Related Articles
தலைவரின் அதிரடி நகர்வுகளும் பதிலடிகளும் - மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
தமிழ் இந்து கட்டுரைக்கு பதில்
rajinifans.com நிர்வாகிகளுள் ஒருவரான ராம்கியின் தலைவர் குறித்த பேட்டி
திருவள்ளூர் மாவட்டத்தில் www.rajinifans.com சார்பாக ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கியது
40+ வருடங்களாக ஓடும் ரஜினி என்ற வெற்றிக்குதிரை!
தென்னிந்திய நதிகளை இணைப்பதே என் வாழ்வின் ஓரே லட்சியம் : காலா படவிழாவில் ரஜினி பேச்சு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடுமï¿
எனக்கு பின்னாடி இருப்பது கடவுளும் மக்களும்தான் ... பாஜக இல்லை : ரஜினி
தமிழன் வளா்ந்தால் தான் தமிழ் வளரும் ...
மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்; நாம் எமது வேலைகளைப் பார்ப்போம்: ரஜினி

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
தூத்துக்குடியில் சிகிச்சை பெறுபவர்களை பார்த்து கண்கலங்கிய ரஜினிகாந்த்
(Wednesday, 30th May 2018)

தூத்துக்குடிக்குக் கிளம்பும் முன்னும், தூத்துக்குடியிலும் செய்தியாளர்களிடம் தலைவர் பேசிய பேச்சு பட்டாசு ரகம்!

இதுநாள் வரை செய்தியாளர்களிடம் ஒருவிதமான நழுவல் போக்குடனேதான் பேசிக் கொண்டிருப்பார் அவர். இன்றைக்கு காலையில் அந்த போக்கில் இனி வித்தியாசத்தைப் பார்க்கலாம் என்பதைக் கணிக்க முடிந்தது.

”அங்கே யாரைப் போய் பார்க்கப் போகிறீர்கள்?” என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு.. ‘யாரைப் போய்....” என்று பதிலுக்கு ஒரு லுக் விட்டவாறே கேட்டாரே.. அது செம்ம!

”ஒரு நடிகனாக தூத்துக்குடி செல்கிறேன்” என்று அவர் கூறியதில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

“கமல்ஹாசன் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்திய போது ஏன் செல்லவில்லை?” என்ற போது ‘நான் இன்னும் அரசியல் கட்சியே ஆரம்பிக்கலைங்க” என்று கூறியிருந்தார். தூத்துக்குடியில் சென்று பார்ப்பதற்கு அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டுமென்றில்லை.

நண்பரொருவர் “பேசாம சக மனிதனாகப் பார்க்கச் செல்கிறேன்” என்று கூறியிருந்திருக்கலாம் என்றார். நாளை கட்சி ஆரம்பித்த பிறகு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் “ஏன் செல்லவில்லை?” என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். எல்லாவற்றுக்கும் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. அது சரியும் அல்ல. எனவே அவரின் இன்றைய இந்த பதில் அருமை.

தமிழக அரசை ராஜினாமா செய்யச் சொல்வீர்களா என்ற கேள்விக்கு ‘அது சரியில்லைங்க’ என்றார் தலைவர்.  ஜெ.வின் முதல் தடவை ஆட்சியின் போது, “இனி ஜெ. ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது” என்று கூறிய போது கூட அப்போதைய ஆட்சியை அவர் பல தடவை விமர்சித்தாறே தவிர, அதனை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒருபோதும் சொன்னதில்லை.

சமூக விரோத சக்திகளை ஜெ. இரும்புக் கரம் கொண்டு அடக்கி வைத்திருந்தார் என்பது நிதர்சனமான உண்மை. 

திமுக தலைவர் கருணாநிதியையும், மறைந்த ஜெ.வையும் பற்றி அடிக்கடி அவர் நல்லவிதமாகவே பாராட்டிக் கொண்டிருக்கிறார்.

தூத்துக்குடிக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் சென்று வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத பெரிய வரவேற்பும், உற்சாகமும் ரஜினியின் விசிட்டில் காண நேர்ந்தது.

அங்கே மருத்துவமனையில் ஒரு இளைஞர், “யார் நீங்க?” என்று கேட்டு “100 நாட்களாக போராட்டம் நடத்திய போது சென்னை தூரத்திலே இருந்ததா?” என்று கேட்ட விடியோவை சிலர் வெளியிட்டு, ‘ரஜினிக்கு தூத்துக்குடியில் எதிர்ப்பு’ என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஐயோ பாவம்.. அவரை யாரென்று கூடத் தெரியாத அந்த இளைஞன். 

மீதி 99 பேருக்கு தலைவரைப் பற்றி தெரிந்திருக்கிறது. அதனால்தான் வேறு யாருக்கும் கொடுக்காத உற்சாக வரவேற்பை தலைவருக்குத் தந்தார்கள். அவரும் வழக்கம் போல தன் மனதில் பட்டதைப் பேசிவிட்டு நிதியுதவி வழங்கித் திரும்பியிருக்கிறார்.

டிசம்பர் 31-ம் தேதி பேச்சின் போதே அவர் ஒன்றைக் குறிப்பிட்டார்.. “சமூக வலைதளங்களில் பல எதிர்மறைக் கருத்துகள் பகிருவார்கள்” என்று. அதைத்தான் பலரும் செய்து கொண்டிருக்கிறார்கள். 

களத்தில் உள்ள மக்களுக்கும், இங்கே கம்பு சுத்தும் வெட்டிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை மறைந்த முதலமைச்சர் ஜெ. முழுவதும் உணர்ந்திருந்தார். அதனால்தான் இங்கே பலரும் பொங்கல் வைத்ததையெல்லாம் மீறி அவர் தொடர்ந்து வெற்றி பெற்றே வந்தார். 

தலைவருக்குக் களத்தில் பெரும்பான்மை மக்களிடம் மதிப்பும், மரியாதையும், எதிர்பார்ப்பும், வரவேற்பும் நிறையவே இருக்கிறது.

எனவே தேர்தல் அரசியலாகட்டும்.. வெகுஜன அபிமானமாகட்டும்.. அனைத்திலும் தோற்றுப் போன செல்லாக்காசுகள் மற்றும் அவர்களின் அல்லக்கைகளின் புலம்பல்களைக் கண்டு கொள்ளாமல் ஒதுக்கித் தள்ளி.. மக்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்போம். மக்கள் எப்போதும் நம் பக்கம்!

- மாயவரத்தான் கி. ரமேஷ்குமார்






 
0 Comment(s)Views: 475

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information