அரசியல் கட்சி தொடங்கவுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மிக சுற்றுப்பயணமாக கடந்த 10-ஆம் தேதி இமயமலைக்கு சென்றார். காவிரி மேலாண்மை ஆன்மிக பயணம் முடித்து விட்டு இமயமலையிலிருந்து இன்று சென்னை திரும்பினார் ரஜினி.
அப்போது அவர் போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதை எவ்வளவு சீக்கரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அமைக்க வேண்டும்.
தமிழக அரசும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஏப்ரல் 14-ஆம் தேதி கட்சி கொடி, கட்சி பெயர் அறிவிப்பு இல்லை என்றார் ரஜினி. சினிமா துறையில் மட்டுமல்லாமல் எந்த ஒரு பிரச்சினைக்கும் வேலைநிறுத்தம் என்பது தீர்வாகாது என்பதை நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன்.
பின்னர் ஆன்மிக பயணத்தின்போது அரசியல் பேச வேண்டாம் என்று கூறிவிட்டு பாஜக தலைவர்களை சந்தித்தது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் என் பின்னால் பாஜக இருப்பதாக கூறுகின்றனர். அது தவறு. என் பின்னால் கடவுளும், மக்களும்தான் உள்ளனர் என்றார்.
அவரிடம் ஏப்ரல் மாதம் கட்சி தொடக்கம் என்ற தகவல் நிலவுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ரஜினி அதை மறுத்தார். ஏப்ரல் 14-ஆம் தேதி கட்சி தொடங்குவது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இல்லை என்றார்.
ரஜினிகாந்த் இமயமலை படங்கள்
|