கற்றவை !! பற்றவை! !!
திருவள்ளூர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடந்த விழாவில் திருவள்ளூர் ரஜினி மக்கள் மன்றமும், Rajinifans.com இணைய தளமும் இணைந்து 600 ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு 1,200 இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா ஊத்துக்கோட்டை, கொய்யாத்தோப்பு, அம்பேத்கார் நகர், ஜெ.ஜெ நகர், பாலவாக்கம் மற்றும் தாமரைப்பாக்கம் இடங்களில் நடந்தது.
எல்லாபுரம் ஒன்றிய ஒருங்கினைப்பாளர் சசிதரன் தலைமை வகித்தார்.
எல்லாபுரம் ஒன்றிய செயற் குழு உறுப்பினர் ராஜேஷ் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
மாவட்ட துணை செயலாளர் கருணாகரன் வரவேற்புரை வழங்கினார்.
விழாவில் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.
விழாவில் Rajinifans.com நிர்வாகிகள் சத்யநாராயணன், தேவ்நாத் மற்றும் LIC ஸ்ரீதர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த விழாவில் மாவட்ட மகளிர் அணி, ஒன்றிய நிர்வாகிகள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
|