18 Nov 2010
கவிஞர் வாலி 1000 நிகழ்ச்சி
சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த இரு நாட்களில் பல்வேறு வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
ஒன்று : மறைந்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கைலாசத்தின் மனைவியும், கவிஞரும், மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மாமியாருமான மைரைந்த சௌந்தரா கலைசாத்தின் நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை தியாகராய நகர் சர்.பி.டி.தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. பல அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்துகொண்டு, உரையாற்றினார்.
இரண்டு : அதன் பின்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நடைபெற்ற கவிஞர் வாலி 1000 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி முதலில் கலந்துகொள்வதாக இல்லை. சௌந்தரா கைலாசத்தின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பும்போது, வைரமுத்து அடுத்து கவிஞர் வாலியின் பாராட்டுவிழா நிகழ்ச்சிக்கு செல்லும் விபரத்தை கூற, அப்போது சூப்பர் ஸ்டாருக்கு உதித்தது தான் மேற்படி நிகழ்ச்ச்சயிலும் கலந்துகொள்ளும் விபரம்.
உடனே, தந்தது டிரைவரிடம் நாரத கான சபாவுக்கு வண்டியை திருப்புமாறு கட்டளியிட, சூப்பர் ஸ்டாரின் கார், டி.டி.கே. சாலை விரைந்தது. சூப்பர் ஸ்டார் அங்கு செல்லும் போது எப்படியும் இரவு, 8.45 - மணி இருக்கும். மின்னலென சூப்பர் ஸ்டார் ஆடிட்டோரியத்துக்குள் நுழைய, கைத்தட்டலுடன் STANDING OVATION கிடைத்தது. கேமிராக்கள் ஃபிளாஷ் மழையை மின்னலென பொழிந்தன. ஏ.சி.யை விட சிலர் விடும் பெருமூச்சு சத்தம் பலமாகவே கேட்டது. சூப்பர் ஸ்டார் வந்திருக்கும் விபரம் SMS மூலம் பறந்தன.
சூப்பர் ஸ்டார் வருவது திடீர் நிகழ்வாக அமைந்ததாலும் அது யாருக்கும் தெரியாததாலும் பல செய்தியாளர்கள் இதை மிஸ் செய்தனர். அதுவரை நிகழ்ச்சியை கவர் செய்து கொண்டிருந்த முக்கிய செய்தியாளர்கள், இனிமே என்ன இருக்கு… என்று நினைத்து 8.30 க்கெல்லாம் கிளம்பியிருந்தனர். பெரும்பாலானோருக்கு சூப்பர் ஸ்டார் வரும் விபரம் தெரியாது. விஷயம் தெரிந்து அவர்கள் வருவதற்குள் ரஜினி பேசி முடித்துவிட்டார்.
கடும் கரகோஷத்துக்கிடையே சூப்பர் ஸ்டார் பேசியதாவது, “முதல்ல இந்த நிகழ்ச்சியில நான் கலந்துகறதா இல்லே. வேற ஒரு நிகழ்ச்சிக்கு போயிட்டு திரும்புபோது, வைரமுத்து சார் ஏன் நீங்க வரலியான்னு கேட்டாங்க. நான் வரலேன்னு சொல்லிட்டேன். ஏன்னா,. என் டாட்டர் சௌந்தர்யா மேரேஜுக்கு வாலி சாருக்கு நேர்ல போயே நான் இன்விடேஷன் கொடுத்தேன். ஆனா அவரு வரலே. நாம் மட்டும் இதுக்கு ஏன் போகணும்னு தோணிச்சு. ஆனா அந்த மேட்டரை பிறகு அவர் கிட்டே பேசிக்கலாம். ரொம்ப பெரியவர் வாலி சார். அவரோட பாராட்டு விழாவுக்கு போறது தான் சரின்னு தோணிச்சு. உடனே வந்துட்டேன்.
இங்க ரொம்ப பெரியவங்க எல்லாம் வந்திருக்காங்க. ஆரம்ப காலங்கள்ல என் படத்துல என்னோட சாங்க்சுக்கு பாப்புலர் சிங்கர்ஸ் யாராவது பாடமாட்டாங்கலான்னு நான் ஏங்கினப்போ எனக்கு குரல் கொடுத்தவர் எம்.எஸ்.வி. சார். யாரோட வாய்சும் மூன்று முடிச்சு படத்துல எனக்கு யாரோட வாய்சும் செட்டாகாதப்போ ரெண்டு எனக்காக ரெண்டு பாட்டு பாடினார் எம்.எஸ்.வி. சார். அப்புறம் ‘பைரவி’ படத்துல எனக்கு பாடி பிரேக் கொடுத்தவர் டி.எம்.எஸ். சார். இவங்க எல்லாரையும் இங்கே பார்க்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
வாலி சார்… அவரை பத்தி என்ன சொல்றது. ரொம்ப பெரியவர் அவர். திறமைசாலி. அற்புதமான பாட்டுக்களையெல்லாம் அசால்ட்டா எழுதிட்டு போய்கிட்டே இருப்பார். எனக்கு எத்தனையோ பாட்டு அவர் எழுதியிருக்கார். எம்.ஜி.யார் சாருக்கு “நான் ஆணையிட்டால்” மாதிரி எனக்கு ‘மன்னன்’ படத்துக்கு எழுதின “அம்மா என்றழைக்காத” பாட்டு. அதுக்கு இணையான ஒரு பாட்டு வருமா?
அப்புறம் ஷங்கர் சொன்னது போல, பிரமாதமான பாடல்களை நொடிப்பொழுதில் எழுதிட்டு போய்கிட்டே இருப்பார். உதரணத்துக்கு, சந்திரமுகி படத்துல ஸாங் ரேக்கார்டிங்கப்போ இன்ட்ரோ சாங்குக்கு நல்ல வரிகள் தேவைப்பட்டது. என்னென்னவோ யோசனை பண்ணிபார்த்தும் ‘பல்லவி’ மட்டும் சரியா வரலே. அப்புறம் வாலி சார் வெத்தலை போட்டாரு. யோசிச்சாரு… போய் துப்பிட்டு வந்து சொன்னாரு, “தேவுடா…தேவுடா… ஏழுமலை தேவுடா… சூடுடா சூடுடா எங்க பக்கம் சூடுடா…” ன்னு. எங்களால ஒன்னுமே சொல்ல முடியலே. என்ன வரிகள்… அந்த பாட்டு எவ்ளோ பெரிய ஹிட்டாச்சுன்னு எல்லோருக்கும் தெரியும்.
ராமாயணத்துல வர்ற வாலி கேரக்டர் மாதிரி நிஜத்திலும் இவர் அப்படி தான். வாலிக்கு எதிராக யார் போய் நின்னாலும் அவர்களின் பலம் வாலிக்கு பாதி வந்துவிடும். அதுபோல தான் இவரும். நீண்ட வருஷங்கள் இவர் ஆயுளோட சந்தோஷமா இருக்கன்ம்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்.” என்று முடித்தார் சூப்பர் ஸ்டார்.
மூன்று : ஞாயிறு மாலை சூப்பர் ஸ்டார் கலந்துகொண்டது மற்றொரு நிகழ்ச்சி. ஒய்.ஜி.மகேந்திராவின் வெங்கடா 3 நாடகம். ராணி சீதை ஹாலில் நடைபெற்ற இந்த நாடகத்திற்கு தனது துணைவியார் லதாவுடன் வந்திருந்த சூப்பர் ஸ்டார் நாடகம் முடியும் வரை அமர்ந்து ரசித்தார்.
என்னவோ தெரியவில்லை… எப்போதும் இல்லாத அளவிற்கு சற்று ரிலாக்ஸ்டாக காணப்பட்டார் தலைவர். இப்படி ஒரு காஷுவலான கலக்கலான ட்ரெஸ்ஸில் தலைவரை பாக்குறதே சூப்பர் தான்.
புகைப்படகாரகளுக்கு நீண்ட நேரம் புகைப்படமெடுக்க அனுமதி கிடைக்கவில்லை. நாடகம் துவங்கியதும் விளக்குகளை அனைக்கப்பட்டுவிட, போட்டோகிராபர்களும் வேறு வழியின்றி எடுத்தவரைக்கும் திருப்தி பட்டுக்கொள்ளவேண்டியிருருந்தது.
ஆக, எந்திரனை முடித்துவிட்டு தலைவர் படு ரிலாக்ஸ்டாக இருக்கிறார். வேறு என்ன சொல்ல… “தேவுடா…தேவுடா… எங்க பக்கம் சூடுடா…!”
தங்க மகனின் சிங்க நடை - கலைப்புலி தாணு இல்ல திருமணத்தில் சூப்பர் ஸ்டார்!
அழகிரி இல்ல திருமணத்தில் சூப்பர் ஸ்டார்
மதுரையில் நடைபெற்ற மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதியின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்துகொண்டார். அவருடன் அவரது துணைவி லதா மற்றும் மருமகன் நடிகர் தனுஷ் ஆகியோரும் வந்திருந்தனர்.
பல்வேறு அரசிய தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் மணமக்களை ஆசீர்வதித்து சூப்பர் ஸ்டார் ரஜினி பேசினார். அவரது உரை மற்றும் முழு திருமண நிகழ்ச்சிகள் மதுரையில் இயங்கும் உள்ளூர் கேபிள் டி.வி.யான் தயா டி.வி.யில் ஒளிபரப்பட்டது. ரசிகர்களும் பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியதாவது :
“எல்லா புகழும் இறைவனுக்கே. மதுரையில் நடைபெறும் இப்படி ஒரு அருமையான நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்தி வைத்த நிதியமைச்சர் அன்பழகன், விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து பல்வேறு பணிகளுக்கு இடையே மதுரை வந்துள்ள மத்திய நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி மற்றும் இந்திய திருநாட்டின் மூத்த அரசியல் தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தமிழக மக்களுக்கும் எனது முதல் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.”
“எனக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு பேரன்கள் உள்ளனர். இரண்டு பேரன்களுடன் விளையாடும் போதே இவ்வளவு சந்தோஷம் என்றால், பேரன்களின் குழந்தைகளுடன் விளையாடும் போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அதிலும் பேரக்குழந்தைகளின் திருமணத்தை நடத்தி வைப்பது என்பது அதைவிட சிறந்ததாகும். கொள்ளு பேரன்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் முதல்வர் கருணாநிதி எப்படி சந்தோஷமாக இருப்பார் நினைத்துபாருங்கள். அந்த வகையில் முதல்-அமைச்சர் கருணாநிதி தனது பேரன்களின் திருமணத்தை நடத்தி வைத்து நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.”
“மதுரைக்கு 32 ஆண்டுக்கு பிறகு இப்போது வருகிறேன். இங்கு எனக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. என்னால் இது மறக்க முடியாதது. முன்பு வந்தபோது மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்றேன். கோவிலில் அர்ச்சனை செய்த போது, என் நட்சத்திரம் என்ன என்று கேட்டார்கள். எனது நட்சத்திரம் எனக்கு அப்போது தெரியாது. அப்போது என்னுடன் வந்திருந்த சச்சு அம்மா, சுவாமி பேருக்கே அர்ச்சனை செய்யுங்க என்றார். நான் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற பிறகு தான் என் நட்சத்திரத்தை ஜாதகத்தை தோண்டி எடுத்தனர். நான் பிற்காலத்தில் தெரிந்துகொண்டேன், அந்த சுவாமியின் நட்சத்திரம் தான் என்னுடையதும் என்று.” (திருவோணம் நட்சத்திரம் மகாவிஷ்ணுவின் நட்சத்திரம் ஆகும்).
“முதல்வருக்கு 2 மிகப்பெரிய சொத்துக்கள் உள்ளன. ஒன்று தி.மு.க. என்னும் கட்சி, மற்றொன்று அவரது மகன்களான மு.க.அழகிரி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆவார்கள். தி.மு.க.வை மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினும், இவர்களை தி.மு.க.வும் காக்க வேண்டும்.”
“அழகிரி, ஸ்டாலினை 38 ஆண்டுக்கு முன்னாலே எனக்கு தெரியும். கோபாலபுரம் அப்போது ஒரு குறுக்கு சந்து. 8 மணிக்கு மேல் காக்கா, நாய், நரி கூட போகாது. மாடி மேல உட்கார்ந்து பேச்சுலர்கள் வழக்கமாக கலட்டா செய்து கொண்டிருப்போம். தெருவில் 2, 3 பேருடன் பேசிக்கொண்டிருப்பார் ஸ்டாலின், 10, 15 பேருடன் போனால் அழகிரி என்று சொல்வார்கள்.”
“நான் இதுவரை ஸ்டாலினுடன் மட்டுமே அதிகம் பழகி உள்ளேன். அழகிரியிடம் அந்த அளவிற்கு பழகாவிட்டாலும் தற்போது ஏதோ பல ஆண்டு அவருடன் பழகியது போன்ற ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது.”
“மணமக்கள் பொருத்தமாக இருக்கிறார்கள். இது காதல் திருமணம். ஒருத்தரை ஒருத்தர் புரிந்து வைத்திருக்கிறீர்கள். பொருத்தம், லட்சணம், அழகு இந்த மூன்றும் நிறைந்த புதுமண காதல் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும், விட்டு கொடுத்தும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்வில் ஒத்துழைத்து சென்றால் வாழ்வு என்றும் சிறக்கும்” என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரின் மூத்த மகள் திருமணத்தில் தலைவர் ரஜினி
அரசியல் அரிச்சுவடியின் அடிப்படை கருத்தை பொருத்தமான நேரம் பார்த்து, இடம் பார்த்து வெளியிட்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரின் மூத்த மகள் திருமணத்தில் முதலமைச்சர், பல்வேறு கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர்.
திருநாவுக்கரசரின் நீண்டகால நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகை தந்து மணமக்களை வாழ்த்திப் பேசினார். பொதுவாக திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது மேடைகளில் பேசுவதைத் தவிர்க்கும் சூப்பர்ஸ்டார் நேற்று மேடையில் வாழ்த்துரை வழங்கினார். அப்போது திருநாவுக்கரசர் முன்பு டெல்லிக்கு சென்றபோது டெல்லி காற்று உங்களுக்கு ஒத்துப் போகிறதா என்று தான் நகைச்சுவையாக கேட்டதையும், தற்போது அவர் மீண்டும் தமிழகப் பணிகளுக்கே வந்துவிட்டது குறித்து மகிழ்வதாகவும் தெரிவித்தார்.
சூப்பர் ஸ்டார் கூறிய விஷயத்தில் முக்கியமான ஒன்று, மக்கள் பிரதிநிதிகள் அவரவர் தொகுதியில் முதலில் சிறப்பான கவனம் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் தொகுதி மக்கள் அவர்களை விரும்புவார்கள் என்பது.
திருநாவுக்கரசர் அறந்தாங்கி மக்களுக்கு சிறப்பான சேவை செய்வதால் மக்கள் அவரை விரும்புகிறார்கள் என்று புகழ்ந்த சூப்பர்ஸ்டார் கலைஞரும் இதைத்தான் கூறுவார் என்று சொன்னதன் மூலம் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் இதைப்போல நடக்க வேண்டும் என்ற தன் ஆசையை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர் முன்பு இருந்த பாரதியஜனதா கட்சியின் தலைவர்கள் வெங்கையா நாயுடு, இல கணேசன், முன்னாள் அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய அமைச்சர் சிதம்பரம், வாசன், இளங்கோவன் என எதிரெதிர் அணித் தலைவர்கள் கட்சி பாகுபாடின்றி கலந்து கொண்டார்கள்..இது திருநாவுக்கரசர் மீது அவர்கள் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு வைத்திருக்கும் அன்பைக் காட்டியது.
ஏற்கனவே சூப்பர் ஸ்டாரின் இல்லத் திருமணத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்ட இதுபோன்ற பெருந்தன்மையான நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, இனி வருங்காலங்களிலும் தலைவர்கள் வீட்டு சுப நிகழ்வுகளில் அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ளும் கலாசாரம் தமிழகத்திலும் தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
விபத்தில் பலியான மதுரை ரசிகரின் குடும்பத்துக்கு தலைவர் உதவித் தொகை வழங்கி நேரில் ஆறுதல்!
சூப்பர் ஸ்டார் ரஜினி சென்ற மாதம் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதியின் திருமணத்திற்கு சென்றபோது, அவரது காரை பைக்கில் பின்தொடர்ந்து சென்ற கார்த்திக் என்ற நம் ரசிகர் ஒருவர் விபத்து ஏற்பட்டு அதில் மரணமடைந்தார்.
விபத்து குறித்து பின்னர் கேள்விப்பட்டவுடன், தலைவர் ரஜினி மிகவும் வேதனையடைந்து இரங்கல் செய்தி விடுத்தார். மேற்படி ரசிகரின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் அளிக்கவிருப்பதாகவும் கூறினார்.
நண்பர் கே.நட்ராஜ் மகள் திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி!
ஆஷ்ரம் பள்ளி ஆண்டுவிழா - கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினி & தர்மேந்திரா! Excl. News & Pics!!
திருமதி. லதா ரஜினிகாந்தின் ஆஷ்ரம் பள்ளியின் ஆண்டுவிழா கடந்த 6 ஆம் தேதி மாலை, காமராஜர் நினைவரங்கத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இவ்விழா நடைபெறுவது வாடிக்கை. நமது தளமும் தவறாது கவர் செய்து வந்திருக்கிறது.
இதோ இந்த ஆண்டு நமது எக்ஸ்க்ளூசிவ் கவரேஜ் - ஆன்லைன் மீடியாவில் முதல் முறையாக - பிரத்யேக புகைப்படங்களுடன்!
“நல்ல குணம் இருந்தால் மெயின் ரோட்டில் போகலாம்; இல்லையென்றால் பைபாஸ் தான்” – சூப்பர் ஸ்டார் ருசிகரப் பேச்சு!
“நல்ல குணம் இருந்தால் மெயின் ரோட்டில் போகலாம்; இல்லையென்றால் பைபாஸ் தான்” - இளைஞன் பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி ருசிகரப் பேச்சு!
தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி கதை வசனத்தில், கவிஞர் பா.விஜய் நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கும் ‘இளைஞன்’ படத்தின் பாடல் காசட் வெளியீட்டு விழா ‘சத்யம்’ திரையரங்கில் நேற்று நடைபெற்றது.
‘முதல்வர் கலைஞர் வெளியிட, சூப்பர் ஸ்டார் ரஜினி பெற்றுக்கொள்கிறார்’ என்று சென்னை நகர் முழுக்க போஸ்டர் முழுதும் ஏற்கனவே தலைவர் ரஜினி கலந்துகொள்ளும் விபரம் தெரிந்திருந்தபடியால், கொட்டும் மழையிலும் நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் முழுக்க முழுக்க நிரம்பியிருந்தது. மாலையில் நடக்கும் நிகழ்ச்சி என்பதால் ஷோ கேன்சல் செய்யப்பட்டிருந்தது.
|