Other Articles
தூத்துக்குடியில் தலைவர் ரஜினி அளித்த பேட்டியின் விபரம்
உன்னால் முடியும் தலைவா... உன்னால் மட்டுமே முடியும்....
தூத்துக்குடியில் சிகிச்சை பெறுபவர்களை பார்த்து கண்கலங்கிய ரஜினிகாந்த்
தலைவரின் அதிரடி நகர்வுகளும் பதிலடிகளும் - மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
தமிழ் இந்து கட்டுரைக்கு பதில்
rajinifans.com நிர்வாகிகளுள் ஒருவரான ராம்கியின் தலைவர் குறித்த பேட்டி
திருவள்ளூர் மாவட்டத்தில் www.rajinifans.com சார்பாக ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கியது
40+ வருடங்களாக ஓடும் ரஜினி என்ற வெற்றிக்குதிரை!
தென்னிந்திய நதிகளை இணைப்பதே என் வாழ்வின் ஓரே லட்சியம் : காலா படவிழாவில் ரஜினி பேச்சு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும
எனக்கு பின்னாடி இருப்பது கடவுளும் மக்களும்தான் ... பாஜக இல்லை
தமிழன் வளா்ந்தால் தான் தமிழ் வளரும் ...
மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்; நாம் எமது வேலைகளைப் பார்ப்போம்: ரஜினி
Rajinifans.com Admin நண்பர் கோபிக்கு கண்ணீர் அஞ்சலி
Malaysia Natchathira Vizha 2018 Photo Compilations
Superstsar Rajinikanth Fans Meet Photo Session December 2017
தெறிக்கவிட்ட தலைவர்! - இன்றைய நாள் நம் நாள்
ரஜினிக்கு உதவும் கமல்
துபாயில் உலகே வியக்கும் அளவுக்கு பிரமாண்டமாக நடந்த 2.ஓ படத்தின் இசை வெளியீட்டு விழா
ரஜினி ஒரு மகான் - இயக்குநர் பிரியதர்ஷன்

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
மக்கள் ரஜினியின் கருத்தை தான் ஏற்கிறார்கள் - ரஜினியை வீழ்த்த முடியுமா?
(Friday, 1st June 2018)

முந்தைய நாள் இரவு 9 மணிவாக்கில் ரஜினி தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார் என்ற செய்தி வந்ததில் இருந்தே சமூக வலை தள போராளிகளுக்கு வயிற்றில் நெருப்பைக் கட்டியது போல் இருந்திருக்கும்.. முதலில் ரஜினி பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை என்று சொல்லிப்பார்த்தனர், ரஜினி பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து சந்திக்க ஆரம்பித்தார் அடுத்து பொதுப்பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதில்லை என்றனர் ரஜினி அதையும் செய்ய ஆரம்பித்தார், இப்படியே பேசிக்கொண்டு மட்டும் தான் இருப்பார் களத்தில் இறங்கமாட்டார் என கம்பு சுத்தினர்.. இதோ இப்போது களத்திலேயே இறங்கப்போறார் என்ற கலக்கம் தான் அந்த வயிற்றெரிச்சலுக்கு காரணம்... 

அதற்குள்ளாக ரஜினி எதிர்ப்பாளர்கள் ஒன்றிணைந்து தூத்துக்குடியில் ரஜினியை அவமானப்படுத்த வேண்டும் என தங்களது பேஜ்களில் பரப்ப ஆரம்பித்தனர்..உண்மைத் தமிழனாக இருந்தால் சேர் செய்யுங்கள் என பல பதிவுகள் இடைப்பட்ட ஒரு இரவுக்குள்.. விடிந்த உடனே ரஜினி ரசிகர்கள் டிவியை ஆன் செய்திருப்பார்களோ என்னமோ போராளிகள் முதல் வேலையாய் அதை செய்திருப்பார்கள்... ரஜினியும் தெள்ளத் தெளிவாக நான் ஏன் தூத்துக்குடி போகிறேன் என பேட்டி அளித்தார்.. ஒரு நடிகனான என்னைப் பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்வார்கள் என்ற அவரின் கருத்து வேறு யாராலும் பேச முடியாத வெளிப்படையான கருத்து.. போகிற போக்கில் செயல் தலைவர் கஸ்டப்பட்டு ஓட்ட இருந்த போட்டி சட்டமன்ற படத்துக்கு ஒரு பன்ச் விட்டுவிட்டு சென்றதில் இணைய உபிஸ்களுக்கு ஏக வருத்தம்... 

சென்னை ஏர்போர்டில் அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு போராளிகளுக்கு பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்காது.. ஏன்னா தூத்துக்குடி ஏர்போர்ட்டில் தான் ரஜினிக்கு கறுப்புக் கொடி காட்டும் அளவுக்கு இணைய பிரச்சாரம் நடத்தப்பட்டிருக்கிறதே என்ற நம்பிக்கை... ஆனால் நடந்தது அப்படியே உல்டா.. வாகை குளம் விமான நிலையம் இதுவரை பார்த்திராத மனிதத் தலைகளை முதன்முதலாக அன்றைக்குத் தான் கண்டிருக்கும்.. தலைவா,தலைவா எனற கோசமும் நாளைய முதல்வர் வாழ்க கோசமும் விண் அதிற முழங்க ஓப்பன் காரில் சில கிலோமீட்டர்கள் ரஜினி கையசைத்தவாரே பயணித்ததைக் கண்டு எல்லா செட்டிங்கும் வேஸ்டாப் போச்சே என போராளிகள் டிவியை ஆப் செய்திருப்பார்கள்.. விரக்தியின் உச்சத்திற்கே சென்றிருப்பார்கள்.. சரி சமாளிக்கணுமே அப்டிணு கீர்த்தி சுரேஸ் போனாலும் இவ்ளோ கூட்டம் வரும்டா என கம்பு சுத்த ஆரம்பித்தனர்... ஆமாம் டா கீர்த்தி சுரேஸை விட பெரிய நடிகரான கமலும் அதே விமான நிலையத்திலிருந்து தான் சென்றார் என்றால் பதிலிருக்காது.. அப்புறம் இந்த இடத்தில் ஒரு க்ளாரிட்டி: சும்மா சும்மா செலிப்ரட்டி வருகைக்காக கூடும் கூட்டத்தோடு ரஜினிக்கு கூடும் கூட்டத்தை ஒப்பிட்டு மனதை தேற்றிக்கொள்கின்றனர்..கமலும் ரஜினிக்கு நிகரான செலிபிரட்டி என்பதை வசமாக மறந்துவிடுகின்றனர்.. மற்ற மாவட்ட ரசிகர்கள் சுங்கச்சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.. தூத்துக்குடி நகரத்துக்கு உள்ளேயும் நிர்வாகிகள் தவிர யாருக்கும் அனுமதி இல்லை..அப்படி இருந்தும் மருத்துவமனை அருகே பெருமளவு பொதுமக்கள் கூட்டம் அவரை வரவேற்றது ஆச்சர்யம்..


மருத்துவமனைக்கு உள்ளே செல்கிறார்.. இதுவரை சென்ற எந்த தலைவருக்கும் பாசிட்டிவ் ரிசப்சன் கிடைக்கவில்லை.. சீமான்,கமல்,ஸ்டாலின்,ஓ.பி.எஸ் என யாருக்கும்.. ரஜினிக்கும் அப்படித் தான் நடக்கும் என காத்திருந்த போராளிகளுக்கு அங்கே கிடைத்த இன்முக வரவேற்பு அப்போதே ஜெலுசில் தேடவைத்திருக்கும்.. அதிலும் பெண்கள் ரஜினியின் கரத்தை பற்றி நீங்கள் தான் எங்களை மீட்க வேண்டும் என்ற தொணியில் நெகிழ்ச்சியாக பேசியதைப் பார்த்து நிறைய போராளிகளுக்கு ரத்தக்கண்ணீர் வந்திருக்கும்.. ஒரு ரஜினி ரசிகர் நீங்கள் தான் முதலமைச்சர் என சொல்ல அதற்கு அரங்கமே கைதட்ட சோள முத்தா போச்சா என போராளிகள் மைண்ட் வாய்ஸ் ரஜினி ரசிகர்களுக்கு சத்தமாகவே கேட்டிருக்கும்..

அப்புறம் தான் ஒரு ட்விஸ்ட். அங்கே சென்ற எல்லாரிடமும் அரசியல் பேசிய ஒரு இளைஞன் கொஞ்சமும் இங்கிதம் இல்லாமல் யார் நீங்க, 100 நாளா ஏன் வரல என்று கேட்ட நிகழ்வு அரங்கேறுகிறது.. இல்லை அரங்கேற்றப்படுகிறது.. வராது வந்த மாமணியாய் இந்த வாய்ப்பு கிடைக்கவே போராளிகள் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டனர்.. எங்கிருந்து உத்தரவு வந்ததோ இல்லை பேமண்ட் வந்ததோ போட்றா ட்ரெண்டிங்க என நான் தான் பா ரஜினி என்ற ஹேஸ்டாக்கில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர்.. அதாவது இதுவரை ரஜினிக்கு கிடைத்த அத்தனை பாசிட்டிவ் வைப்ரேசனையும் இந்த சிறு நிகழ்வால் மறைக்க ஆரம்பித்தனர்.. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர்.. ( சமூக வலை தளத்தில் மட்டும் ) ஏன்னா தலைகீழா நின்னு தண்ணி குடித்தாலும் வலைப்பக்கம் தாண்டி களபக்கத்தில் எதுவும் செய்ய முடியாது என்பது இணையப் போராளிகளுக்கு காலையிலேயே தூத்துக்குடி விமான நிலையத்தில் ரஜினியால் காட்டப்பட்டுவிட்டது..

அதன் பின் ஹோட்டலில் வைத்து செய்தியாளரை சந்தித்த போது தனது வழக்கமான வெளிப்படை தன்மை பேச்சால் போராட்டம் மக்களால் முன்னெடுக்கப்பட்டு அமைதியாக நடந்தது.. புனித போராட்டம் ஆனால் கடைசியில் சமூக விரோதிகளால் வன்முறைக்களமாக மாறி துப்பாக்கிச் சூட்டில் முடிந்துவிட்டது என உண்மையை பேசினார்.. கேட்ட கேள்வியவே வேறு வேறு விதத்தில் கேட்டு கேட்டு அவரை கோபப்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்தில் நிருபர்கள் கேட்க ஆரம்பித்தனர்.. ரஜினியும் மனிதன் தானே.. சென்னை ஏர்போர்டில் கொஞ்சம் காட்டிவிட்டார்.. உடனே இதையும் பிடித்துக் கொண்டது இணைய உலகம்.. அவர் பேசிய 15 கருத்துகளில் போராட்டம் குறித்த கருத்தையும்,,அவரின் இந்த கோபத்தையும் மட்டும் பெரிதாக்கி செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு இந்த ஊடகங்களும் அதற்கு துணை போயின..  ரஜினி விசயத்தில் எது செய்தியாக வேண்டும் என்பது மேலிருந்து வரும் அஜெண்டாவை பொறுத்தது தானே..?

சமூக ஊடகங்களை பொறுத்தவரை ரஜினிக்கு ஆதரவு குறைவு. திமுக,தமிழ் தேசிய லாபி அதிகம். போதாக்குறைக்கு பா.மக, கமல் ஆதரவாளர்கள், விஜய் அஜீத் ரசிகர்கள் என ரஜினியை பிடிக்காதவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு நிற்பார்கள்... இதில் ஆச்சர்யம் என்ன என்றால் அத்தனை பேரின் எதிர்ப்புகளுக்கும் ரஜினி ரசிகர்கள் சலைக்காமல் பதிலடி கொடுப்பது தான்.. கொஞ்சம் கொஞ்சமாக ரஜினிக்கு தூத்துக்குடியில் ஏதோ பெரிய எதிர்ப்பு நிலவியது போல கட்டமைக்க ஆரம்பித்தனர்..ஊடகங்களும் உதவி செய்தன..


நேரம் ஆக ஆக நடுனிலையாளர்கள் ரஜினி பேசியதில் என்ன தவறு என கேட்க ஆரம்பித்தனர். அத்தனை எதிர்புக்கு பிறகும் தான் வைத்த கருத்தில் உறுதியாக நிற்கும் ரஜினியை பாராட்ட ஆரம்பித்தனர்.. ரஜினி பேச்சு தவறு என்று சொன்ன சமூக வலைதளம் மறு நாளே ரஜினி பேசியதில் என்ன தவறு என கேட்க ஆரம்பித்தது. தந்தி டிவி, சினிமா விமர்சகர்கள் என அத்தனை பேர் நடத்திய கருத்துக் கணிப்புகளிலும் ரஜினி கருத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.  ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பின் சமூக வலைதளத்தில் ரஜினியின் ஒரு எதிர்மறை கருத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது இதுவே முதல் முறை.. இதை ஏன் பெரிதாக குறிப்பிடுகின்றேன் என்றால், ஆதரவு வாக்குகள் ரஜினிக்கு மட்டும் விழுபவை.. ஆனால் எதிர்ப்பு ஓட்டுகள் திமுக,தமிழ் தேசியம், விஜய் அஜீத் ரசிகர்கள், கமல் ஆதரவாளர்கள் என பலபேரின் கூட்ட்டணி கொண்டு விழுபவை..அதையும் தாண்டி இவ்விசயத்தில் ரஜினி மட்டும் வீழ்த்தியது பெரிய விசயம்.. இதிலிருந்து வரும் காலங்களில்  இன்னம் கொஞ்சம் முனைப்பு காட்டினால் சமூக வலைத்தள ஆதரவையும் தன் வசப்படுத்துவார் என்பதை கெஸ் செய்யலாம்.. ஆனால் இதில் கொடுமை என்ன என்றால் இந்த ஒட்டுமொத்த களேபரத்தின் ஒரே பேசு பொருள் ரஜினி மட்டும் தான்.. போட்டி சட்டசபை நடத்திய செயல் தலைவர் அமுங்கிப்போனார் ரஜினி சுனாமியில்.. 


இப்போது ரஜினி கருத்துக்கு வருகிறேன்.  மக்களை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு வரும் ரஜினி ,அவர்கள் உள்ளம் குளிரும் படி பேசிவிட்டு வந்திருக்கலாம்.. ஆனால் தன் மனதில் தோன்றியதை வெளிப்படையாய் சொல்லிவிட்டு வந்தார்.. மக்கள் போராட்டத்தில் கவனமாய் இருக்க வேண்டும்.. சமூக விரோதிகள் ஊடுறுவி போராட்டத்தை திசை திருப்பினால் பாதிக்கப்படப்போவது அப்பாவி பொதுமக்கள் தான்.. எனவே கவனம் தேவை.. எதற்கெடுத்தாலும் போராடும் எண்ணத்தையும் கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.. துப்பாக்கிச்சூட்டுக்கு நீதி விசாரணை கோரவில்லை, சுட்டவர்களை கண்டிக்கவில்லை என வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள் போராளிகள்.. அவர் ஏற்கனவே கண்டித்துவிட்டார்.. மிருகத்தனமானது என்றும் சொல்லிவிட்டார்.. ஆனால் ஒன்றை மட்டும் வசதியாக மறந்துவிடுகின்றனர்..இதுவரையிலான  அரசின் துப்பாக்கிச்சூடுகளில் எதற்கு நீதி கிடைத்திருக்கிறது? எத்தனை போலீஸ்காரரகள்  தண்டிக்கப்பட்டுள்ளனர்? இல்லவே இல்லை.. அரசு நீதி வழங்காது.. ஒரு கண்துடைப்புக்கு விசாரணை செய்யும்.. இது தான் நடைமுறை.. அதை தெரிந்து தான் ரஜினி மக்களை எச்சரிக்கிறார்.. அது சரி ,தவறு என்பது இரண்டாவது.. நாளைக்கு அவர் ஆட்சியில் நீதி விசாரணைகள் நேர்மைப்படுத்தப்படலாம்.. ஆனால் கலவரம் ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தால் பாதிக்கப்படப்போவது அப்பாவி பொதுமக்கள்.. சமூக விரோதிகள் (/போலீசாக கூட இருக்கலாம் )  எளிதாக தப்பித்துவிடுவார்கள்.. உதாரணத்துக்கு தூத்துக்குடி கலவரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்? 144 தடை உத்தரவு போட்டிருக்கும் போது நீதிமன்றம் சென்று அதை நீக்கி பின் பேரணியை நடத்தியிருக்கலாம் தானே..? எனவே தான் அவர் திரும்ப திரும்ப மக்களை எச்சரிக்கிறார்.. மற்ற தலைவர்களில் இருந்து தனித்து தெரிவது இதனால் தான்...


இறுதியாக , ரஜினியின் நடவடிக்கைகள் திமுக உபிஸ்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.. இன்னும் ஏற்படுத்தும் .ஏனென்றால் ரஜினி vs ஸ்டாலின் என்பது தான் வரும் தேர்தல் களம்.. எனவே இணைய உபிஸ்கள் ரஜினியை  எவ்வளவு மட்டம் தட்ட முடியுமோ அவ்வளவு மட்டம் தட்டுவர், எதிர்மறை செய்திகளை பரப்புவர்.. ரஜினி ரசிகர்கள் பதற்றமடைய வேண்டாம்.. ரஜினியின் குரலில் உண்மை இருக்கிறது.. எப்போதும் இருக்கும். எனவே மக்களிடம் அவர் செல்ல செல்ல தானாகவே ரஜினி அலை தமிழ்கம் முழுதும் உருவாகும்.. அவரை தமிழக முதல்வர் நாற்காலியில் அமர்த்தும்.. எத்தனை ரஜினி ரசிகர்கள் அன்று மாலை விரக்தி அடைந்தனர் என்பது எனக்கு தெரியும்.. என்னடா தலைவர் இப்படி பேசிட்ட்டாரே இப்போ என்ன செய்ய என்று.. ஆனால் இன்று நடந்தது என்ன.?. மக்கள் ரஜினியின் கருத்தை தான் ஏற்கிறார்கள்.. இது போல தான் ரஜினியின் ஒவ்வொரு கருத்தும்.. ரஜினியின் பாசிட்டிவ் விசயங்களை மக்களிடம் கொண்டு சேருங்கள்.. அவர் மக்களை நெருங்க நெருங்க மீதியை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.. ரஜினியை யாராலும் வீழ்த்த முடியாது என்பதை அவர்களே காலத்துக்கும் நமக்கும் உணர்த்துவார்கள்... 

- Jeyaselan


 
0 Comment(s)Views: 8081

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information