இனியும் தூத்துக்குடியில் தொழில் நடத்தணும்ன்னு நினைச்சா நீயெல்லாம் மனுஷனே இல்லப்பா... நடத்தவும் முடியாது... Sterlite முதலாளிக்கு எச்சரிக்கை
புனித போராட்டம் - Sterlite மக்கள் போராட்டம். அதில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
காவல் துறை மீது கை வைப்பது தவறு தான்..
அன்னிக்கும் இன்னிக்கும் என்னிக்கும் நான் அந்த தப்பை ஒத்துக்க மாட்டேன்
விவசாயம் இல்ல... காரணம் தண்ணீர் இல்ல.. இப்போ போராட்டம் பண்ணி இளைஞர்களுக்கு வரும் வேலை வாய்ப்பை இழக்க செய்யும் போராட்டம் போராட்டம் என்று தமிழ் நாட்டை சுடுகாடு ஆக்கிட கூடாது
தூத்துக்குடி போராட்டம் வன்முறையாக்கிய சமூக விரோதிகளை அரசு... காவல் துறை அடையாளம் கண்டு சொல்ல வேண்டும்..
டிவி பேப்பர் எல்லாவற்றிலும் போட வேண்டும்..
எனக்கு தெரியும் ஒலித்த தலைவரின் குரலின் உறுதி அவர் கையில் எதோ ஆதாரம் சிக்கி இருக்குமோ என ஒவ்வொரு தமிழனையும் எண்ண செய்கிறது
தடி எடுப்பவன் எல்லாம் தண்டல்காரன் என்பதை தடுக்க சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
வாஞ்சையாக கைகளை பிடித்த தாய்மார்கள்... நீங்க வரணும் என உணர்ச்சி பெருக்கில் காயங்களின் வலியினோட அவரை பார்த்த மகிழ்ச்சியில் புன்னகை பூத்த சாமானிய முகங்கள்...
மாநில துணை முதல்வர்....எதிர்க்கட்சி தலைவர்... தேசிய விருது பெற்ற மூத்த சினிமா மற்றும் சின்னத் திரை தொகுப்பாளர் இவர்கள் மற்றும் இன்ன பிற பிரபலங்கள் எல்லாம் வந்த போது எல்லாம் எந்த கேள்வியும் கேட்காத தம்பி...
நீங்க யாருன்னு கேட்டு...இவ்வளவு நாளா எங்கே இருந்தீங்கன்னு கேட்டதை வச்சு பாத்தா தெரியலையா களம் தேடும் தலைவன் யார் என்று...
ஆயிரம் கரை வேட்டிகள் வந்து போனாலும் இவர் வராதது தான் அவர்கள் வருத்தம்...இன்றைய தலைவரின் தூத்துக்குடி பயணம் அவர்களது கவலையைப் போக்கும் என்பது நிச்சயம்...
அரசாங்க பணம் கொடுப்பதோ... கொள்ளையடித்த காசை விட்டு எறிவதோ எளிது.. தான் உழைத்து சேர்த்த காசை கொடுக்க மனம் வேண்டும்... தர்மதுரைகளுக்கு உண்டான குணம் அது.... ஆதரவற்ற அந்த தியாகிகளின் குடும்பங்களுக்கு நிதி வழங்கியது முற்றிலும் நல்ல எண்ணத்தின் வெளிப்பாடு...
சுத்தி சுத்தி வளைச்சு வளைச்சு வார்த்தை வியாபாரம் செய்யும் ஊடகத்தை மென்மையாக பின் வன்மையாக என கையாண்ட முறை கெத்து
அண்ணே தூத்துக்குடி இப்போ டிடிவி பக்கம்ண்ணே... போன வாரம் செம்ம கூட்டம் காட்டிட்டாருண்ணே..
இரண்டு வாரங்களுக்கு முன் தூத்துக்குடி பயணத்தில் என் தம்பி சொன்னது...
தலைவர் எல்லாம் வந்தா தாண்டும்டா.. நான் வழக்கம் போல சொன்னேன்.
அவன் நமுட்டு சிரிப்பு சிரித்தான். எனக்கு புரிந்தது.
சரியா இரண்டு வாரம் கழித்து இன்று நண்பகலில் அவனிடமிருந்து ஒரு அழைப்பு..
அண்ணே... என்ன இது இவ்வளவு கூட்டம்... கார் போயிட்டேலா இருக்கு... தலைவரு தூத்துக்குடிக்கு வந்துருக்காராம்லா...
கெத்து காட்டிட்டாங்கலா.. டிடிவி எல்லாம் தாண்டி அள்ளுது மாஸ்.. தலைவரு தலைவரு தான்...
வாகைக்குளம் விமான நிலையத்தில் மூன்று மாவட்ட தலைவர் காவலர்கள் நிறைந்து நின்றது மாவட்டமெங்கும் மக்கள் அலையென திரண்டது பெரிய சின்ன என்ற பேதமின்றி அனைத்து கட்சிகளின் அடி வேரை ஆட்டி தான் பார்த்து இருக்கிறது
முத்து நகரின் வழிகள் எங்கும் மக்கள் தலைவரை உற்சாகமாக வரவேற்க உப்பிட்ட தமிழ் மண்ணின் காயங்களுக்கு இன்று மருந்திட்டு வந்திருக்கிறார் தலைவர்...
#உன்னால் முடியும் தலைவா...உன்னால் மட்டுமே முடியும்....
#நான் தான்பா ரஜினிகாந்த்
#ban sterlite #தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்றம்
தூத்துக்குடி மாவட்ட மன்ற தலைமைக்கு special வாழ்த்துகள்.. கலக்கிடீங்க !
- DEV
|