 தமிழ்த் திரையுலகினர் போராட்டத்தில் பங்கேற்கச் செல்லும் முன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக கூறிய பின்பும் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டினார்.
1. காவேரி மேலாண்மை வாரியம்" (Cauvery Management Board) அமைக்கனும்னு நீதிமன்றம் எப்பவோ சொல்லிட்டாங்க.. ஆனா கர்நாடகா இதுக்கு Accept பன்னல! I request MODI to Fasten the process.. காலத்தை வீணாக்காம உடனே அதை செய்யனும். இல்லன்னா மக்களோட கோபத்துக்கும் அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாகும். தமிழக மக்களின் ஒரே வலுவான கோரிக்கை காவிரி மேலாண்மை வாரியம்.
இன்னொரு விஷயம்.. இங்க நம்ம யாருக்காக போராடுறோம் பாக்கனும். 50 60 ஏக்கர் நிலம் வெச்சி இருக்குறவங்களுக்காக நம்ம பன்னல! கால் ஏக்கர் அறை ஏக்கர் முக்கால் ஏக்கர் மட்டுமே வைத்து இருக்குற ஏழை விவசாயிகளுக்காக பன்றோம்! SO, அவங்கள முன்னிறுத்தி இந்த போராட்டங்கள செய்யனும். ஊடகங்கள் நீங்களும் அவங்கள முன்னிலை படுத்தி காட்டனும்!

2. STERLITE பற்றி நான் சில விஷயங்கள் சொல்லனும். இயற்கை தான் இறைவன்! ஆகாயம், பூமி, காற்று, நீர் போன்ற பஞ்ச பூதங்கள யாரு மாசுபடுத்தினாலும் அது தப்பு. இயற்கைய அழிக்குற எந்த விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. STERLITE நிறுவனம் TWITTER-ல எனக்கு respond பன்னிருந்தாங்க. ஆனா அந்த பதில்ல எனக்கு உடன்பாடு இல்ல
3. IPL.... இந்த மாதிரி தமிழகத்துல காவிரி பிரச்சனை பெருசாக இருக்கும் நேரத்துல IPL அவசியமா அப்படினு ஒரு கருத்து இருக்கு. அதை முழுசா நிறுத்த முடியலனா நம்ம CSK Team players ஒரு கருப்பு badge அனிந்து கண்டனத்த தெரிவிக்கலாம். அது உலகம் முழுக்க IPL பாக்குற மக்கள சென்று சேரும்
4. VICE CHANCELLOR பதவி என்பது ஒரு அரசுப்பதவி. இதுக்குள்ள அரசியல கொண்டு வரக்கூடாது. இந்திய நாட்டுல யாரும் எங்கயும் வேலை செய்யலாம்! ஆனா Already இங்க காவிரி பிரச்சனை போயிட்டு இருக்குற நேரத்துல இத செய்யாம இருந்திருக்கலாம்..WRONG TIMING அப்படிங்குறது என்னோட அபிப்பிறாயம்!
5. கமல்-அ நான் எதிர்க்க மாட்டேங்க. அவர் எனக்கு எதிரியே கிடையாது. ஏழ்மை, லஞ்சம், ஊழல், விவசாயிகளின் கண்ணீர், மீனவர்களின் கண்ணீர், இலங்கை அகதிகளின் கண்ணீர், வேலையில்லா திண்டாட்டம் இதெல்லாம் தான் என்னோட எதிரி. கமல் இல்ல!
|