திரையுலகிலும் சரி, நிஜத்திலும் சரி, சூப்பர் ஸ்டார் தொட்டிருக்கும் உச்சத்தை, மற்ற நடிகர்கள் கற்பனையில் மட்டுமே எண்ணிப் பார்க்க முடியும். சூப்பர் ஸ்டார் நாற்காலியை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கே சொந்தமாக்கிக் கொண்டவர். தமிழ் திரையுலகை உலக சினிமாவிற்கு அறிமுகப் படுத்தியவர்.
தன் வெற்றிகள் மூலம் மட்டுமே தன் எதிர்ப்பாளர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார், இப்போது இந்தியாவின் ஒரு முன்னணிப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாடம் சொல்லப் போகிறார். “எந்திரன்” படத்தின் வெற்றி உலகம் அறிந்ததே. இதுவரை தமிழ் சினிமாவையும் ஏளனம் செய்து கொண்டிருந்தவர்களை வாயடைக்க வைத்தது இந்தப் படத்தின் வெற்றி என்றால் மிகையாகாது.
இந்திய அளவில் வசூல் சாதனை புரிந்த திரைப்படங்களின் வசூலை எல்லாம், வெளியான மூன்றே வாரங்களில் முறியடித்து “இந்திய திரையுலகின் முடி சூடா மன்னன்” என்று நிரூபித்து விட்டார் நம் தலைவர். அவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக ஆமதாபாத் நகரில் உள்ள முன்னணிப் நிர்வாகவியல் பல்கலைக்கழகமான “இந்திய மேலாண்மைப் நிறுவனம் - ஆமதாபாத்” - (Indian Institute of Management, Ahmedabad), முதுநிலை பட்டையப் படிப்பு மாணவர்களுக்கு (PG), “எந்திரன் / தி ரோபோட்” படத்தின் வெற்றியை பாடமாக வைக்கப் போகிறார்கள். இது குறித்த செய்தி இன்றைய “THE TIMES OF INDIA” நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. அதன் தமிழாக்கம்….
//”அவர் சிகரெட் தூக்கிப் போட்டு பிடிக்கும் லாவகத்தையும், கூலிங் க்ளாசை ஒரு சுழற்று சுழற்றி அணியும் ஸ்டைலையும் பற்றி மட்டுமே பேச லட்சகணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவர் வயதில் கிட்டத்தட்ட பாதியே உடைய கதாநாயகிகளுடன் அனாயசமாக நடனமாடுகிறார்….மொத்த ரசிகர் கூட்டமும் ஆர்ப்பரிக்கிறது….அவர் படங்கள் அனாசயமாக 100 கோடி ரூபாய் வசூலை, வெளியான முதல் வாரத்திலேயே குவித்துவிடுகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினியை தவிர வேறு யாராக இது இருக்க முடியும்…?
அவரது நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் வசூலை வாரிக்குவித்த எந்திரன் / தி ரோபோட் - ‘இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகம் - ஆமதாபாத் இல் முதுநிலை மாணவர்களுக்கு ஆய்வுப் படிப்பாக (Case Study) வைக்கப்பட உள்ளது…
“வர்த்தகப் பார்வையில் தற்போதைய சினிமா” என்ற பெயரில் மேலாண்மை மாணவர்களுக்கு இந்தப் பாடப் பிரிவு விருப்பப் பாடமாக வைக்கப்பட உள்ளது. இந்தப் பாடப் பிரிவில், “எந்திரன்/ தி ரோபோட்” திரைப்படத்தின் வெற்றி குறித்தும், அதன் உலகளாவிய வர்த்தகம் குறித்தும் ஒரு ஆய்வுப் படிப்பு (Case Study) பாடமாக வைக்கப்பட உள்ளது. மேலும், தமிழ் சினிமாவிற்கு உலகம் தாண்டிய வரவேற்பு உள்ளதை முதன் முதலில் உணர்த்திய, சூப்பர் ஸ்டாரின் ‘முத்து’ திரைப்படம் குறித்தும் ஒரு ஆய்வுப் படிப்பு (Case Study) பாடமாக வைக்கப்பட உள்ளது. ‘முத்து’ திரைப்படம் ஜப்பானில் ‘தி டான்சிங் மகாராஜா’ என்ற பெயரில் ஜப்பானிய மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி, 1998 இல் $1.6 million வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இது தவிர இந்த பாடத் தொகுப்பு, ஆமீர் கானின் ஆஸ்கர் எண்ட்ரியான ‘பீப்ளி லைவ்’ படம் சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள் குறித்தும் அலசல் நடத்தும். இந்த பல்கலைகழகத்தின் முன்னால் மானவரனா கந்தசாமி ப்ஹரதன் இந்த பாடத்திட்டங்களை தயாரித்திருக்கிறார். “இந்திய சினிமா எளிமையான ஒரு பொழுதுபோக்கு. அதற்க்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. ஆனால் கார்பரேட் ரீதியிலான செயல்பாடுகள் இதுவரை சினிமாவில் எடுபடவில்லை. ஆகையால் சினிமாவை சரியாக புரிந்துகொண்ட, மேலாண்மை நிர்வாகிகளின் தேவை சற்று அதிகமாகவே இருக்கிறது. இந்த பாடத்திட்டம் அதை நிறைவு செய்யும்.//
(TOI செய்தியின் தமிழாக்கத்தை நண்பர் விஜய் ஆனந்த் எனக்கு அனுப்பி, நம் தளத்தில் போஸ்ட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். உடனே அதை எடிட் செய்து வைத்திருந்தேன். நேற்று காலையிலேயே போஸ்ட் செய்ய வேண்டியது. ‘முத்து’ புகைப்படத்துடன் சேர்த்து பதிவை பப்ளிஷ் செய்தாள் நன்றாக இருக்கும் என்று கருதி சற்று தாமதமாக வெளியிடுகிறேன்.)
Today’s Dinakaran news on the same:
|