அனைத்து சாதனைகளையும் முறியடித்து எந்திரன் இந்தியாவில் மட்டுமே 225 கோடி வசூல் - தினகரன் தகவல்!!
வாவ்…. அட…அட…அட… இப்படி ஒரு செய்திக்காகத்தானே இத்துனை நாள் காத்திருந்தோம்…!
எந்திரன் வசூல் குறித்து பல்வேறு ஆங்கில நாளிதழ்கள், பிரதான வட இந்திய ஊடகங்கள் செய்திகள் அளித்து வந்த நிலையில், சன் குழுமம் தற்போது அதிகாரப்பூர்வமாக எந்திரன் வசூலை அறிவித்துள்ளது.
இரண்டாம் வார இறுதியை எந்திரன் நெருங்கும் நிலையில், படம் படு அமர்க்களமாக மூன்று மொழிகளில் டாப் கியரில் பிக்கப் ஆகியுள்ளது. குடும்பம் குடும்பமாக தங்கள் குழந்தைகளுடன் அனைவரும் எந்திரன் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இத்துனை தியேட்டர்களில் திரையிடுகிரார்களே, படம் இரண்டாம் வாரம் தாக்குபிடித்தாலே பெரும் விஷயம் என்று அச்சப்பட்ட திரையரங்கு உரிமையாளர்கள் பலர் தற்போது மகிழ்ச்சிக்கடலில் திக்குமுக்காடி வருகின்றனர். அந்தளவு பல தியேட்டர்களில் படம் ஹவுஸ்புல்லாக பட்டையை கிளப்பிவருகிறது. இரண்டாம் வாரம் தாண்டும் தருவாயிலும் பல தியேட்டர்களில் இன்னும் ஸ்பெஷல் ஷோ நடைபெற்று வருகிறது.
இன்று வெளியிடப்பட்ட பத்திரிகை குறிப்பின் படி, இந்தியாவில் மட்டும் எந்திரன் இதுவரை 225 கோடிகள் குவித்துள்ளது.
இதோ தினகரன் செய்தி:
இரண்டு வாரத்தில் இந்தியா முழுவதும் ரூ.225 கோடி வசூல்
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள எந்திரன் திரைப்படம் இரண்டு வாரத்தில் இந்தியா முழுவதும் ரூ.225 கோடி வசூல் செய்து, சாதனை படைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உலகம் முழுவதும் எந்திரன் திரைப்படம் வெளியானது. இது குறித்து இன்று வெளியான செய்திக்குறிப்பில் இரண்டு வாரத்திற்கான வசூல் பட்டியல் காண்பிக்கப்பட்டது.
த்ரீ இடியட்ஸ், தபாங் உள்ளிட்ட அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து இந்தியாவின் மிகப் பெரிய வசூல் படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன். இந்திய திரையுலக சரித்திரத்தில் இதுவரை வேறு எந்தப் படமும் இந்த அளவு வசூலை அதுவும் இரண்டே வாரங்களில் எடுத்ததில்லை.
http://cinema.dinakaran.com/cinema/KollywoodDetail.aspx?id=3544&id1=3
AVATAR க்கு பிறகு குழந்தைகள் அதிகம் வருவது எந்திரனுக்கு தான்
எந்திரனின் இந்த இமாலய வெற்றிக்கு பல காரணங்கள் இருப்பினும், குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எந்திரன் பெரிதும் கவர்ந்தது தான் முக்கிய காரணம். குழந்தைகள் பெரும்பாலும் தனியே திரைப்படத்திற்கு செல்ல முடியாது. அவர்களுடன் பெற்றோர்களும் செல்லவேண்டும். So, ஒரு குழந்தை படத்திற்கு செல்கிறது என்றால் குறைந்தது மூன்று பேராவது அதனுடன் செல்ல வேண்டும்.
பள்ளி செல்லும் வாண்டுகள் பலரிடம் நாம் விசாரித்ததில் அவர்கள் பள்ளிகளில் ஹாட் டாபிக் இன்று எந்திரன் தான்.
எட்டு வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மத்தியில் முதல் பாதியில் வரும் சிட்டி தான் அவர்களுக்கு பிடித்த ஹீரோ. எட்டு வயதுக்கு மேல் உள்ள சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வில்லனாக கலக்கும் சிட்டி தான் பேவரைட்.
THE NAME IS RAJINIKANTH புத்தகத்தை எழுதிய டாக்டர்.காயத்ரி ஸ்ரீகாந்த் கூறுகையில், “குழந்தைகளை எந்திரன் திரைப்படம் மிகப் பெரிய அளவில் கவர்ந்துள்ளது. அதற்க்கு என் குழந்தைகள் ஒரு உதாரணம். என் குழந்தைகள் ரோஷன் (10), மற்றும் சம்யுக்தா (10) இருவரும் இதுவரை ஆறு முறைக்கு மேல் பார்த்துவிட்டார்கள். ஒவ்வொரு வாரமும் இவர்களை எந்திரனுக்கு அழைத்து செல்லவேண்டியிருக்கிறது.
நல்லா படிக்கணும். நல்லா படிச்சா தான் எந்திரன் கூட்டிட்டு போவேன், என்று நான் சொல்ல, அதை கெட்டியாக பிடித்துக் கொண்டனர் என் குழந்தைகள். நான் சொல்லாமேலே, இப்போதெல்லாம் ஒழுங்காக படிக்கின்றனர். கரெக்டாக ஹோம் வொர்க் செய்கின்றனர். நான் வருஷக்கணக்கா சொல்லியும் கேக்காதவர்கள் எந்திரன் மேல் உள்ள பிரியத்தால் தற்போது ஒழுங்காக படிக்கின்றனர். கொடுத்த வாக்கை காப்பாற்ற நானும் ஒவ்வொரு வாரமும் அவர்களை படத்திற்கு அழைத்து செல்கிறேன். வேற வழி?
“எந்தெந்த தியேட்டர்ல படம் பார்த்தீங்க?” என்று நாம் கேட்க, “எதுல பாக்கலேன்னு கேளுங்க… அந்தளவு எல்லா தியேட்டர்ச்ளையும் படத்தை பார்த்தாச்சு.”
எந்திரன் CRAZE குழந்தைகளிடம் எந்தளவு உள்ளது?
“வரிக்கு வரி படத்தை சொல்றாங்கன்னா பார்த்துக்கோங்களேன்”
நாம் பேசும்போது இன்னொரு தகவலை சொன்னார் டாக்டர் காயத்ரி. இப்போதே அவர் மகன் ரோஷன், “நான் ரோபோடிக்ஸ் தான் படிப்பேன். நோ டாக்டர் நோ என்ஜினீயர்” என்று சொல்லிவிட்டானாம். இருவரும் அடம்பிடித்து, அவர்கள் படிக்கும் ஹரி ஸ்ரீ வித்யாலயாவில், தற்போது ரோபோடிக்ஸ் ஸ்பெஷல் வகுப்பில் சேர்ந்திருக்கிறார்களாம். TOY ரோபோ மாடலிங், அசெம்ப்ளிங் அப்புறம் DISMANTLING அனைத்தும் உண்டாம் அந்த வகுப்பில். எப்படி, கேட்கவே சுவாரஸ்யமா இருக்குல்ல…?
மற்றொரு தகவலையும் கூறினார் டாக்டர் காயத்ரி, “என் தங்கை மகன், பெயர் சஞ்சய் (வயது 5). அவனோட பர்த்டே கிப்டா சிட்டி மாதிரி ஒரு ரோபோ பொம்மை தான் வேணும்னு அடம்பிடிக்கிறானாம்.” என்றார் சிரித்துக்கொண்டே.
“படம் முழுக்கவே குழந்தைகள் விரும்பி பார்க்கிறார்கள் என்றாலும், அந்த ட்ரெயினில் நடக்கும் சண்டை காட்சி மற்றும் கிளைமேக்சில் சிட்டி தன்னை ஒவ்வொரு பாகமாக DISMANTLE செய்யும் காட்சி, பூம் பூம் ரோபோடா பாடல் இதெல்லாம் குழந்தைகளை மிகவும் கவர்ந்துள்ளன.” என்கிறார் டாக்டர் காயத்ரி.
“சரி.. குழந்தைகளை எந்திரன் கவர்ந்துள்ளது ஓகே. சூப்பர் ஸ்டார் பற்றி பயோகிராபியே எழுதியிருக்கிறீர்களே, உங்களுக்கு எந்தளவு பிடித்திருக்கிறது?” நாம் கேட்க…
என்னங்க இப்படி கேட்டுடீங்க. It’s a fabulous movie worth watching multiple times. தலைவர் கலக்கியிருக்கிறார்ல. என்கிறார் டாக்டர் காயத்ரி.
நம் தள வாசகர் திருமதி சுஜாதாவிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது, “நாங்க சில வருடங்களுக்கு முன்பு தான் யூ.எஸ். லே இருந்து வந்தோம். என் டாட்டர் பேரு ஸ்ரீ நிதி.(10). அவளுக்கு தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் தெரிந்ததே ரஜினி, ஷாருக், ஐஸ்வர்யா ராய், கஜோல் இவங்க தான். வேற யாரையும் தெரியாது. இந்தியா வந்ததுலேயிருந்து சந்திரமுகி, சிவாஜி, 2012, அவதார், உள்ளிட்ட சில படங்களுக்கு தான் என் டாட்டரை தியேட்டருக்கு அழைச்சிக்கிட்டு போயிருக்கேன். இப்போ ரோபோ. இதுவரை 2 முறை பார்த்துட்டா. பொதுவா, அவ எந்த மூவிக்கு போகணும்னு சொன்னாலும் ஒரு முறை தான் கூட்டிட்டு போவேன். இந்த முறை, எந்திரனை மட்டும் இன்னொரு டயம் பார்க்கனும்னு சொன்னா. இதோ இப்போ, மூணாவது முறை போகபோறோம்.
முதல் முறை காசி தியேட்டர்ல, அடுத்தது சத்யம்ல, மூணாவது ஏன்கமா இனாக்ஸ் இல்லை பீ.வி.ஆர். ல இருக்கும்.
படத்துல ஸ்ரீ நிதிக்கு ரொம்ப பிடிச்ச சீன் கொசு வர்ற சீன் தான். (இப்போ புரியுதா ஷங்கர் ஏன் அந்த சீனை வெச்சாருன்னு?). தவிர, சிட்டி ஷோ கேஸ் டான்ஸ், காதல அணுக்கள் அப்புறம் பூம் பூம் ரோபோடா இதெல்லாம் அவளோட பேவரைட்.
கடைசீயில், சிட்டி தன்னை DISMANTLE செய்துகொள்ளும் அந்த காட்சி நம்மையே ஏதோ செய்கிறதென்றால், குழந்தைகளை அது எந்தளவு பாதித்திருக்கும்?
“க்ளைமேக்ஸ்ல சிட்டி தன்னை DISMANTLE பண்ணிக்கிற சீன அவளை ரொம்பவே பாதிச்சிடுச்சு. ஏன்மா DISMANTLE பண்ணனும்? யாருக்கும் தெரியாம சிட்டியை அவங்க வீட்டுலயே ஒரு TOY FRIEND ஆ வெச்சிக்கிலாமில்லே… அந்த வீட்டுல தான் குழந்தைங்க இருக்காங்கல்ல… அவங்க கூட அது பாட்டுக்கு விளையாடிகிட்டு இருக்குமே… வெளியில ஏன் சொல்லணும்? பாவம்மா சிட்டி…” என்பாளாம். இது தான் அவளோட லாஜிக். (ஷங்கர் சார் கவனத்துக்கு!)
“ஷங்கர் இதை சூப்பர் ஸ்டாரை வைத்தே இரண்டாம் பாகம் எடுக்கலாம். நிச்சயம் வெற்றி பெரும். அதற்க்கு ஏற்ற படம் இது!” என்று கூறுகிறார் திருமதி.சுஜாதா.
திரையரங்குகளை பொறுத்தவரை இப்படி குழந்தைகள் படையெடுப்பது, அவர்களுக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். ஒன்று திருட்டு டி.வி.டி.மோகத்தை மிஞ்சியது. மற்றொன்று டிக்கட் வருவாயை தவிர இரண்டாம் கட்ட வருவாய்களான, கேண்டீனில் பாப்கார்ன், ஐஸ் க்ரீம், உள்ளிட்ட உணவு பொருட்கள் பன்மடங்கு விற்பனையாகின்றன.
சரி…. குழந்தைகளின் இந்த எந்திரன் மோகத்தை பற்றி தியேட்டர்கள் என்ன கூறுகின்றன?
தேவி திரையரங்க மேலாளர் திரு. வி.ஆர். ஷங்கர் கூறுகையில், “பொதுவாகவே ரஜினி படம் என்றால் குழந்தைகள் அதிகளவு வருவார்கள். ஆனால் எந்திரனுக்கு CHILDREN ஆடியன்ஸ் மிக அதிகம். எங்கள் வளாகத்திற்கு எந்திரனை பார்க்க அதிகளவில் குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகள் தங்கள் பெற்றோர்களுடன் வருகிறார்கள். இதன் வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம். இதற்க்கு முன்பு, எங்கள் காம்ப்ளெக்சில் அவதார் படத்திற்கு தான் குழந்தைகள் அதிகளவில் வந்தார்கள்.” என்று கூறுகிறார்.
“கோவில் திருவிழாவில் ரோபோ செய்யும் காமெடி, அப்புறம் ட்ரெயின் ஃபைட் sequence, கொசுவுடன் பேசும் காட்சி, பூம் பூம் ரோபோடா பாடல், இறுதியில் சிட்டி தன் பாகங்களை கழற்றி வைக்கும் காட்சி இதெல்லாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துள்ளன. குழந்தைகளின் அடம் காரணமாக இரண்டாம் முறை மூன்றாம் முறை அவர்களை அழைத்து வரும் பெற்றோர்களை நான் பார்த்திருக்கிறேன். It’s purely RAJINI MAGIC!” என்றார் திரு.வி.ஆர்.ஷங்கர்.
இந்த பதிவு வெளியாக ஒத்துழைத்த அனைவருக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி. குறிப்பாக தனது பிசியான அலுவல்களுக்கிடையேயும் நம்மிடம் பேசிய தேவி திரையரங்க மேலாளர் திரு.ஷங்கர் மற்றும் டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் ஆகியோருக்கும் நம் ரசிகர்கள் சார்பாக நன்றி. நன்றி.
இலங்கையிலும் வெற்றி நடை போடும் எந்திரன் - ஒரு நேரடி ரிப்போர்ட்!
உலக அளவில் பல நாடுகளில் திரையிடப்பட்டுள்ள எந்திரன் - மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக அதன் அயல்நாட்டு உரிமையை பெற்றுள்ள ஐங்கரன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
இந்நிலையில், இலங்கையில் எந்திரனின் பெற்றுள்ள வெற்றியை மறைத்து, கட்டுக் கதைகள் புனைந்து சில விஷமிகள் மூலம் அவதூறு பரப்பட்டது. ஆனால் சன் பிக்சர்ஸ் இதை மறுத்துள்ளது.
இலங்கையில் தமிழர்கள் அனைவரும் எந்திரன் திரைப்படத்தை விரும்பி பார்க்கிறார்கள். தமிழில் சயன்ஸ் பிக்ஷன் படம் என்பது அவர்களுக்கு ஒரு புதிய அனுபவம். அதுவும் சூப்பர் ஸ்டார் போன்ற மாஸ் ஹீரோ அதில் நடிப்பது ஒரு வித்தியாசமான விருந்து.
இருப்பினும் உண்மை நிலையை நமது ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, நமது வேண்டுகோளுக்கிணங்க, இலங்கையில் எந்திரனின் வெற்றி குறித்து தகவல்களை திரட்டி நமக்கு அனுப்பியுள்ளார் நமது வாசகரும் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகருமான தமிழர் சிதம்பரநாதன். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.
அவர் எனக்கு அனுப்பியுள்ள தகவலை அப்படியே தருகிறேன்.
- சுந்தர்
OnlySuperstar.com
———————————————————————-
ஹாய் சுந்தர் அண்ணா,
ஒருவாறாக இலங்கையில் எந்திரன் தொடர்பான விபரங்களைத் திரட்டிவிட்டேன்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணி அளவில் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்க பொது முகாமையாளர் திரு. S .தனபாலசிங்கம் அவர்களைச் சந்தித்து ONLYSUPERSTAR.COM பதிவிற்காக எந்திரன் திரைப்படம் பற்றி விசாரிக்க வந்திருப்பதாக கூறினேன்.
மிகுந்த மரியாதையுடன் தனது அலுவலகத்திற்கு கூட்டிச்சென்று நான் கேட்ட அனைத்துக்கேள்விகளுக்கும் பொறுமையுடன் பதில் கூறினார்.அவருக்கு எமது தளம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்ள வேண்டும்.
மேலும் அவரது புகைப்படம் கேட்டபோது அடுத்த நாள் கண்டிப்பாக தருவதாகவும்,வந்து வாங்கிச்செல்லுமாறும் கூறி எமக்கு ஒத்துழைப்பு வழங்கினார்.
அவரிடம் நான் கேட்ட கேள்விகளும் அதற்கான அவரின் பதில்களும் Scan வடிவில் அவரது கையெழுத்துடன் அனுப்பியுள்ளேன்.
மேலும் தினக்குரல் பத்திரிகையில் எந்திரன் திரைப்படம் இலங்கையில் வெளியிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் தொடர்ந்தும் ஓடிக்கொண்டிருப்பதை நிருபிக்கும் முகமான 17.10.2010 ,18.10.2010 நாழிதள்களின் விளம்பரத்தையும் இணைத்துள்ளேன். மேலும் எனக்கு கிடைத்த ராஜா திரையரங்கில் எந்திரன் திரைப்படத்திற்கான கூட்டத்தினரது புகைப்படங்கள் சிலவற்றையும் அனுப்பியுள்ளேன்.
எனினும் இணையப்பதிவு தொடர்பாக எனக்கு முன் அனுபவம் இல்லை. எனவே என்மனதில் பட்ட கேள்விகளை கேட்டேன். அதற்கு அவரும் குறைவின்றி பதிலளித்துள்ளார். எனவே அவற்றை பிரசுரிக்குமுன் ஒன்றுக்கு மூன்று தடவை சரி பார்க்கவும்.
திரையரங்கில் பணிபுரியும் ஊழியர் திரு.பகீரன் என்பவரை தொடர்பு கொண்டு கேட்ட போது “இது போன்ற ரஜினி படம் இது வரை வந்ததில்லை மிகவும் அருமையான படம்.எமக்கு இலாபத்திலும் எந்தக்குறையும் இல்லை” என மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்.
என்றென்றும்
அன்புடன்
சிதம்பரநாதன்
இலங்கை திருநாட்டிலிருந்து.
“இது தாண்டா வசூல்!” - திருச்சி ரசிகர்கள் சவால் போஸ்டர்!
திருச்சி ரசிகர்கள் போஸ்டர்களுக்கு பெயர் பெற்றவர்கள். வித்தியாசமான வாசகங்களை எதைப் பற்றியும் கவலைப்படாது துணிச்சலுடன் போட்டு போஸ்டர்கள் எழுப்புவார்கள்.
எந்திரனின் இந்த இமாலய வெற்றிக்கு பிறகு சும்மாயிருப்பார்களா?
இதோ ஒரு சவால் போஸ்டர்….
கடந்த இரண்டு நாட்களாக HEADLINES TODAY தொலைக்காட்சியில் எந்திரன் வெற்றி மற்றும் வசூல் குறித்து ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது.
THALAIVAR RULES என்ற அந்த நிகழ்ச்சி, எந்திரனின் இமாலய வெற்றியை இந்த உலகிற்கு பறைசாற்றியுள்ளது. தவிர, ஒட்டு மொத்த இந்திய சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக ரஜினி உயர்ந்துவிட்டார் என்றும் கூறியிருக்கிறது.
நிகழ்ச்சியின் வீடியோ லின்க்குகள் இதோ.. (மொத்தம் ஆறு பகுதிகள்). Don’t miss!
எந்திரனை பார்க்க சிங்கப்பூருக்கு பறந்து வந்த (5240 கி.மீ.) ஜப்பான் ரஜினி ரசிகர்கள்!
உலகெங்கிலும் எந்திரன் ஒரே நேரத்தில் இந்த மாத துவக்கத்தில் ரிலீசானது. ஆனால், சூப்பர் ஸ்டாருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கும் ஜப்பானில் மட்டும் இன்னும் ரிலீசாகவில்லை. இருப்பினும், எந்திரனை பார்க்க ஆவல் கொண்ட ஜப்பான் ரசிகர்கள் பலர் அண்டை நாடுகளுக்கு பறந்து சென்று படத்தை கண்டு ரசித்தனர்.
இது போல, எந்திரனை பார்ப்பதற்காக ஜப்பானிலிருந்து விமானத்தில் சுமார் ஏழுமணி நேரம் பயணம் செய்து (5240 கி.மீ தூரம் - சுமார் ஏழு மணி நேரம் விமானப் பயணம்) சிங்கபூருக்கு வந்த ஒரு ஜப்பானிய ஜோடி பற்றி சிங்கப்பூரில் வெளியாகும் ‘தமிழ் முரசு’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. அதுவும் முதல் பக்கத்தில் பிரதானமாக.
சிங்கப்பூரில் இருந்து நமது நண்பர் கிருஷ்ணன் அண்ணாசாமி இதை நமக்கு அனுப்பியுள்ளார். அவருக்கு நம் மனமார்ந்த நன்றி.
எந்திரனை பற்றியும், சூப்பர் ஸ்டாரை பற்றியும் கூறியுள்ள இந்த ஜப்பான் ரசிகர்கள், சூப்பர் ஸ்டாருக்கு ஜப்பானில் ரசிகர்கள் ஏராளம் என்றும், முத்து படத்தில் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலான நடனத்தை பார்த்து ரசிகராக மாறியதாக கூறியிருக்கிறார். (உறைக்க வேண்டியவங்களுக்கு உறைச்சா சரி…!)
ரஜினி மீது ஏற்பட்டுள்ள ஈர்ப்பால் இந்த ஜப்பான் தோழர்கள், தமிழை திறம்பட கற்று, எழுத படிக்கவும் கற்றுக்கொண்டுவிட்டனர்.
உலகெங்கிலும் தமிழும் தமிழனின் பெருமையும் பரவுவதில் சூப்பர் ஸ்டாரும் ஒரு காரணம் என்பது பெருமைக்குரிய விஷயம். காலரை தூக்கிவிட்டுக்கொள்ளுங்கள். மற்றுமொரு முறை!
"அமெரிக்கா முதல் ஆண்டிப்பட்டி வரை எந்திரன் சூப்பர் ஹிட்” – கூறுகிறார் ஆல்பட் மாரியப்பன்!!
எந்திரன் வெற்றி குறித்து, நாம் பேசுவது கூறுவது இருக்கட்டும்… எந்திரனை வெளியிட்டிருக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறுவது விசேஷம் தானே?
ரிலீசாகி 20 நாட்கள் முடிந்துவிட்ட சூழ்நிலையிலும் எந்திரன் வசூலில் இன்னும் தூள் கிளப்பிக்கொண்டிருக்கிறது. வார இறுதி நாட்களில் ஹவுஸ்புல்லாகவும், வார நாட்களில் சராசரி 70-75% சதவீதம் வரை ஆடியன்ஸோடு எந்திரன் கம்பீர நடை போட்டுகொண்டிருக்கிறது (இந்த வார நிலவரம்). சென்னையில் மட்டும் இன்னும் 45 திரையரங்குகளில் எந்திரன் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை மறக்கக்கூடாது.
நீண்ட நாள் கழித்து எந்திரன் மூலம் கிடைத்துள்ள இந்த ஜாக்பாட்டால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்சிக் கடலில் ஆழ்ந்துள்ளனர். சரிந்து கிடந்த திரையுலக மற்றொரு முறை சூப்பர் ஸ்டார் நிமிர்த்தியிருக்கிறார் என்றால் மிகையாகாது. ‘எந்திரனை பார்க்க குடும்பம் குடும்பமாக மக்கள் வருகிறார்கள்’ என நாம் சந்தித்த பல திரையரங்கு மேலாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
சில நாட்களில் டிக்கட்டுக்கு பிரஷர் தாங்காது, “இன்றைய காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்புல்” என்று பிரிண்ட்-அவுட் எடுத்து ஆல்பட்டில் பெரும்பாலும் ஒட்டிவிடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். (இதெல்லாம் வேற ஏதாவது படத்துக்கு நீங்க பார்த்திருக்கீங்களா?)
“எந்திரன் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்துடன் எங்கள் திரையரங்கிற்கு வந்துசெல்கின்றனர். குறிப்பாக தங்கள் குழந்தைகளுடன்.” என்று நம்மிடம் கூறினர் ஆல்பட் தியேட்டர் மேலாளர் திரு.மாரியப்பன்.
“இந்த வெற்றிக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?”
“சூப்பர் ஸ்டார் தான். அவர் இல்லையெனில் இந்த இமாலய வெற்றி சாத்தியமாகியிருக்காது.”
மிகவும் பரப்பான சூழலில் பிசியாக அவர் இருந்ததால், அவரது நேரத்தை அதிகம் நாம் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. மற்றொரு முறை சாவகாசமாக சந்திக்கலாம் என்று முடிவு செய்து, கடைசியாக, “எந்திரன் வெற்றி பற்றி எங்கள் தள வாசகர்களுக்கு ஒரு பன்ச் ப்ளீஸ்?” நாம் கேட்க…
“திரையிட்ட இடங்களிலெல்லாம் எந்திரன் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ‘அமெரிக்கா முதல் ஆண்டிப்பட்டி வரை சூப்பர் ஹிட்டாகியுள்ள எந்திரன்’ என்று போட்டுக்கொள்ளுங்கள். அந்த அளவு ஏ.பி.சி. என மூன்று சென்டர்களிலும் எந்திரன் சூப்பர் ஹிட்” என்று மகிழ்ச்சி பொங்க கூறினார் திரு.மாரியப்பன்.
“நன்றி சார். இன்னொரு முறை உங்களை விரிவாக சந்திக்கிறேன்” என்று கூறி விடைபெற்றோம்.
“நிச்சயமாக…!” என்று புன்னகைத்தார் திரு.மாரியப்பன்.
|