Related Articles
வெற்றிகரமான வணிக சினிமாவை பற்றிய ஆய்வுப் படிப்பில் எந்திரன் & முத்து இடம்பெற்றன!!
ஃபோர்ப்ஸ் இதழின் 2010 ஆம் ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் ரஜினி!
ரஜினியின் பன்ச் தந்திரம் என்ற பெயரில் நூலாக வெளியிடு
சூப்பர் ஸ்டாரின் ரஜினியின் 61வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள்
திருமணம், நினைவு அஞ்சலி, பாராட்டுவிழா, நாடகம் : ரஜினி கலந்துகொண்ட நிகழ்ச்சிகள்
எந்திரன் இன்று மகத்தான ஐம்பதாவது நாள்! வெளியீட்டாளர்கள் கூறுவது என்ன?
ரஜினியாக இருப்பது அத்துணை எளிதல்ல! - ருசிகர பத்திரிகை கட்டுரைகள்
சன் டி.வி.யில் சூப்பர் ஸ்டாரின் பேட்டி! 15 ஆண்டுகளுக்கு பிறகு தொலைக்காட்சியில் தோன்றினார்
கே.பி. கேட்ட சரமாரி கேள்விகள்… சலிக்காது பதிலளித்த சூப்பர் ஸ்டார் - இயக்குனர்கள் சங்க விழாவில்
குழந்தைகளின் HOT சென்சேஷன் எந்திரன்!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
தீபாவளிக்கு பிறகும் தொடரும் எந்திரனின் சாதனை! ஒரு முழு A B C ரிப்போர்ட் !!
(Sunday, 9th January 2011)

30 November 2010

தீபாவளிக்கு புதிய படங்கள் ரிலீசானதையொட்டி, எந்திரனின் வெற்றிப் பயணம் Post-Deepavali எப்படியிருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆவல் ரசிகர்கள் அனைவரிடமும் இருக்கிறது. தீபாவளி ரிலீஸ் சிலவற்றிக்கு வழிவிட்ட பிறகு தற்போது சென்னை நகரில் மட்டும் எந்திரன் 15 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தீபாவளிக்கு உத்தமபுத்திரன், வா குவாட்டர் கட்டிங், மைனா உள்ளிட்ட படங்கள் ரிலீசானாலும், எந்திரனின் வெற்றிப் பயணத்தை மேற்படி படங்களால் தடுக்க முடியவில்லை என்பதே நிஜம். பல படங்கள் திரையிடப்பட்டுள்ள காம்ப்ளெக்ஸ் மற்றும் மல்ட்டிப்ளெக்ஸ்  தியேட்டர்களில் எந்திரனை பார்க்கவே மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது கூடுதல் தகவல். இது தொடர்பாக நாம் சில திரையரங்குகளை தொடர்புகொண்ட போது அவர்கள் கூறிய தகவல் இதை உறுதிபடுத்தியது.

சற்று டல்லான Pre-Deepavali சீசனுக்கு பிறகு மக்கள் எந்திரனை பார்க்க மீண்டும் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர். நாம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே.

வில்லிவாக்கம் ராயல் ஏ.ஜி.எஸ். சினிமாஸில் நாம் சனிக்கிழமை இரவு காட்சி, நண்பர்களுடன் கண்டு ரசித்தோம். (Screen 1). அப்போது படம் ஹவுஸ்புல். முழுக்க முழுக்க FAMILY AUDIENCE தான். அதிலும் பெண்களும் குழந்தைகளும் தான் அதிகம். ஏ.ஜி.எஸ். மட்டுமல்ல நேற்றைக்கு சென்னையில் எந்திரன் ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல். திரையிட்டு ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும், தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியான பிறகும் கூட எந்திரனுக்கு இப்படி கூட்டம் குவியும் அதிசயம் குறித்து, திரையரங்கு தரப்பிலேயே விசாரித்துவிடுவது என முடிவு செய்து களமிறங்கினோம்.

நாம் முதலில் பேசியது ஒரு சினிமா TERRITORYக்கு சமமான மாயாஜால் தரப்பில். அதன் மேலாளர் திரு.மீனாக்ஷி சுந்தரம் கூறியதாவது :

“தீபாவளிக்கு அனைத்து மொழிகளிலும் புதிய படங்கள் ரிலீசானதையொட்டி எங்கள் வளாகத்தில் எந்திரன் தற்போது நான்கு காட்சிகள் நடைபெற்றுவருகிறது. இந்த வீக்கென்ட் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல். தீபாவளி ரிலீஸ் படங்கள் எந்திரனை சற்றும் பாதிக்கவில்லை. Enthiran is still strong. படம் ஸ்டெடியாக போவதால் இதே நான்கு காட்சிகள் தொடரும். மற்றபடி உத்தமபுத்திரனுக்கும் மைனாவுக்கும் நல்ல TALK கிடைத்துள்ளது.”

உதயம் திரையரங்கம் மேலாளர் திரு.மோகன் :

“எந்திரன் படம் ரிலீசாகி 34 நாட்கள் கழித்து இந்த வாரம் மினி உதயத்தில் ஷிப்ட் செய்தோம் - அதுவும் தீபாவளிக்கு வெளியான புது படங்களுக்கு வழிவிடுவதற்காக. அதிகபட்ச தியேட்டர்களில் எந்திரன் ஒரே நேரத்தில் வெளியானதால் இந்த நடவடிக்கை தவிர்க்க இயலாதது.”

“மேலும் எங்கள் வளாகத்தில் மெயின் ஸ்க்ரீனிலேயே  எந்திரன் சக்கை போடு போட்டுவிட்டது. அதிலும் வெளியான தேதியிலிருந்து PRE-DEEPAVALI WEEKEND முன்பு வரைக்கும் படம் ஸ்டெடியாக இருந்தது. அதற்கு பிறகு சற்று  டிராப் இருந்தது. PRE-DEEPAAVALI effect அது. மக்கள் அனைவரும் தீபாவளி ஷாப்பிங்கில்  பிசியாக இருப்பார்கள். படம் பார்க்க ஆர்வம் காட்டமாட்டார்கள். அதிலிருந்து எந்த படமும் தப்ப முடியாது. இதோ சற்று சிறிய தியேட்டருக்கு ஷிப்ட் செய்தவுடன் மறுபடியும் பிக்கப்பாகிவிட்டது. ”

“Post-Deepavali எந்திரனுக்கு கிடைககும் இந்த வரவேற்ப்பு தீபாவளி புது படங்களின் வருகையால் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அதற்க்கு எங்கள் உதயம் காம்ப்ளக்ஸ் நல்ல சாட்சி. எந்திரன் தற்போது மினி உதயத்தில் அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் போய்கொண்டிருக்கிறது.”

(மினி-உதயம் என்றால் சிறிய தியேட்டர் என்று நினைக்க வேண்டாம். இதன் CAPACITY என்ன தெரியுமா? 315 seats. So, ஒரு நாளுக்கு 315 X 4  = 1260 ஆடியன்ஸ். 38 நாள் கழித்து 1260 ஆடியன்ஸ் என்பது சாதாரணமா…..?!).

“எங்கள் வளாகத்தில் தீபாவளிப் படங்களை விட எந்திரன் நல்ல வசூலை தந்து, No.1 ஆக போய்கொண்டிருக்கிறது. பெண்கள் குழந்தைகள் என மழையையும் பொருட்படுத்தாது கூட்டம் கூட்டமாக வந்து குவிகிறார்கள். இப்படி இதே GRIP இல் படம் தொடர்ந்து ஓடினாலே எங்களுக்கு போதும். எந்திரனை மீண்டும் பெரிய தியேட்டர்களில் ஷிப்ட் செய்யும் எண்ணம் இல்லை. ”

“சன் டி.வியில். ‘மேகிங் ஆப் எந்திரன்’ ஒளிபரப்பான பிறகு கூட்டம் இன்னும் அதிகரித்துள்ளது. பெண்கள் மத்தியில் தற்போது ஒரு க்ரேஸ் எழுந்துள்ளது. ஆக எங்கள் வளாகத்தில் எந்திரன் ஒரு BLOCKBUSTER. அதிகபட்ச தியேட்டர்களில் ரிலீஸ் செய்தும் படம் இந்தளவு ஓடுகிறது என்றால் அதற்க்கு காரணம் சூப்பர் ஸ்டார் என்று நான் சொல்லவேண்டுமா என்ன?”

அம்பத்தூர் ராக்கி தரப்பில் விசாரித்தபோது:

“எங்கள் வளாகத்தில் சினி ராக்கி, மற்றும் லக்ஷ்மி ராக்கியில் எந்திரன் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. (இரண்டிலும் சேர்த்து 600 இருக்கைகள். So, ஒரு நாளைக்கு 2400 ஆடியன்ஸ்!)”

“Deepavali & Post-Deepavali யில் இந்த மூன்று நாட்களும் எந்திரன்  ஹவுஸ் ஃபுல். தீபாவளி படங்களை விட எந்திரனுக்கு தான் அதிக டிமாண்ட் உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் எந்திரனை பார்க்க தான் ஆர்வம் காட்டுகின்றனர். பல பெற்றோர்கள் குழந்தைகளின் விருப்பத்தின் பேரில் வந்ததாக எங்களிடம் கூறினர். தவிர, கரும்பு தின்ன கசக்குமா என்ன..? ரஜினி படத்தை குழந்தைகளுடன் பார்க்க யாருக்கு தான் விருப்பம் இருக்காது….?”

“எந்திரன் டிக்கட் கிடைக்காத பட்சத்தில் உத்தமபுத்திரன், மைனா பார்க்க விருப்பம் தெரிவிக்கின்றனர். எந்திரனுக்கு தற்போது எழுந்துள்ள டிமாண்டை தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறோம். எனவே எங்கள் காம்ப்ளெக்சை பொறுத்தவரை தொடர்ந்து இதே நிலை நீடிக்கும். இரு திரையரங்கில் எந்திரன் தொடர்ந்து ஓடும்.”

இவ்வாறு ராக்கி சினிமாஸ் தரப்பில் கூறினர்.

இவை தவிர, ஐனாக்ஸ், எஸ்கேப், சத்யம் சினிமாஸ், சங்கம் காம்ப்ளெக்ஸ், ஐ ட்ரீம், ஆல்பட் உள்ளிட்ட பல திரையரங்குகளில், படம் ஹவுஸ்புல். இன்றைக்கும் மழையிலும் இதே TREND நீடித்தது.

சரி… சென்னை நகரில் ஓ.கே. தமிழகத்தின் பிற பகுதிகளில் நிலவரம் எப்படி?

சென்னையைவிட மத்த இடங்கள்ல தான் நம்ம படம் பட்டையை கிளப்பிகிட்டு இருக்குங்க. நாம எதிர்பார்த்ததை விட அருமையாகவே.

வெளியிட்ட இடங்கள் அனைத்திலும் எந்திரன் சக்கைபோடு போட்டு வருகிறது. சென்னையை பொறுத்தவரை நாம் ஏற்கனவே சில திரையரங்குகளிடம் பேசி நம் ரசிகர்களுக்கு உண்மையை தெள்ளத் தெளிவாக உணர்த்திவிட்டோம். இருப்பினும், மற்ற தமிழகத்தின் (B & C centres) பகுதிகளில் எந்திரனின் வசூல் எப்படி இருக்கிறது? தீபாவளிக்கு பிறகு காணப்படும் சூழல் என்ன ? என்பது குறித்து ஆராய களமிறங்கினோம். திரைப்பட விநியோகம் மற்றும் தியேட்டர் துறையில் இருக்கும் நம் நண்பர்கள் சிலர் உதவியின் மூலம், தமிழகத்தில் பரவலாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய சென்டர்களில் பேசினோம்.

நாம் பேசிய அனைவரிடத்திலும் நாமே எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல ரெஸ்பான்ஸ். படத்தை வெளியிட்டவர்கள் அனைவரும் உற்சாகமாக் இருக்கிறார்கள் என்பது புரிந்தது.எந்தளவு அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றால் இப்படி நம்மிடம்  ஒரு சூப்பர் ரெஸ்பான்ஸ் தருவார்கள் என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

அவர்கள் நம்மிடம் கூறியதை அப்படியே தருகிறேன் :

கடலூர் கிருஷ்ணாலயா திரையரங்க மேலாளர் திரு.தேவர் கூறியதாவது :

“வெளியிட்ட நாள் முதல் எங்கள் திரையரங்கில் எந்திரன் பிரமாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளிப் படங்களை விட கடலூரில் எந்திரன் இந்த இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல் அதிகம். எங்கள் தியேட்டர் ஆடியன்ஸ் CAPACITY 667. நேற்றைய (சனிக்கிழமை) மாலை காட்சி - 4.30 மணிக்கே - அட்வான்ஸ் புக்கிங்கிலேயே - நிரம்பிவிட்டது. எனவே நேற்றைக்கு மட்டும் எந்திரன் பார்க்க வந்து டிக்கட் கிடைக்காது ரிட்டர்ன் ஆனவர்கள் எண்ணிக்கை மட்டும் சுமார் 1500 பேர் இருப்பர். குழந்தை குட்டிகளுடன் வந்திருந்த பல பெண்களுக்கு டிக்கட் கிடைக்கவில்லை. அவர்களை திரும்ப அனுப்ப மனமின்றி மிகவும் வருத்தப்பட்டோம். இருந்தாலும் நாங்கள் என்ன செய்ய முடியும்? எனவே விருப்பப்பட்டவர்களுக்கு இரவுக் காட்சிக்கான டிக்கட்டை மாலையே  தந்துவிட்டோம். அதுவும் விற்று தீர்ந்துவிட்டது. பொதுவாக டிக்கட்டுகள் கேட்டு கல்லூரி மாணாவர்கள், பையன்கள் தான் கெஞ்சுவார்கள். ஆனால், நேற்றைக்கு தியேட்டர் ஃபுல் என்றதும் பல பெண்கள் டிக்கட் கேட்டு எங்களிடம் மன்றாடியது, எங்களுக்கே ஒரு புதிய அனுபவம். அவர்களிடம் ‘இல்லை’ என்று சொல்ல எங்களுக்கே ஒரு மாதிரி இருந்தது. ”

“பொதுவாகவே ரஜினி சார் படம் என்றாலே அந்த படத்தை நிச்சயம் பார்க்கவேண்டும் என்று ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும். ஆகையால் அவர் படங்களுக்கு இது போன்ற சூழ்நிலைகள் சகஜம் தான்.”

“எந்திரனை பொறுத்தவரை அப்பா அம்மாவை தியேட்டருக்கு இழுத்து வரும் குழந்தைகள் அதிகம். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாங்கள் டிக்கட் வசூலிப்பது இல்லை. தற்போது நடைபெற்றுகொண்டிருக்கும் ஷோவில் சுமார் 100 குழந்தைகள் அப்பா அமாவுடன் வந்து இப்படி டிக்கட் இல்லாது படம் பார்க்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.”

“தற்போது கடலூரில் ஓடிக்கொண்டிருக்கும் தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு உள்ள ஆடியன்சை விட எங்கள் திரையரங்கில் அதிகம் பேர் எந்திரனுக்கு உள்ளனர். “

அதுவும்  இந்த கடும் மழையில் கூட காலையில் 320 பேர் படம் பார்த்தனர். இது 38 வது நாள் என்பதை மறந்துவிடக்கூடாது. கரெண்ட் இன்றி தற்போது ஜெனரேட்டரில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. எங்கள் திரையரங்கை பொறுத்தவரை பராமரிப்பில் எந்த குறையும் வைப்பதில்லை. மற்ற திரையரங்கைவிட எங்கள் திரையரங்கில் ஊழியர்கள் அதிகம் (சுமார் 25 பேர்). பராமரிப்பு பணிக்கென்று நாங்கள் அதிகளவில் ஊழியர்களை வைத்துள்ளோம். இதன் மூலம் மக்களுக்கு ஒரு திருப்திகரமான சேவை அளிக்க முடிகிறது.”

திரு.ராஜேஷ், பிரதிநிதி, (Theatre Exhibitor’s representative) கிருஷ்ணாலயா திரையரங்கம் கூறியதாவது :

“ஆரம்பத்தில் ஆடியன்ஸில் ஒரு பிரிவினருக்கு எந்திரன் படத்தில் ரோபோவாக நடித்திருப்பதும் ரஜினி தான் என்பதை ரிலேட் செய்ய முடியவில்லை. அவர்கள் விஞ்ஞானியை மட்டுமே ரஜினியாக பார்த்தனர். ஆனால் தற்போது ‘மேக்கிங் ஆஃப் எந்திரன்’ நிகழ்ச்சி பார்த்ததிலிருந்து ரோபோ கேரக்டருக்காக ரஜினி எந்தளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்து தியேட்டருக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். அதுவும் பெண்களை அது மிகவும் பாதித்திருக்கிறது. அது கண்கூடாக தெரிகிறது. “என்ன தான் சம்பளம் அதிகமா கொடுத்தாலும், இப்படியெல்லாம் அவர் கஷ்டப்பட்டு நடிக்கக்கூடாது” என்று எங்கள் திரையரங்கிற்கு வரும் பெண்கள் மற்றும் தாய்மார்கள் சொல்கின்றனர்.”

“தீபாவளிக்கு வேறு படங்கள் ரிலீஸ் ஆனபோதும் இந்த இரண்டு நாளில் எந்திரனுக்கு ஏகப்பட்ட பேர் டிக்கட் கிடைக்காது ரிட்டர்ன் ஆயினர். எங்கள் திரையரங்க வரலாற்றில் இது போன்று டிக்கட் கிடைக்காது சென்ற ஜனங்களை பார்த்ததில்லை.”

எம்.ஆர்வின், தூத்துக்குடி பகுதி வெளியீட்டாளர் கூறியதாவது :

“தீபாவளி படங்கள் எதுவும் எந்திரனை பாதிக்கவில்லை. இந்த இரண்டு நாட்களும் நாங்கள் படம் வெளியிட்டுள்ள கிளியோபாட்ரா திரையரங்கில் படம் ஹவுஸ்புல்லாக போய்கொண்டிருக்கிறது.”

“தூத்துக்குடியை பொறுத்தவரை எந்திரன் மூன்று தியேட்டர்களில் இங்கு ரிலீசானது. தூத்துக்குடி போன்ற ஊர்களுக்கு ஒரு தியேட்டரே அதிகம். ஆனால் மூன்று தியேட்டர்களில் வெளியிட்டும் எனக்கு நான் வெளியிட்டுள்ள திரையரங்கில் திருப்திகரமான வருவாய் கிடைத்துவந்தது. தற்போது ஒரு திரையரங்கில் நீக்கப்பட்டு இன்னும் இரண்டு திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.”

“வெளியிட்ட முதல் வாரம் வார நாட்களில் கூட பல ஷோக்கள் ஃபுல்லானது மிகப் பெரிய அதிசயம். வாரநாட்களில் 50% ஆடியன்சும் வார இறுதிகளில் ஹவுஸ்ஃபுல்லாகவும் எந்திரன் பயணம் இருக்கிறது. தீபாவளிக்கு எந்திரன் அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல்லாகிவிட்டது. நிறைய பேர் டிக்கட் கிடைக்காது திரும்பி சென்றனர். பெண்கள் மிக மிக அதிகம். எந்த சூழலில் இப்படி ரிட்டர்ன் ஆடியன்ஸ் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். எங்கள் தியேட்டர் தவிர மேலும் ஒரு ஸ்க்ரீனில் எந்திரன் ஓடிக்கொண்டிருக்கும்போதே இந்த நிலை. அதுவும் படம் வெளியாகி 38 நாட்கள் கழித்து.

“ரஜினி சார் தவிர வேறு யாரும் இதையெல்லாம் நினைத்து கூட பார்க்க  முடியாது. அவருடைய UNIVERSAL APPEAL… வாவ்…. வாய்ப்பேயில்லை.”

“தவிர, படத்திலும் ஏகப்பட்ட விஷயமிருக்கிறது. இந்த ‘மேக்கிங் ஆப் எந்திரன்’ நிகழ்ச்சி மூலம் சன் டி.வி. அதை நன்கு வெளியுலகிற்கு காட்டிவிட்டது. ”

“பெண்கள் கூட்டம் மிக அதிகளவில் வருகிறது. வசூலை பொறுத்தவரை நான் எனது டெப்பாசிட் தொகையை தாண்டி தற்போது லாபத்தை பார்த்துவருகிறேன். நான் மட்டுமல்ல வெளியிட்ட அனைவருக்கும் நல்ல லாபம். அதிகபட்ச தியேட்டர்கள் என்பதால், படத்தை விநியோகித்த ஜெமினி பிலிம்ஸ் ‘டெப்பாசிட் & பெர்செண்டேஜ் SHARE’ முறையில் தான் படத்தை விற்றனர். இதனால் வாங்கிய அனைவரும் நல்ல லாபத்தை பார்த்துவிட்டனர். என்னைப் பொறுத்தவரை நான் BREAK EVEN ஐ தாண்டி லாபத்தை பார்த்துவருகிறேன். இதற்க்கு மேல் என்ன வேண்டும்?”

“நேற்றைக்கு வசூல் மட்டுமே கிட்டத்தட்ட ரூ.1,00,000 /- என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் . லாங் ரன்னிங்கில் எந்திரன் ஒரு மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. A B C என அனைத்து சென்டர்களிலும், சொல்லி வைத்து ஜாக்பாட் அடித்துள்ளது எந்திரன்”

என்று முடித்துகொண்டார் திரு.ஆர்வின்.

மேலே நாம் குறிப்பிட்ட திரையரங்குகள் தவிர, திருச்சி ரம்பா, மதுரை குரு, உள்ளிட்ட பல தியேட்டர்கள் நேற்று ஹவுஸ்புல் + டிக்கட் கிடைக்காது ரிட்டர்ன் ஆன ஆடியன்ஸ் எக்கச்சக்கம்.

 

எந்திரன் இன்று மகத்தான ஐம்பதாவது நாள்! வெளியீட்டாளர்கள் கூறுவது என்ன?

மிழ் திரையுலகின் வரலாற்றில் எந்திரன் பல விஷயங்களில் ஒரு முன்னோடி. மெகா பட்ஜெட், ஜாம்பவான்களின் கூட்டணி, WIDE RELEASE, அயல்நாட்டு கலைஞர்களின் பங்களிப்பு, ஊதியம், படத்தின் விலை, வெளியிட்ட தியேட்டர்களின் எண்ணிக்கை,  விநியோகஸ்தர்களின் லாபம், மொத்த வசூல் இப்படி பல விஷயங்களில் புதிய சாதனைகளை படைத்து முன்னோடியாக அமைந்துள்ளது.

இன்றைக்கு எல்லோரும் துணிவுடன் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறார்கள் என்றால் அதற்க்கு காரணம் ரஜினியின் படங்கள் காட்டிய வழி முறைகளே. உலக நாடுகளில் மூளை முடுக்குகளிலெல்லாம் தமிழ் படங்களுக்கு மார்கெட் இருக்கிறது என்று உலகிற்கு உணர்த்தியவை நம் படங்களே. இன்றைக்கு அதே வழியில் பயணம் செய்து பல படங்கள் ஜீவிக்கின்றன.

அதே போல, இசை வெளியீட்டை அயல்நாடு ஒன்றில் - மக்கள் முன்னிலையில் - பிரம்மாண்டமாக - நடத்தி அதை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்து, இசை வெளியீட்டில் புதிய சரித்திரத்தை துவக்கி வைத்ததும் நாம் தான்.

ஒரே ஒரு திரையரங்கில் ரிலீஸ் ஆகும் பல ஊர்களில் இம்முறை மூன்று திரையரங்குகளில் எந்திரன் திரையிடப்பட்டது. ரிலீஸ் சென்றே அல்லாத பல ஊர்களில் கிராமப்புறங்களில் கூட ரிலீஸ் ஆன எந்திரன் அங்கும் வசூலை வாரி குவித்தது. சேலம் விநியோக வட்டத்தில் உள்ள வளசையூர்  என்னும் ஊரில் உள்ள ஆனந்த் திரையரங்கில் எந்திரன் செய்த மொத்த வசூல் என்ன தெரியுமா? ரூ.4 லட்சம். (இங்கு இதுவரை அதிகப்படியான கலக்ஷன்  ரூ.1 லட்சம் தான்).

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மட்டும் 70 திரையரங்குகளுக்கு மேல் ரிலீசானது எந்திரன். இத்துனை திரையரங்கில் ரிலீஸ் ஆன போதும் சூப்பர் ஸ்டார் என்ற ஒரு மந்திரச் சொல், எந்திரன் என்னும் ராக்கெட்டை தங்கு தடையின்றி மேலே பாய செய்யும் எரி பொருளாக அமைந்தது.

எந்திரனின் ஓட்டத்தை பற்றி பொறாமையின் காரணமாக குதர்க்கமான கேள்வி எழுப்புவோர், வேறு படங்கள் டிசம்பரில் வெளியாகத்தன் போகிறது. அந்த படங்கள் எத்துனை திரையரங்கில் வெளியாகின்றது, எத்துனை திரையரங்கில் இரு வெள்ளிக்கிழமை கழித்து தாக்குபிடிக்கிறது, பொங்கலுக்கு முன்பு எத்துனை திரையரங்கில் நிற்கிறது என்று பார்க்கத்தானே போகிறோம்…!

எப்படி பார்க்கிலும், எந்திரனின் வெற்றி ஈடு இணையற்றது. மகத்தானது. சூப்பர் ஸ்டார் ஒருவரை தவிர யாரும் கனவிலும் நினைத்துக்கூட பார்க்கமுடியாதது.
பொள்ளாச்சி பகுதியில் எந்திரனை வாங்கி வெளியிட்ட வெளியீட்டாளர் திரு.எஸ்.ரகுபதி கூறுகையில் :

“இது வரை நான் வெளியிட்ட படங்களில் அதிக வசூல் தந்தது எந்திரன் தான். சூப்பர் ஸ்டார் தவிர வேறு யார் இந்த படத்தில் நடித்திருந்தாலும் இந்த வெற்றியை உறுதி செய்ய இயலாது. ரஜினியில்லாத எந்திரனை நினைத்து கூட பார்க்கமுடியாது. அவரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இந்த படத்தை நாங்கள் வாங்கியிருக்கமாட்டோம் என்பது தான் உண்மை. இத்துனை திரையரங்கில் ரிலீஸ் செய்தும், நாங்கள் தைரியமாக வாங்கினோம் என்றால் ரஜினி சார் மீதும் அவரது செல்வாக்கு மீதும் எங்களுக்கு இருக்கும் நம்பிக்கை தான்.

“தவிர அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டதால், இந்த படத்தை யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் சன் பிக்சர்ஸ் வர்த்தகம் செய்தது. எங்கள் மகிழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம். வர்த்தக ரீதியாக இந்த படம் வெற்றிகரமாக அமைய காரணமான சூப்பர் ஸ்டாருக்கும், இந்த வாய்ப்பை எங்களுக்கு நல்கிய சன் பிக்சர்சுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.”

“எந்திரனை நான் இரு திரையரங்கில் (முருகாலையா, A T S C) ரிலீஸ் செய்தேன். முன்னரே செய்துகொண்ட ஒப்பந்தப்படி, - புதிய படங்களுக்கு வழி விடுவதற்காக - அதில் ஒரு திரையரங்கில் சில வாரங்கள் கழித்து படத்தை திரும்ப பெற்றேன். தற்போது A T S C திரையரங்கில் 50 வது நாளை கடந்து படம் ஓடிக்கொண்டிருக்கிறது. எந்திரனைப் பொருத்தவரை எங்கள் திரையரங்கில் இன்னும் ஓரிரு வாரங்கள் தொடர்ந்து ஓடும். பல புதியபடங்களை தாக்குபிடித்து இன்று 50 வது நாளை எந்திரன் தாண்டுவது சாதாரண விஷயம் அல்ல….!” நெத்தியடியாக முடித்துக்கொண்டார் திரு.ரகுபதி.

மலைடா… அண்ணா..மலை!!!!!

 

ஆந்திராவில் ரோபோவின் அதிரவைக்கும் சாதனை!! - Exclusive AP Box-office Report

“சோதனை வந்தாதானேய்யா  சாதனை வரும்” என்ற தலைவரின் புகழ் பெற்ற ரியல் லைஃப் பன்ச்சுக்கு சரியான உதாரணம் ரோபோ தெலுங்கு பதிப்பு தான்.

‘ரோபோ’ தெலுங்கில் வெளியாவதற்கு முன்பு, படத்தை பற்றி அவதூறாக வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டது. இந்த படத்தை வாங்கிய தோட்டம் கண்ணா ராவுக்கு கலவரம் ஏற்படுத்தும் வகையில் சில ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாயின… “இத்துனை பெரிய தொகைக்கு விற்கிறார்களே… தயாரிப்பாளருக்கு ஏதாவது மிஞ்சுமா?” என்றெல்லாம் ஏகடியம் பேசினார்கள். ………..ஆனால் நடந்தது என்ன?

நீங்களே பாருங்கள்…….!!

* ஆந்திராவில் இது வரை வந்த டாப் வசூல் படங்களில் ரோபோவுக்கு இரண்டாவது (மகதீராவுக்கு அடுத்து) கிடைத்துள்ளது. (ரோபோ டப்பிங் படம் என்பதை நினைவில் கொள்ளவும்).

* 2010 ஆம் ஆண்டு வெளியான படங்களில் முதலிடம் ரோபோ.. ரோபோவே தான்.

* ஆந்திராவின் ALL-TIME TOP GROSSER படங்கள் லிஸ்ட்டில் ரோபோவும் இடம்பிடித்துவிட்டது. (ஆந்திராவின் பிற ALL-TIME BIG GROSSERS போக்கிரி, அருந்ததி, சிம்மா, மகதீரா, பிருந்தாவனம் ETC.)

* ஆந்திராவில் - வெளியான முதல் வாரத்தில் - ரோபோ வசூல் செய்த மொத்த தொகை ரூ.15.5 கோடிகள். ஆந்திராவை பொறுத்தவரை இது இரண்டாவது பெரிய ஓப்பனிங்.

* இரண்டாவது வாரத்தில் வசூல் செய்த மொத்த தொகை - ரூ.23.2 கோடிகள்.

* நிஜாம் விநியோக வட்டத்தில் நான்கு வாரங்களுக்குள் ரூ.9 கோடிக்கு மேல் வசூல் செய்த வெகு சில படங்களுள் ரோபோவும் ஒன்று. (மற்றவை : மகதீரா & பிருந்தாவனம்).

* ஆந்திராவில் நான்கு வார முடிவில் ரோபோ வசூல் செய்த மொத்த லாபம் ரூ.30.5 கோடிகள். (இதில் பெரும்பான்மையான வசூல் நிஜாம், CEDED, குண்டூர் ஆகிய மாவட்டங்களில் வந்தவை!)

* ஆந்திர திரையுலக வரலாற்றில் இன்றுவரை இரண்டாவது அதிக வசூல் செய்த படமாக ரோபோ மாறியிருக்கிறது. இது வரை சிட்டி வசூலித்த மொத்த லாபத் தொகை ரூ. 35.67 கோடிகள்.

* ஐந்தாவது வார முடிவில் - கிழக்கு கோதாவரி (East Godavari) மாவட்டத்தில் - அதிக வசூலித்த படங்களுள் ரோபோவும் ஒன்று. (மகதீரா, போக்கிரி, ஜல்சா, அருந்ததி, அதுர்ஸ் ஆகியவை மற்ற படங்கள்).

* கிருஷ்ணா மாவட்டத்தில் இதுவரை அதிக பட்ச லாபம் ஈட்டித் தந்த 4 படங்களுள் ரோபோவும் ஒன்று. இம்மாவட்டத்தில் மட்டும் ரோபோ ரூ.2 கோடிகள் விநியோகஸ்தருக்கு லாபம் ஈட்டித் தந்தது. இம்மாவட்டத்தில் ரோபோவை வெளியிட்டவர் திரு.அலங்கார் பிரசாத். (மகதீரா, போக்கிரி, இந்த்ரா ஆகியவை மற்ற படங்கள்).

* இதுவரை தெலுங்கில் வெளியான சூப்பர் ஸ்டாரின் படங்களுள் மிகப் பெரிய வெற்றி பெற்றிருப்பதும் எந்திரனே.

* அதேபோல, தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகிய படங்களில் வசூலில் முதலிடத்தில் இருப்பது ரோபோடா… ரோபோ!

* ரோபோவுக்கு பிறகு வெளியான பல தெலுங்கு படங்கள் வந்த சுவடே தெரியாது காணாமல் போய்விட… 50 நாட்களுக்கு பின்னரும் கூட ரோபோ பல தியேட்டர்களில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

(இணைக்கப்பட்டுள்ள விளம்பரத்தை பாருங்கள்! - The ad you see here is for Nizam district only. Other districts separate).

* ரோபோ தெலுங்கு தயாரிப்பாளர் தோட்டம் கண்ணா ராவ் அளித்துள்ள 50 வது நாள் விளம்பரம் உங்கள் பார்வைக்கு.  (சன் பிக்சர்சிடம் நாம் நிறைய எதிர்பார்த்தோம். ஆனா? ஹூம்…!)

மேற்காணப்படும் விளம்பரத்தில் உள்ள வாசகங்களின் தமிழாக்கம்:

ரிலீசான அனைத்து சென்டர்களிலும் ரோபோவின் சரித்திர சாதனை!!
நூறாவது நாளை நோக்கி…!!

“எங்கள் முதல் தயாரிப்பை மிகப் பெரிய வெற்றி அடையச் செய்த அனைத்து ரசிகர்களுக்கும் திரையுலக நண்பர்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் விநோயோகஸ்தர்களுக்கும் மீடியாவுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எங்கள் இதயப் பூர்வமான நன்றி.”

- இப்படிக்கு தோட்டா கண்ணையா, ஸ்ரீ கிருஷ்ணா ட்ரேடர்ஸ், மேற்கு கோதாவரி ஜில்லா.

மேற்படி பாக்ஸ் ஆபீஸ் செய்திகளுக்கான ஆதாரம் :

http://www.andhraboxoffice.com/info.aspx?id=27&cid=6&fid=1

http://telugu.16reels.com/news/movie/1865_Rajinikant-Robot/Endhiran-Sets-New-Records-in-Andhra-Pradesh.aspx

(இந்த தொகுப்பை தயார் செய்ய நமக்கு பேருதவியாக இருந்த நண்பர் R.கோபி மற்றும் தெலுங்கு மொழி பெயர்ப்பில் உதவியாக இருந்த நண்பர் TVE ராஜேஷ் இருவருக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி!)

ந்திர பாக்ஸ் ஆபீசில் எந்திரனின் மந்திர சாதனை பற்றிய புள்ளி விபரங்களை முந்தைய பதிவில் பார்த்தோம். தற்போது எந்திரனின் வெற்றி குறித்த தொலைகாட்சி செய்தி ஒன்றையும் திரையரங்க உரிமையாளர் ஒருவர் கூறுவதையும் பார்ப்போம்.

தெலுங்கிலும் கலக்கும் ரோபோ - TV 9 சிறப்பு செய்தி

செய்தியின்  தமிழாக்கம் :

//”தென்னிந்தியாவில் ரஜினியை மிஞ்சிய நடிகர் யாரும் இல்லை. (கவனிக்க.. தென்னிந்தியாவில்!). அது ரோபோவால் மறுபடியும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்த தேசத்திலேயே மிகப் பெரிய ஹீரோவாக ரஜினி உருவெடுத்துவிட்டார். அவரது லேட்டஸ்ட் படமான ரோபோ, தெலுங்கு திரையுலகை கலக்கு கலக்கென்று கலக்கி வருகிறது.

பல முன்னணி தெலுங்கு ஹீரோக்கள் இதனால் கலங்கிப் போயிருக்கின்றனர். ஒரு டபிங் படம், பல ஏரியாக்களில் முன்னணி தெலுங்கு ஹீரோக்களின் படங்களை ஓரங்கட்டியிருக்கிரதேன்றால் அது சாதாரண விஷயம் இல்லை.

ஆரம்ப காலம் முதலே ரஜினியின் படங்கள் தெலுங்கில் சக்கை போடு போட்டுவருகின்றன. பாட்ஷா காலத்தில் இது வலுப்பெற்று, சந்திரமுகி காலத்தில் இது உச்சத்தை அடைந்தது. சிவாஜியில் அது நீடித்தது. ரோபோவில் அது எங்கோ சென்றுவிட்டது.

ஆந்திராவில் ரோபோவை ரிலீஸ் செய்வதற்கு முன்பு, ஒரே குழப்பம். குறிப்பாக நிஜாம் ஏரியாவில், படம் ரிலீஸ் ஆவதற்கு சில நாட்கள் முன்பு வரை நிச்சயமற்ற நிலை தான். யார் ரிலீஸ் செய்யப்போவது, எந்த தியேட்டர்களில் என்று பல கேள்விகள்… என்ற குழப்பம் தான். ஆனால் டிக்கட் புக்கிங் துவங்கிய சில மணி நேரங்களில் ரோபோ அனைத்து கணிப்புக்களையும் தவிடு பொடியாக்கி முதலிடத்தை பிடித்துவிட்டது.

ஆந்திராவின் ‘C’ சென்டர்கள் என்றழைக்கப்படும் கடற்கரை மற்றும் ராயலசீமா பகுதிகளில் கூட படம் பட்டையை கிளப்பிவிட்டது.

எப்படியோ ஆந்திராவின் முன்னணி ஹீரோக்களுக்கு ரோபோ ஒரு சவால் தான்.”//

Video clip of the above said TV 9 news

 

http://www.youtube.com/watch?v=gtmA7wwyCZY&feature=player_embedded

சரி..ரோபோவின் இந்த மாபெரும் வெற்றி குறித்து, ஆந்திராவில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் கூறுவது என்ன?

ஹைதராபாத்தில் ஆர். டி .சி. கிராஸ் ரோட்டில் உள்ள ‘ஓடியன் - 70 mm’ திரையரங்க நிர்வாகி திரு. பாலகிருஷ்ணா கிருஷ்ணா நம்மிடம் கூறியதாவது :

கேள்வி : ரோபோவை பற்றி உங்கள் தனிப்பட்ட கருத்து என்ன?
பதில் :
 இந்திய அளவில் - சமீபகாலகட்டங்களில் - வந்த படங்களில் மிகச் சிறந்த திரைப்படம்.

கேள்வி : மற்ற திரைப்படங்களுடன் ஒப்பிடப்படும்போது ரோபோ எப்படி?
பதில் :
 தயவு செய்து மற்ற திரைப்படங்களுடன் ரோபோவை ஒப்பிடாதீர்கள். காரணம் இதன் சப்ஜெக்டே வேறு. ரோபோவின் இடத்தை நிரப்ப வேறு எந்த படத்தாலும் முடியாது.

கேள்வி : ரோபோவின் வசூல் எப்படி?
பதில் :
 தெலுங்கின் மிகப் பெரிய ப்ளாக்பஸ்டருக்கு இணையானதொரு வசூலை ரோபோ தந்துள்ளது.

கேள்வி : 50 நாட்களை படம் கடந்துள்ள நிலையில், தற்போது பொதுமக்களிடம் ரெஸ்பான்ஸ் எப்படி உள்ளது ?
பதில் :
 பல புதிய தெலுங்கு படங்கள் ரிலீசாகிற நிலையிலும் ரோபோவுக்கு இன்னும் மக்கள் மனத்திலும் இதயத்திலும் நல்ல இடம் உள்ளது. படம் இன்னும் வலுவாக போய்க்கொண்டிருக்கிறது. இன்றும் கூட வாரநாட்களில் 40-50% வரையிலும் வார இறுதியில் 80% வரையிலும் எங்கள் அரங்கில் படம் ஃபுல்லாகிறது. ஒரு டப்பிங் படமாக இது மிகப் பெரிய விஷயம்.

பலன் அடைந்தவர்களில் ஒருவரே நேரடியாக கூறிவிட்டார். இதற்க்கு மேல் வேறு என்ன வேண்டும்?

(இந்த பதிவை கொண்டு வர உதவியாக இருந்த ஹைதராபாத்தில் இருக்கும் நண்பர் & நம் தள வாசகர் காந்திக்கு நம் நன்றி!)

 

நேரடி தமிழ் படமாகவே கேரளாவில் இன்னும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் எந்திரன்!

ந்திராவில் மட்டுமல்ல, கேரளாவிலும் எந்திரன் வசூலில் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஆந்திராவில் எந்திரன் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி சாதனை படைத்தது என்றால், கேரளாவில் எந்திரன் நேரடி தமிழ் படமாகவே இந்த போடு போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படம் 50 நாட்களை கடந்து கேரளாவில் இன்னும் பல ஊர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. பரசுராமர் பூமியிலும் சூப்பர் ஸ்டார் சக்கரவர்த்தி தான். கேரளாவில் மட்டுமே சுமார் 125 திரையரங்குகளுக்கு மேல் ரிலீசானது எந்திரன் என்பது கவனிக்கவேண்டியது.

கேரளாவில் எந்திரனை வாங்கிய தயாரிப்பாளருக்கு லாபம் மட்டுமே சுமார்  எட்டு கோடி ரூபாய்கள் கிடைககும் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்திரனுக்கு முன்பும் பின்பும் பல நேரடி மலையாளப் படங்கள் ரிலீசானபோதும் எந்திரனின் உடும்பு பிடி இன்னும் பாக்ஸ் ஆபீசிலிருந்து விலகவில்லை. பல படங்கள் எந்திரனுக்கு பின்னால் தான் இருக்கின்றன - வசூலில்.

 

Enthiran’s matchless magic in Mayajaal - Exclusive Report

மாயாஜால் மல்டிப்ளெக்ஸ். கிழக்கு கடற்கரை சாலையில் (East Coast Road) அமைந்திருக்கும் ஒரு பொழுதுபோக்கு மையம். பௌலிங் மற்றும் வீடியோ கேம் பார்லர்கள், ரெஸ்டாரன்ட்டுகள், என பல உள்ளடக்கிய இந்த முனையத்தின் சிறப்பம்சம் இதில் உள்ள திரையரங்குகள்.

கிட்டத்தட்ட 14 ஸ்க்ரீன்கள் இந்த முனையத்தில் தற்போது உள்ளன.  14 ஸ்க்ரீன்களுக்கும் சேர்த்து (160 x 14) மொத்தம் சுமார் 2300 இருக்கைகள் இங்கு உள்ளன. So, பண்டிகை காலங்களில் இங்கு ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 10,000 பேர் இங்கு படம் பார்க்கின்றனர். எனவே இது ஒரு குட்டி சினிமா டெர்ரிடரி என்றால் மிகையாகாது.

மாயாஜாலுக்கு போனால் ஒரு நாள் முழுக்க ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் பொழுதுபோக்கிற்கு உத்திரவாதம் என்பதால் வார இறுதி மற்றும் விடுமுறை காலங்களில் மக்கள் கூட்டம் இங்கு அலைமோதும். தவிர பார்கிங் பிரச்னை என்பது இங்கு இல்லை.

சூப்பர் ஸ்டாரின் படங்களை பொறுத்தவரை தவறாது இங்கு ரிலீஸாகிவிடும்.  சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகி, சிவாஜி இங்கு மிகப் பெரிய சாதனை படைத்துள்ளன. எனவே இந்திய சினிமாவின் சரித்திரத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ள எந்திரன் இங்கு படைத்திருக்கும் சாதனை குறித்து, மாயாஜால் நிர்வாகத்திடம் பேசி அதை நம் தளத்தில் வெளியிட முடிவு செய்து களமிறங்கினோம். ஆயுத பூஜை அன்று (அக்டோபர் 16) மாயாஜால் மேலாளர் திரு.மீனாக்ஷி சுந்தரை சந்திக்க நமக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைத்தது.

விடுமுறை நாள் என்பதால் நாம் சென்ற அன்று மாயாஜால் படுவிசேஷமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். அத்துணை ஸ்க்ரீன்களையும் நிர்வகிக்க வேண்டும் என்பதால் மேலாளர் திரு.மீனாக்ஷி சுந்தரம் பம்பரமாக சுழன்றுகொண்டிருந்தார். ஆகையால் நாம் சிறிது நேரம் அவர் அறைக்கு வெளியே காக்க வேண்டியதாயிற்று.

அந்த நொடிகளில் மாயாஜாலுக்கு வந்திருக்கும் மக்கள் கூட்டத்தை கவனிக்க ஆரம்பித்தோம். எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக பெண்கள் குழந்தைகள் என FAMILY AUDIENCE தான். சாம்பிளுக்காக சிலரிடம் பேச்சு கொடுத்ததில் பெரும்பாலானோர் வந்திருப்பது எந்திரனை பார்க்க தான் என்று புரிந்தது. அதில் ஒருவர், தான் எந்திரனை முதல் நாளே மாயாஜாலில் பார்த்துவிட்டதாகவும்ம EFFECT மிக நன்றாக இருந்தபடியால், இன்று தன்  COLLEAGUES சுமார் 10 பேரை ரிசர்வ் செய்து அழைத்து வந்திருப்பதாகவும் சொன்னார்.

இதற்கிடையே ரவுண்ட்சில் இருந்து திரு. மீனாக்ஷி சுந்தர் தனது அறைக்கு திரும்ப, நாம் அழைக்கப்பட்டோம்.

இதே போல, 2007 ஆம் ஆண்டு சிவாஜி படத்திற்காகவும் நாம் அவரை சந்தித்திருந்தபடியால், என்னை பார்த்ததும் சட்டென அடையாளம் கண்டுகொண்டார் அவர்.

பரஸ்பர நல விசாரிப்புக்கு பின்பு, எங்கள் உரையாடல் துவங்கியது. நாம் அரை மணி நேரம் தான் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருந்தோம். ஆனால் பேச்சு சுவாரஸ்யத்தில் அது ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக போய்விட்டது. அவர் பேசப் பேச நான் குறிப்பெடுத்து கொள்ள ஆரம்பித்தேன்.

["சார், என்னால் இதை உடனே எழுதி பப்ளிஷ் பண்ண முடியாது. நேரம் கிடைக்கும் போதெல்லாம்  எழுதுவேன். அப்படி எழுதும்போது, ஏதாவது டவுட் வந்தால் போன் பண்றேன். அப்போ சொல்லணும் சார் ப்ளீஸ்...!" என்று நாம் விண்ணபித்துவிட்டு வந்திருந்தபடியால், நாம் எழுதும் போது (type செய்யும்போது) ஏற்பட்ட சந்தேகங்களுக்கு தயங்காது பதில் கூறி உதவினார் திரு.மீனாக்ஷி. அவரது ஒத்துழைப்பு இல்லையெனில் இந்த பதிவு சாத்தியப்பட்டிருக்காது!]

திரு. மீனாக்ஷி சுந்தரம் கூறியதை தொகுத்து இங்கே தருகிறேன்.

மாயாஜாலில் எந்திரனின் PERFORMANCE எப்படி?

* ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் ‘அபாரம்’. மாயாஜால் வளாகத்தில் மட்டும் எந்திரன் அதிகாரப் பூர்வமாக முதல் பத்து நாட்களில் ஒரு கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

* ரிலீஸ் நாளன்று 70 ஷோக்களுக்கு மேல் எந்திரன் இங்கு திரையிடப்பட்டது. இது உலக சாதனையாகும். அதுவும் திரையிட காட்சிகள் அனைத்தும் HOUSEFUL என்பது அதை விட பெரிய சாதனையாகும்.

* தொடர்ந்து வரவேற்பு இருந்தபடியால் முதல் மூன்று வாரங்களுக்கு வார இறுதி நாட்களில் 70 ஷோக்கள் வார நாட்களில் 40 ஷோக்கள் தொடர்ந்து திரையிடப்பட்டன.

சரி.. இத்துனை காட்சிகள் திரையிட்டிருக்கிரீர்களே, ஆடியன்ஸ் ATTENDANCE எப்படி இருந்தது?

* வார நாட்களில் 80% முதல் 85% வரை பார்வையாளர்கள் இருந்தார்கள். வார இறுதிகளில் 100%. (அக்டோபர் 17 - மூன்றாவது வார இறுதியில்). “எந்திரன் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மட்டும் 60 திரையரங்குகளுக்கு மேல் திரையிடப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்” என்று அழுத்தம் கொடுக்கிறார் மீனாக்ஷி சுந்தரம்.

எந்திரனுக்கு ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது ?

* நெகடிவ் ரிப்போர்ட்ஸ் என்பதே இல்லை. படம் பார்த்தவர்கள் அனைவருக்கும், மிகவும் திருப்தி. குறிப்பாக குழந்தைகளுக்கு.

* ரிப்பீட் ஆடியன்ஸ் ஒரு புறமிருக்க, அவர்களை தவிர ஒவ்வொரு வாரமும் புதுப் புது ஆடியன்ஸ் கூடிக்கொண்டே போகிறார்கள்.

உங்கள் வளாகத்திற்கு வருகை தரும் ஆடியன்ஸ் எப்படி?

* அனைத்து தரப்பு ஆடியன்சும் வருகிறார்கள். A, B , C என அனைத்து ஆடியன்சும் எந்திரனுக்கு வருகிறார்கள்.

உங்கள் வளாகத்தில் எந்திரனை பார்த்த வி.ஐ.பி.க்கள் யார் யார் என்று சொல்ல முடியுமா?

* பிரகாஷ் ராஜ், கே.வி. ஆனந்த, உண்ணிகிருஷ்ணன், கே.ஆர், வேல்டெக் ஐசரி வேலன், தவிர கே.நடராஜ் உள்ளிட்ட காவல் துறை உயரதிகாரிகள், பல்வேறு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் அமைச்சர்களின் குடும்பத்தினர் என பல தரப்பட்ட வி.ஐ.பி.க்கள் எந்திரனை இங்கு கண்டு ரசித்திருக்கிறார்கள்.

வசூல் மற்றும் ரன்னிங் சாதனை தவிர எந்திரன்  மூலம் உங்களுக்கு வேறு ஏதாவது பயன் ஏற்பட்டுள்ளதா?

டி.வி.சீரியலில் மூழ்கியிருந்த பல பெண்களை திரையரங்கிற்கு வரவழைத்துள்ளது எந்திரன். இது எங்களுக்கு மட்டுமல்ல சினிமா துறைக்கே இது மிகப் பெரிய பரிசு. காரணம் சீரியலை மீறி பெண்களை திரையரங்கிற்கு வரவழைப்பது சாதாரண விஷயமில்லை. அதவும் திருட்டு வீ.சி.டி. மலிந்து கிடக்கும் இன்றைய காலகட்டங்களில்.

எந்திரனின் இந்த வெற்றியை நீங்கள் எதிர்பார்த்தீர்களா? படத்தை வெளியிடுபவர் என்ற முறையில்?

ஆம். நிச்சயம் எதிர்பார்த்தது தான்.

இந்த படம் குறித்து உங்கள் OBSERVATION என்ன?

ரஜினி சார் பிரமாதப்படுத்திருக்கிறார். அவரை தவிர வேறு யார் இதை செய்திருந்தாலும் எடுபட்டிருக்காது. ஷங்கர் சார் ரஜினியை மிகவும் சரியாக பயன்படுத்தி ஜாக்பாட் அடித்திருக்கிறார். தவிர இசைப் புயல் ரஹ்மானுக்கு இது இன்னொரு சென்ச்சுரி.

எந்திரன் B & C ஆடியன்சை கவர்ந்திருக்கிறதா?

நிச்சமயமாக. நான் பார்த்தவரைக்கும் அவங்க தான் இந்த படத்துக்கே ரிப்பீட் ஆடியன்ஸ்.

சூப்பர் ஸ்டாரை பற்றி உங்கள் கருத்து என்ன?

ரஜினி சாரை மிஞ்ச இதுவரை யாரும் இல்லை. இனியும் யாரும் இல்லை. அவர் மட்டும் இல்லையென்றால் எந்திரனும் இல்லை.

[நாம் பேச ஆரம்பித்ததிலிருந்து சராசரியாக ஐந்து நிமிடத்திற்கு ஒருவர் வீதம் கிட்டத்தட்ட பத்து பேருக்கும் மேல், அவர் கேபினுக்கு வந்து டிக்கட்டுகள் தேவை, இருக்கை ஒதுக்கீடு பிரச்னை, போன்றவற்றில் கோரிக்கை வைத்து அதை நிறைவேற்றி சென்ற வண்ணமிருந்தார்கள். ஆகையால் எங்கள் உரையாடலில் குறிக்கீடு இருந்துகொண்டே இருந்தது. ஆனால் அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதை நான் இடைஞ்சலாக கருதவில்லை. தலைவர் பட டிக்கட்டுகளுக்கு இருக்கும் பிரஷரை நேரில் காணும்  வாய்ப்பு ஆயிற்றே... ! அதுவும் ஒரு முன்னணி மல்டிபிளெக்ஸின் மேலாளரின் ரூமில் இருந்துகொண்டு.]

“இத்துனை ஸ்க்ரீன்களில்  திரையிட்டீர்களே? எந்திரனுக்கு எப்படி இருக்கிறது ப்ரெஷர்?”

இந்த கேள்வியை நாம் கேட்ட கணம், அடுத்து ஒரு குறுக்கீடு…. ஒரு அரசியல் வி.ஐ.பி. யின்  குடும்பத்தினர் படம் பார்க்க வந்திருப்பதாகவும், அடுத்த ஷோவுக்கு 10 டிக்கட்டுகள் வேண்டும் என்றும் அவரது உதவியாளர் வந்து கூற, … நம்மிடம் உடனே திரு.மீனாக்ஷி “பார்த்தீங்கல்ல… இப்போ மூணாவது வாரம்… இன்னைக்கே இப்படி இருக்குன்னா, ரிலீஸ் அன்னைக்கும் அந்த WEEK END ம் எப்படி இருந்திருக்கும்….?” என்று சிரித்துக்கொண்டே நம்மிடம் கேட்டார்

கொஞ்ச நேரத்தில் கேள்வி-பதில் MODE இல் இருந்து பிறகு எங்கள் சந்திப்பு உரையாடல் போல் மாறியது.

திரு. மீனாக்ஷி சுந்தரம் தொடர்ந்து சுவாரஸ்யமான தகவல்களை அளித்தவண்ணமிருந்தார்.

“மாயாஜாலின் வரலாற்றிலேயே மிகப் பெரிய வெற்றிப்படம் எந்திரன் தான். முதல் மூன்று வாரங்களுக்கு ஸ்பெஷல் ஷோக்கள் போடப்பட்டன. தவிர ஒவ்வொரு வாரமும் ரிப்பீட் ஆடியன்சுடன் புது புது ஜனங்களை இந்த படத்திற்கு தான் பார்க்கிறேன்.”

உங்கள் அனுபவத்தில் எந்திரனின் ‘A B C ‘… CENTER-WISE PERFORMANCE எப்படி?

சிறிய சிறிய ஊர்களில் கூட எந்திரன் ரிலீசாகியுள்ளது. இதனால் A B C என்ற செண்டர் பாகுபாடுகளை   சூப்பர் ஸ்டார் தகர்த்துவிட்டார் என்றே சொல்லலாம். B,  C என கூறப்படும் ஊர்களில், செகண்ட் ரிலீஸ் மட்டுமே செய்யும் பல திரையரங்குகள் முதன் முறையாக புதிய படத்தை திரையிட்டிருக்கின்றன என்றால் அது எந்திரன் தான். இதன் மூலம் A B C போன்ற பாகுபாடுகள் எல்லாம் உடைத்து நொறுக்கப்பட்டுவிட்டன.”

எந்திரனில் வரும் சில காட்சிகள் B சென்டரின் சில பிரிவினர் மற்றும் C செண்டர் ஆடியன்ஸ் ஆகியோருக்கு புரியாது என்ற விமர்சனம் எழுந்துள்ளதே ?

அப்படி அல்ல. நீங்கள் குறிப்பிடும் ஆடியன்சுக்கு இது போன்ற புது புது விஷயங்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருக்கிறது. மேலும் அதற்காகத் தானே ரஜினி சார் இருக்கிறார் படத்தில். தவிர, ஷங்கர் கூடுமானவரை அனைத்து காட்சிகளும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்று மிகவும் மெனக்கெட்டிருப்பது படத்தை பார்த்தாலே புரியும்.


எந்திரனுக்கு FANS REACTION தொடர்பான வேறு ஏதாவது சுவாரஸ்யமான - நீங்க பார்த்து வியந்த விஷயங்கள் - உள்ளதா?

எங்கள் மல்டிப்ளெக்ஸ்க்கு வரும் ‘A’ சென்டர் ஆடியன்ஸ் (உயர்தட்டு மக்கள், தொழிலதிபர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன உயரதிகாரிகள்) பலர், ‘எங்களை விஷேஷமாக நினைத்து தனிமைபடுத்தி விடாதீர்கள். அடிமட்ட, தீவிர ரசிகர்களுக்கு (HARD-CORE FANS) நடுவே எங்கள் இருக்கைகளை ஒதுக்குங்கள் அவர்களுடன் சேர்ந்து விசிலடித்தது, அவர்கள் விசிலடிப்பதை ரசித்து, கை தட்டி படத்தை அவர்களுடன் பார்க்கவேண்டும் ரசிக்கவேண்டும்’ என்று கேட்டு அதன்படியே டிக்கட்டுகள் பெற்று படம் பார்த்திருக்கிறார்கள். இந்திய திரையுலக கண்டிராத அதிசயம் இது. இப்படி A B C என அனைத்து சென்டர்களையும் ஒன்றாக்கிய பெருமை சூப்பர் ஸ்டார் ஒருவருக்கு தான் சேரும்.

எந்திரன் இந்திய சினிமாவின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. காரணம் மூன்றாவது வாரமும் எங்கள வளாகத்தில் படம் ஹவுஸ்புல்லாக போகிறதே… அதுவும் இத்துனை தியேட்டர்களில் திரையிட்டும்… தவிர எந்த ஒரு ஆடியன்சும் ஒரு நெகடிவ் ரிப்போர்ட் கூட எங்களிடம் கூறியதில்லை.

 

அதற்க்கு காரணம் உங்கள் திரையரங்கிற்கு பெரும்பாலும் வருபவர்கள் உயர்தட்டு மக்கள் என்பதால் இருக்கலாமா? அதாவது ELITE PEOPLE?

அப்படி அல்ல. சென்னை நகருக்கு சென்று படம்பார்க்கும்பொழுது ஏற்படும் செலவைவிட எங்கள் வளாகத்தில் குறைவாகத்தான் ஆகும். எனவே, எங்கள் வளாகத்திற்கு இந்த பெல்ட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் வருகிறார்கள்.

சூப்பர் ஸ்டாரின் சிவாஜி, சந்திரமுகி ஆகிய படங்கள் கூட எங்கள் வளாகத்தில் சாதனைகள் படைத்த படங்கள் தான். என்ன ஒரு வித்தியாசம் என்றால அப்போது இருந்தது 6 ஸ்க்ரீன்கள் மட்டுமே. இப்போது 14 ஸ்க்ரீன்கள்.

நம்முடன் பேசிக்கொண்டிருக்கும்போதே நமது தளத்தை பார்வையிட விரும்பி தனது லேப்-டாப்பில் ஓபன் செய்து பார்த்தார். “மிக சிறப்பாக பராமரித்து வருகிறீர்கள். மிக சரியாக தேவையான விஷயங்களை மட்டும் தருகிறீர்கள் என தெரிகிறது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.” என்றார். உடனே நமது நன்றியை தெரிவித்துக்கொண்டோம். எனது விசிடிங் கார்டை அவருக்கு கொடுத்தேன்.

அடுத்த சில நொடிகளில்… விடைபெற்றுவிட்டு கிளம்பினேன். மகிழ்ச்சியாக. நம்மை நன்கு உபசரித்து அனுப்பினார். எல்லா பெருமையும் தலைவருக்கே!!


இதோ… கட்டுரையை நிறைவு செய்துவிட்டு FINAL UPDATE க்காக மறுபடியும் இன்று காலை அவரை தொடர்புகொண்டேன்.

“தீபாவளிக்கு புதிய படங்கள் மாயாஜாலில் திரையிடப்படுகின்றன. இருப்பினும் இன்னும் எந்திரன் நன்றாக போவதால் வரும் வெள்ளி முதல் ஒரு ஸ்க்ரீனில் (நான்கு காட்சிகள் வீதம்) எந்திரன் தொடர்ந்து திரையிடப்படும். எனவே எந்திரனை பார்க்கவென்றே வரும் ஆடியன்ஸ் நிச்சயம் ஏமாற்றமடைய மாட்டார்கள்” என்றும் கூறினார் திரு.மீனாக்ஷி சுந்தரம்.

“மாயாஜாலில் எந்திரனின் பயணம் மிகவும் திருப்திகரமாக இருந்தது, வசூல் மழையில் சம்பந்தப்பட்ட யாருக்கும் எந்த குறையும் எந்திரன் வைக்கவில்லை” என்றும் கூறினார் திரு. மீனாக்ஷி சுந்தரம்.

‘சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு, சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு’ என்னும் பாடலுக்கேற்ப, வெற்றி மீது வெற்றி குவித்து சாதனை வானில் சிறகடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. அவர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?”

“அவர் விரும்பும் பாதையில் அவர் சென்றால், வெற்றி மேல் வெற்றியை அவர் குவிப்பார்….! ரசிகர்கள் அதை புரிந்துகொள்ளவேண்டும்!!”

எந்திரனின் மாயாஜால் சாதனை குறித்து ஒரு பன்ச் ப்ளீஸ்?

ENTHIRAN’S MAGIC AT MAYAJAAL என்று போட்டுக்கொள்ளுங்கள் என்றார் திரு. மீனாக்ஷி. சுந்தரம். இதோ அதையே தலைப்பாக்கிவிட்டேன்.

இக்கட்டுரைக்காக் பொறுமையுடன் காத்திருந்த அனைவருக்கும் நன்றி.

நமக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு நல்கிய மாயாஜால் மேலாளர் திரு. மீனாக்ஷி சுந்தரம் அவர்களுக்கு நம் தள வாசகர்கள் மற்றும் சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி.

 

எந்திரனின் அமோக வசூலால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி! மதுரையில் நடந்த கூட்டத்தில் அறிவிப்பு!!

ந்திரன் வசூல் குறித்து அறிவிக்கவேண்டியவர்களே  அறிவித்துவிட்டார்கள்.

திரையரங்கு உரிமையாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் மதுரையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. தங்களுக்கு தொடர்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தி வந்த ஒரு நடிகரின் படத்தை ரிலீஸ் செய்வது குறித்து நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், மேற்படி நடிகர் நஷ்டத்தை ஈடு செய்யாவிட்டால் அவரது படத்தை ரிலீஸ் செய்யமாட்டோம் என்று அறிவித்துள்ளனர். மேலும், எந்திரனின் அமோக வசூலால் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். அது தவிர, தனக்கு தொடர்பு இருக்கிறதோ இல்லையோ தனது படங்களால் நஷ்டம் ஏற்பட்ட போது அதை சூப்பர் ஸ்டார் ரஜினி ஈடு செய்ததையும் சுட்டிக்காட்டி பாராட்டியிருக்கின்றனர். திரையரங்கு உரிமையாளர்களின் நோக்கம் எதுவோ நமக்கு தெரியாது… ஆனால் எந்திரனின் வசூல் சாதனை பற்றிய ஒரு மிகப் பெரிய உண்மையை கூட்டத்தில் அறிவித்ததற்கு நம் நன்றி.

 

எந்திரன் துவக்கி வைத்திருக்கும் புதிய ட்ரென்ட் & எந்திரனின் 50 நாள் OFFICIAL வசூல் !

ஐம்பது நாட்களை எந்திரன் தாண்டியிருக்கும் நிலையில், எந்திரன் இதுவரை குவித்துள்ள வசூல் - OFFICIAL வசூல் - எவ்வளவு தெரியுமா ? ரூ.350 கோடிகள்.

இது பற்றிய சன் குழுமத்தின் DINAKARAN.COM இல் வந்த செய்தி கடைசியில் தரப்பட்டுள்ளது. எந்திரனை ரோபோவின் தாயகமான ஜப்பானில் வெளியிட முயற்சிகள் நடப்பதாக கூறப்பட்டுள்ளதை கவனியுங்கள்.

50 வது நாளை தாண்டி வசூல் ரீதியாக எந்திரன் இப்படி ஒரு மகத்தான சாதைனையை செய்திருந்தாலும், அதிகப்படியான திரைகளில் சில ஸ்டேஷன்களில் படம் நீக்கப்பட்டதை (அதுவும் 50 நாட்கள் வெற்றிகரமாக ஓடியபின்பு) பற்றி நம் ரசிகர்கள் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். அது தேவையற்ற ஒன்று. இந்தியா முழுதும் வெற்றிகரமாக ஓடி, வசூலில் சாதனை படைத்துள்ள ALL-TIME BLOCKBUSTER களான டபாங், த்ரீ இடியட்ஸ் போன்ற படங்களுக்கு இது போன்று சென்டர் லிஸ்ட்டுகளையா உதாரணமாக கூறுகிறார்கள்? அதெல்லாம் பழைய காலம் தம்பிகளா.

இப்போல்லாம் GROSS COLLECTIONS தான் பேசும். WIDE RELEASE. QUICKER REVENUE. SECURED INVESTORS என்ற வார்த்தைகள் தான் இப்போ திரைப்பட வெளியீடுகளில் கடைப்பிடிக்கப்படும் மந்திரம். சும்மா ‘அங்கே ஓடிச்சு, இங்கே ஓடிச்சு’ ன்னு சொல்லிக்கிட்டு இருக்குறதெல்லாம் தப்பு. வசூல் எவ்ளோ? அது தான் மேட்டர்.

தமிழ் சினிமாவின் ட்ரென்டையே எந்திரன் தற்போது மாற்றிவிட்டுள்ளது. மார்க்கெட் உள்ள முன்னணி நட்சத்திரங்களின் (?!!) திரைப்படங்கள் அனைத்தும் இனி (எந்திரன் அளவுக்கு இல்லாவிட்டாலும்) அதிகப்படியான தியேட்டர்களில் தான் ரிலீசாகும். (ஓடுமா ஓடாதான்னு என்னை கேட்க்காதீங்க!).

இருப்பினும் சென்டர்கள் பற்றி ஆதங்கப்படும் நம் ரசிகர்களுக்காக இதை தருகிறேன். இதில் கூட நம் சாதனையை யாரும் நெருங்க வில்லை.

இன்றைய நிலவரத்துக்கு (30/11/2010) எந்திரன் ஓடிக்கொண்டிருக்கும் நேரடி (Released in 430 screens) திரையரங்குகள் எவ்வளவு தெரியுமா?

 

சென்னை, செங்கல்பட்டு g (C C) - 17

வட ஆற்காடு, தென் ஆற்காடு (N A )- 8

நெல்லை, கன்னியாகுமரி (T K) - 3

மதுரை, ராம்நாட் (M R) - 7

கோவை, சேலம் (C S) - 7

திருச்சி, தஞ்சாவூர் (T T) - 8

———————————-

மொத்தம்  50 திரையரங்குகள் (60 ஆம் நாளில்)-

———————————-

குறிப்பு :

* தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மேற்கூறிய இந்த ஆறு விநியோக வட்டங்களுக்குள் அடங்கிவிடும்.

* வெளிமாநிலங்கள், மற்றும் அயல்நாடுகள் இதில் சேர்க்கப்பவில்லை.

* ரிலீஸ் ஆனா நாள் முதல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்களே மேற்கண்ட பட்டியலில் உள்ளது. ஷிப்டிங் முறையில் ஓடிக்கொண்டிருக்கும் திரைகள் இதில் சேர்க்கப்படவில்லை.

சிவாஜிக்கு பிறகு எந்திரன் தான்!

2007 ஆம் ஆண்டுக்கு பிறகு - சிவாஜிக்கு பிறகு - அதிக திரையரங்குகளில் 60 ஆம் நாள் காணும் ஒரே படம் - எந்திரன் தான். எந்திரன் தான். எந்திரன் தான். இடையில் மெகா பட்ஜெட் படங்கள் சில ரிலீசாயின என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜியின் சாதனையை அவை தொடக்கூட முடியவில்லை. எந்திரன் சாதனையையும் அவை நெருங்க முடியவில்லை. எல்லாப் புகழும் இறைவனுக்கே!

“இன்றைய ட்ரெண்டில் 50 நாட்கள் ஓடினாலே 100 நாட்கள் ஓடியதற்கு சமம்” - மாயாஜால் மீனாக்ஷி சுந்தரம்

மாயாஜால் மேலாளர் திரு.மீனாக்ஷி சுந்தரம் நமது தளத்திற்காக நேற்று அளித்த விசேஷ தகவல் :

“இப்போல்லாம் ஒரு படம் 50 நாட்கள் ஓடினாலே நூறு நாட்கள் ஓடியதற்கு சமம். காரணம் அதிகரித்துவிட்ட ரிலீஸ் ஸ்டேஷன்கள். சூப்பர் ஹிட் என்று வர்த்தகத்தால் டிக்ளேர் செய்யப்பட்ட படங்கள் கூட 50 நாட்கள் தாண்டி தற்போது எடுபடுவதில்லை. எந்திரனை பொறுத்தவரை தமிழகம் முழுதும் பல திரையரங்குகளில் 50 நாட்கள் தாண்டியிருக்கிறது. அவற்றை நூறு நாட்கள் என்று தான் கணக்கில் கொள்ளவேண்டும். எங்கள் மல்டிபிளெக்ஸை பொறுத்தவரை ரிப்பீட் ஆடியன்ஸ்களால் எந்திரன் இன்னும் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. அனைத்து காட்சிகளும் பெரும்பாலும் ஃபுல்லாகிவிடுகிறது. நூறு நாட்கள் கியாரண்டி.” என்று முடித்துக்கொண்டார் திரு.மீனாக்ஷி சுந்தரம்.

(இன்றைய ட்ரெண்டுக்கு நூறு நாட்கள் ஒரு படம் ஓடுதுன்னு சொன்னா அது சில்வர் ஜூபிலி தான்! வேறென்ன வேண்டும்?)

————————————————————————————————

//சிலிக்கான் சிங்கத்தின் அசத்தல் வெற்றி!

Dinakaran.com 11/19/2010 5:46:57 PM

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பிரம்மாண்ட தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய சூப்பர் ஸ்டாரின் எந்திரன் திரைப்படம் உலகம் முழுக்க 50 நாட்களை கடந்து வெற்றி நடைபோடுகிறது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுக்க 3000 திரையரங்குகளில் வெளியாகி வசூலில் புதிய சரித்திரம் படைத்தது. உள்நாடு, வெளிநாடு இரண்டிலும் சேர்த்து இந்தப் படத்தின் மொத்த வசூல் ரூ 350 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரான படம் மட்டுமல்ல… இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படமும் எந்திரனே. தெலுங்கில் புதிய வசூல் சாதனை நிகழ்த்தியுள்ள ரோபோ, இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆந்திராவில் மகதீரா படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ரோபோ. குஜராத், ஹரியானா போன்ற வெளி மாநிலங்கள், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் இந்தப் படம் 50 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருப்பதாக சன் பிக்சர்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் எந்திரன் படத்தை ஜப்பானில் வெளியிடும் முயற்சிகளில் உள்ளது சன் பிக்சர்ஸ்.

அரிமா அரிமா பாடலில் ரஜினியை வைரமுத்து சிலிக்கான் சிங்கம் என எழுதியுள்ளார். இந்த சிலிக்கான் சிங்கத்திற்கு ஓய்வு கிடையாது என்பதை எந்திரன் நிரூபித்துள்ளது.//

http://cinema.dinakaran.com/cinema/EndhiranDetail.aspx?id=3840&id1=18

 

CLICK TO READ : எந்திரன் 100 நாள் பட்டையை கிளப்பிய கொண்டாட்டம்






 
0 Comment(s)Views: 2113

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information