தூத்துக்குடியில் தலைவர் ரஜினி அளித்த பேட்டியின் விபரம்.
"அனைவருக்கும் வணக்கம். மருத்துவமனைக்குப் போய் பாதிக்கப்பட்டவர்களை பார்த்துட்டு வந்திருக்கேன். 6, 7 குடும்பத்தினர்களை மட்டும் பார்க்க முடியலை. எல்லோரையும் பார்க்கும்போது மனசு கஷ்டமாக இருக்கு. நிறைய பேர் பிரம்மை பிடித்தது போல் இருக்கிறார்கள். நிறைய பேர் பயந்திருக்கிறார்கள். நிறைய பேர் சோகத்தில் இருக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு சம்பவம் இனிமேல் நடக்கவே கூடாது.
ஒரு நல்ல விஷயத்துக்காக மக்கள் 100 நாள் போராட்டம் நடத்தினாங்க. கலெக்டர் ஆபிஸை தாக்கியது, குடியிருப்புப் பகுதிகளை எரிச்சது அப்பாவி மக்கள் கிடையாது. நிச்சயமாக விஷக்கிருமிகள், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள். அவங்களுடைய வேலைதான் இது போராட்டம் நடத்தும்போது ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். தமிழ்நாட்டில் சமூக விரோதிகள் ஜாஸ்தியாகிட்டாங்க. ஜல்லிக்கட்டில் கூட அப்படித்தான் நடந்தது. இந்த புனிதமான போராட்டத்திற்கு வெற்றி கிடைச்சா கூட, ரத்தக்கறையோடுதான் முடிந்திருக்கிறது.
இதற்குக் கரணமான விஷக்கிருமிகளை, சமூக விரோதிகளை அரசாங்கம் இரும்புக்கரத்தோடு அடக்கணும். அந்த விதத்தில் மறைந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களை பாராட்டுகிறேன். சமூக விரோதிகளை அடக்கி வெச்சருந்தாங்க. ஆளும் அரசு, இவ்விஷயத்தில் அவர்களை பின்பற்றி, சமூக விரோதிகளை அடக்கி வைக்கவேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டிற்கு மிகவும் ஆபத்து.
ஸ்டெர்லைட் ஆலையைப் பொறுத்தவரை இனி திறக்கப்படப் போவதில்லை. அரசாணை வெளியிட்டு, பூட்டிவிட்டடார்கள். அந்த நிறுவனம் நீதிமன்றத்திற்கு போனால், அவங்க மனுஷங்களாகவே இருக்க முடியாது. நீதிமன்றத்தில் இருப்பவர்களும் மனுஷங்கதான். அங்கே ஜெயிக்க முடியாது. ஜெயிக்கவும் விடக்கூடாது. மக்கள் சக்திக்கு முன்னால் எந்த சக்தியையும் ஒன்றும் செய்ய முடியாது. ஸ்டெர்லைட் நிர்வாகிகள் உண்மையான மனிதர்களாக இருந்தால், இத்தனை உயிர்ப்பலிக்கு பின்னர், இத்தனை பேர் அடிபட்ட பின்னரும் நிறுவனத்தையும் திறக்கணும்னு நினைக்கக்கூடாது. நிச்சயமாக எந்த அரசாக இருந்தாலும் அதை அனுமதிக்கவும் கூடாது.
அடிக்கடி நிறைய பேராட்டங்கள் நடந்துட்டிருக்கு. சில போராட்டங்கள் நல்ல விஷயத்துக்காக நடக்கிறது. சில போராட்டங்கள் தூண்டப்படுகிறது. மக்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். தமிழ்நாடு ஒரு போராட்ட பூமியாக இருந்தா, எந்த தொழில் நிறுவனங்களும் இங்கே வராது. எந்த வியாபாரிகளும் வரமாட்டார்கள். வேலைவாய்ப்பு கிடைக்காது. இளைஞர்களெல்லாம் ரொம்ப கஷ்டப்படுவாங்க. ஏற்கனவே விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கு, தண்ணீர் வேற இல்லை. வேலை வாய்ப்பும் இல்லைன்னா ரொம்ப கஷ்டமாகிடும். ஆகவே, போராட்டத்தில் இறங்கும்போது ரொம்ப ஜாக்கிரதையா நடந்துக்கணும்.
போராட்டங்களுக்கு அனுமதி தரும்போது அரசாங்கம் விதிகளையெல்லாம் சரிவர பார்த்து கொடுக்கணும். அப்படி ஏதாவது பிரச்னை வந்தா நீதிமன்றங்களை அணுகித்தான் தீர்வு பெறணும். அதை விடுத்து, போராட்டம் என்று நேரடியாக களத்தில் இறங்கினால் கஷ்டமாகிவிடும். இதை அரசியல் தலைவர்கள் கொஞ்சம் மனசுல வெச்சுக்கணுங்கிறது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
ஏற்கனவே நான் சொல்லியிருக்கேன். இது நிச்சயமா உளவுத்துறையின் தோல்வி. பெரிய தவறு. நடந்தது நடந்துவிட்டது. இனி நடக்கப்போவதை பார்க்கணும். இனி நல்லதே நடக்கணும்.
எல்லாத்துலேயும் அரசியல் பண்றாங்க. ஜனங்க பார்த்துட்டிருக்காங்க. ஜனங்களுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சுட்டிருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் தெரியும். நேரம் வரும்போது அதை வெளிப்படுத்துவாங்க
13 பேரை யார் சுட்டார்கள் என்பது தெளிவாக இல்லை. இது போல் நடக்குமென்று யாரும் எதிர்பார்க்கலை. வன்முறை இந்தளவு மோசமாகும் என்று எதிர்பார்க்கலை. ஆனா, ஒரு விஷயம். அப்பவும் சொல்றேன், இப்பவும் சொல்றேன். காவலர்கள் மீது கை வைப்பவர்களை மட்டும் கண்டிப்பாக விடக்கூடாது. அப்படி செஞ்சுட்டா, நம்மமை யார் காப்பாற்றுவார்? 7 கோடி மக்களின் பாதுகாப்பு என்னவாகும்? வீடியோ விசுவல், போட்டோ எல்லாம் இருககு. அதையெல்லாம் சரியாக பார்த்து, யார் காவலர்களை அடிச்சாங்க, யார் யார் வன்முறையில் ஈடுபட்டாங்க என்பதை கண்டுபிடித்து, அவர்களது போட்டோவை பேப்பர்ல, டிவியில் போடணும். சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கணும்.
எல்லாத்துக்கும் ராஜினா, ராஜினாமா என்றால் எப்படிங்க? அந்த மாதிரி அரசியல் பண்றதுல, அதைப் பத்தி பேசறதை நான் விரும்பலை. இதெல்லாம் பெரிய தவறுகள். இனிமே ஜாக்கிரதையாக இருக்கணும். 13 உயிரிழப்பு நடந்திருப்பது உண்மை. அதற்கு பின்னர்தான் ஆலையை மூட நடவடிக்கை எடுத்திருக்காங்க. தனிநபர் விசாரணை கமிஷன் மீது நம்பிக்கையில்லை. ஆனால், கொஞ்சம் யோசனை பண்ணித்தான் சொல்லணும்.
100 நாள் போராட்டம் நடந்தும இந்த அரசு கண்டுகொள்ளாமல் இருந்ததற்கு அரசியல்தான் காரணம். எச்சரிக்கையாக இருந்திருக்கணும். இதுவொரு பெரிய பாடம்"
- Ramki J
|