்கிறார். இந்த நாளில் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி என்று நினைத்துக் கொண்டேன். அதற்குள் விஜய்யின் அலுவலகம் வந்தது. மற்றொரு கடினமான நேரம். இதுவரை நான் அவரைப் பார்த்தது இல்லை. தொலைபேசியில் பேசி இருக்கிறேன் அவ்வளவுதான். வண்டியில் ஏறி அமர்ந்தார். சற்று நேரம் அமைதி. அந்த கொடுமையான சம்பவங்களை நினைவு படுத்தும் கேள்வியை தவிர்த்தேன். தலைவருக்கு ஏதாவது நான் பரிசு பொருள் வாங்கி வருகிறேன் என்று கூறி, ஒரு புத்தர் சிலையை வாங்கினேன் . " நீங்கள் முதல்வராக என் வாழ்த்துக்கள்" என்று எழுதி கிப்ட் பேக் செய்தேன்.

ராகவேந்திரா மண்டபத்திற்குள் நுழைந்தோம். அங்கு தூத்துக்குடி மக்கள் மன்றத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் இருந்தார். அன்று காலைதான் அவர் எப்படி உழைத்து முன்னுக்கு வந்தார் என்பது குறித்து படித்து இருந்ததால். அவர் மீது தானாக ஒரு மரியாதை வந்தது. உட்காருங்கள் என்றனர். எங்களுடன் மதுரை, நாகர்கோயிலில் இருந்தும் பலர் வந்தும் இருந்தனர். அனைவருக்கும் ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டது. அப்பொழுது அங்கு ரசிகர் ஒருவரின் 5 வயது மகன் அங்கு இருந்தான். நம் விஜய், அவனை கூப்பிட்டு உன் பெயர் என்னவென்று கேட்டார். அவன் அஜய் என்று கூறினான். விதி எப்படி விளையாடுகிறது என்று பாருங்கள். விஜய் அவர்களின் இறந்த மகன் பெயரும் அஜய் தான். மறுபடியும் மீளா துயரத்திற்கு சென்றார். இந்த மாதிரி என் பையனை நான் கூட்டிட்டு வந்து போட்டோ எடுக்கணும்னு பார்த்தேன், ஆனா அவன் மூலமாக தான் நான் தலைவரைப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை என்று கூறினார். அப்பொழுது தான் நான் நிகழ் உலகிற்கு வந்தேன். நாம் தலைவரைப் பார்க்கப்போவது ஒரு துயர சம்பவத்திற்கு என்ற எண்ணமே எனக்கு அப்பொழுது தான் வந்தது.

மறுபடியும் ஸ்டாலின் அவர்கள், தலைவர் அவர்கள் அனைவரையும் இல்லத்தில் சந்திக்க விரும்புகிறார். அங்கே வாருங்கள் என்று கூறினார். காரில் ஏறி போயஸ் கார்டன் நோக்கி சென்றோம். எங்களுடன் கன்னியாகுமாரி மாவட்ட பொறுப்பாளர் திரு ஆல்வின் அவர்களும் வந்தார். 15 நிமிடங்களில் தலைவரின் இல்லத்தை அடைந்தோம். ஆனால் 15 நாட்கள் பயணம் செய்வதைப் போல் உணர்ந்தேன். காரை நிறுத்தும் முன் அந்த இடத்தை பார்த்தேன். இங்கு தானே, தலைவரின் காரை நிறுத்தி, அவரை செல்ல விடாமல் செய்து, அவரின் அரசியல் நுழைவிற்கு பிள்ளையார் சுழி போட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன். அனைவரும் உள்ளே சென்று அமரவைக்கப்பட்டோம். எத்தனையோ முறை நான் தலைவரை பார்க்க வேண்டும் என்று பலரிடம் கெஞ்சி கேட்டபோதும் கிடைக்காத வாய்ப்பு, இன்று வேறொருவருக்கு உதவப்போக எனக்கு கிடைத்து இருப்பதை நினைத்தேன். இதுதான் ஆன்மீக அரசியல் என்று புரிந்து கொண்டேன்.

நாங்கள் போயஸ் கார்டனில், தலைவர் வீட்டில் உட்காரவைக்கப்பட்டு இருந்த அறையில் 15-20 நபர்கள் வரை ஏற்கனேவே இருந்தார்கள். பெரியத் தலைகள் பலர் இருந்தனர் ( திரு. இளவரசன், திரு.ராஜசேகர் உள்ளிட்ட பலர்). அந்த இடம் மிக பரபரப்பாக இருந்தது.(இருக்காதா என்ன? இன்னும் சில நாட்களில் முதல்வரின் இல்லமாக மாறப்போகும் ஒரு இடம் அது )அப்பொழுது அந்த அறையை சுற்றி நோட்டமிட்டேன். தலைவர் ரஜினி மற்றும் சிவாஜி கணேசன் அவர்கள் தலையோடு தலை முட்டிக்கொண்டு இருக்கும் ஒரு புகைப்படம் இருந்தது. கொள்ளை அழகு.அந்த புகைப்படத்தை நான் இன்டர்நெட்டில் பார்த்தது கிடையாது. புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் மொபைல் கருவியில் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளே அனுப்பப்பட்டதால் கண்ணியம் காத்தேன். ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் வேறு அங்கு இருந்ததால், தலைவரை சந்திக்கும் நேரத்தில் விஷ பரிட்ச்சையில் நான் இறங்க விரும்பவில்லை. விதி எண் 15-இந்த கீழ் இவனை வெளியேற்றுங்கள் என்று கூறினால், நொறுங்கிவிடும் என் கனவு கோட்டை. இங்கு நான் இதனை கொஞ்சம் நகைச்சுவையாக கூறினாலும், தலைமை ஒரு சிறு விதிமீறலையும் அனுமதிக்காமல், ராணுவக்கட்டுப்பாடோடு நடந்து வருகிறது. அதனால் விதியை மீறிவிட்டு தலைமையை குற்றம்சொல்வதில் எந்த பயனும் இல்லை.

நான் மேலே சொன்ன புகைப்படம் தவிர, மற்ற அனைத்துப் புகைப்படங்களும் நம் வீடு, மொபைல்,லேப்டாப் உள்ளிட்டவற்றில் இருப்பது தான். ஆனால் என்ன ஒன்று அந்த புகைப்படங்களுக்கு சொந்தக்காரர் இங்கு பக்கத்து அறையில் இருக்கிறார். அந்த நினைப்பு எனக்கு தோன்றியபோதே இது கனவா, நினைவா என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. நான் தலைவரை முதலில் பார்க்கும்போது என்ன பேச வேண்டும் , எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எல்லாம் பல நாட்கள் பயிற்சி செய்துள்ளேன். ஆனால் தற்பொழுது நான் சென்று இருக்கும் நேரம் அதற்கு எல்லாம் இடம் கொடுக்காது என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

தலைவர் வீட்டிற்கு சென்று வரும் பலர், தலைவரைப்பற்றி பேசி முடித்தவுடன், அங்கு கொடுக்கப்படும் மோரைப் பற்றிதான் பெருமையாக பேசுவார்கள். அந்த நேரத்தில் பணியாள் ஒருவர் அனைவருக்கும் மோர் கொண்டு வந்தார். இதனை மோர் என்று கூறுபவர்கள் வாயிலே அடிக்க வேண்டும். இல்லையென்றால் கடைகளில், வீடுகளில் நமக்கு மோர் என்ற பெயரில் ஏதோ ஒரு திரவத்தைக் கொடுத்து ஏமாற்றி இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவ்வளவு கெட்டி. அவ்வளவு சுவை. இன்னொரு க்ளாஸ் கேட்கலாமா? என்று நினைத்தேன். மறுபடியும் மன்ற விதிக்குள் சிக்கி விடுவோமோ என்ற பயம் வந்து விட்டது !! அமைதி காத்தேன். உள்ளத்தில் இருந்து சொல்கிறேன், அது போல் ஒரு மோரை என் வாழ்நாளில் குடித்தது கிடையாது. தலைவரைப்பார்க்க செல்லும்போது இருக்கும் பதட்டத்தை தனித்து, நம்மை திசை திருப்புவதற்கே அந்த சுவையான மோர் தரப்படுகிறதா? என்கின்ற எண்ணம் தோன்றியது.

அப்பொழுதுதான் அங்கு வந்து இருந்த 15 பேரின் விபரத்தையும் அறிந்து கொண்டேன். காலா இசைவெளியீட்டின் போது, தனது இரண்டு கால்களையும் இழந்த ரசிகர் மனைவியுடன் வந்து இருந்தார். அவருக்கு செயற்கைக்கால் மக்கள் மன்றம் சார்பாக வாங்கி கொடுத்ததும், அதனை தலைவர் கையால் தான் வாங்கி கொள்வேன் என்று வந்து இருந்தார். இரண்டு கால்களையும் இழந்த அவரை , நம் ரசிகர்கள் தூக்கி வந்து அமர வைத்தனர். மனம் மிகவும் வேதனைப்பட்டது. அவர் மனைவியிடம் விசாரித்தபோது, தலைவர் சார்பாக 5 லட்சம் ரூபாயும், மருத்தவ செலவும் ஏற்கனேவே ஏற்கப்பட்டுவிட்டதாக கூறினார். (இதுதான் தலைவரிடம் எனக்கு பிடிக்காத குணம். எல்லா உதவியையும் செய்து விடுவார். ஆனால் யாருக்கும் சொல்ல மாட்டார். நாம் இப்படி தேடி தேடி கண்டுபிடித்து எதிரிகளுக்கு பதில் சொல்ல வேண்டும். தலைவா!! ப்ளீஸ்!! இனிமேலாவது செய்யுறத வெளிய சொல்லுங்க). அவரிடம் சென்று பேசினேன். ஏன் சார், ஒரு கால்தான் வைக்குறீங்க ?? ரெண்டு காலையும் வைக்க வேண்டிதானே என்று கூறினேன். இன்னும் புண்ணு ஆறலை சார்!! என்னால முடியல!! என்று கூறினார். உங்களுக்கு எந்த உதவி வேண்டுமென்றாலும், ரசிகர் மன்றம் மூலமாக கேளுங்கள், நாங்கள் செய்கிறோம் என்று ஆறுதல் கூறினேன்.

அதற்கு பிறகு, தன் மகனின் கடைசி ஆசையான, அவன் வரைந்த ஓவியத்தில் தலைவரிடம் கையெழுத்து வாங்க வந்து இருந்த பெற்றோர், அடுத்ததாக ஒரு நபரை நான் பார்த்தவுடன் எனக்கு மிகவும் வியப்பானது. அவர் மேட்டுப்பாளையம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஷண்முகம். சென்ற வாரம் இவர் தன் ஊருக்கு செய்த நன்மைகளை யூடுப் வீடியோவில்(ரசிகர்கள் அனைவரும் காணவேண்டிய வீடியோ தொகுப்பு) பார்த்தபோது, இவரைப்போன்ற நபர்களைத் தலைவர் கூட வைத்துக்கொள்ள வேண்டும் என்று பல ரசிகர்கள் கூறினார்கள். இதையெல்லாம் பார்த்தபோது, தலைவர் அருகில் தற்பொழுது இருப்பவர்கள், சரியான செய்தியை தலைவரின் காதுகளுக்கு கொண்டு சேர்ப்பதும், ஆக்கபூர்வமான பணிகளை செய்வதும் நன்றாகத் தெரிந்தது. வெற்றிக்கான பாதை போடப்பட்டு விட்டது.

சிவாஜியில் ரஜினியைப்பார்த்து ஹனீபா கூறுவது போல, அங்கு ஒரு மினி அரசாங்கமே நடக்கிறது. நிவாரணம், ஆறுதல், உதவி, திட்டங்கள் என்று பல வேலைகள் நடக்கிறது.தமிழ்நாட்டில் மக்கள் எந்த பிரச்சனை என்றாலும் ரஜினியிடம் வருவதற்கு காரணம், அவர்கள் அறியாமை அல்ல. தலைவரை முதல்வருக்கு சமமான ஒரு மனிதராக கருதுவதால் தான். தலைவர் மேல் இருக்கும் உரிமையினால்தான் என்பது புரிந்தது.

பக்கத்து அறையில் சலசலப்பு கேட்டது. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே (கரெக்டா!! சொல்லிட்டேனா?? இப்போவது நம்புங்கப்பா, நான் DMK இல்லனு ), தலைவர் வந்துவிட்டார். எனக்கும் தலைவருக்கும் இடையில் ஒரு சுவர் தான் உள்ளது. ஆனால் பெர்லின் சுவருக்கு நிகரான ஒன்று. யாரையும் மீறி அவ்வளவு சுலபத்தில் அடுத்த அறைக்கு செல்ல முடியாது. முதலில் கால் இழந்த ரசிகரை அழைக்கிறார், கதவு திறந்து இரண்டு நொடிகளில் மூடப்படுகிறது. அநேகமாக அனைவரும் தலைவரின் முகத்தைப்பார்த்து விட்டார்கள்.விஜய் கூட பார்த்துவிட்டார். ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை. அவர் போட்டிருந்த சட்டையை மட்டும் பார்த்தேன். அடுத்து அந்த மாணவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற அழைக்கிறார். இந்த முறையும் என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு முன்பில் இருந்தே ஒரு பயம். விஜயை மட்டும் உள்ளே அழைத்து பேசிவிட்டு , என்னை அனுமதிக்காமல் விட்டுவிட்டால் என்ன செய்வது என்று. அதனால் கதவின் இடுக்கு வழியாகவாது தலைவரை பார்த்துவிட வேண்டுமென்று முடிவு செய்தேன். மறுபடியும் கதவு திறக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஷண்முகம் அவர்களை உள்ளே அழைத்தார்கள். இந்த முறை தலைவரை எப்படியும் பார்த்து விடுவது என்று உன்னிப்பாக பார்த்துக்கொண்டு இருந்தேன்.

அவர் கதவைத் திறந்து உள்ளே செல்லும்பொழுது, அது நிகழ்ந்துவிட்டது. யாரை 30 வருடமாக நான் பார்க்க தவம் கிடந்தேனோ, அவரைப்பார்த்து விட்டேன். ஆம்,தலைவரின் முகத்தைப்பார்த்து விட்டேன். கண்கள் விரிந்தன. முகம் மலர்ந்தது . அடுத்த நொடி கதவு பட்டென்று மூடப்பட்டது.திருப்பதியில் "ஜருகண்டி சொல்றவங்க கூட ஒரு 5 நொடிகள் நிக்க விடுவாங்கய்யா!!!" இங்கு இரண்டு நொடிகளில் கதவு மூடப்பட்டது. கண்களில் கேமரா பிடிக்கும் தொழில்நுட்பம் இல்லாததை கண்டு வருத்தப்பட்டேன்.

ஊராட்சி மன்றத் தலைவர் வெளியில் வந்தார். அடுத்து விஜய் உள்ள வாங்க!! என்றனர். என்னையும் கூட வர சொன்னார்கள். பெட்ரோல் விலை 20 ருபாய் ஆகி இருந்தால் கூட இவ்வளவு சந்தோசப்பட்டு இருக்க மாட்டேன். உள்ளே சென்றோம். தலைவர் அங்கு நிற்கிறார். நாம் தொலைக்காட்சிகளில் பார்ப்பதற்கும் , நேரில் பார


 
0 Comment(s)Views: 626

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information