இது போன்றொரு தீபாவளி நமக்கு இனிமேல் வருமா என்று ரசிகர்கள் எங்கும் அளவிற்கு தித்திக்கும் தீபாவளியாக அமைந்தது இந்த தீப ஒளி திருநாள்.
ஒரு பக்கம் சிவாஜி தி பாஸ், மறுபக்கம் மேக்கிங் ஆப் எந்திரன் என விருந்தோ விருந்து. ஒரு விருந்து முடிவதற்குள் அடுத்த விருந்து என சூப்பர் ஸ்டாரின் பேட்டி.
பேட்டி குறித்து, இப்படித் தான் இருக்கும் என்ற நமது யூகம் சரியாக அமைந்தது.
இன்னும் சிறப்பாக கேள்விகள் கேட்டிருக்கலாம் என்று நமது நண்பர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
1995 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் பேட்டி ஒரு பரபரப்பான சூழ்நிலையில் அமைந்தது. ஆகையால் அனைவரும் எதிர் பார்த்த சூடு, சுவை, காரம் அதில் இயல்பாக அமைந்திருந்தது. ஆனால், இந்த பேட்டியை பொறுத்தவரை இது தரப்பட்டுள்ள சூழ்நிலையே வேறு என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒரு மாபெரும் வெற்றிக்கு பிறகு அவர் அளிக்கும் ஒரு பேட்டி. எந்த ஒரு தருணத்திலும் ஆணவம் என்பது துளியும் எட்டி பார்த்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, மிகவும் இயல்பாகப கேள்விகளை எதிர்கொண்டு அவற்றிக்கு யதார்த்தமான பதில்களை கூறி அசத்தியிருக்கிறார்.
மேலும், ஒரு குறிப்பிட்ட தொலைகாட்சிக்கு மட்டும் தரப்பட்டுள்ள பேட்டி இது என்பதால், எந்திரன் பற்றியே பெரும்பான்மையான கேள்விகள் அமையுமாறு அவர் பார்த்துகொண்டார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. கேள்வியாளர், சற்று வித்தியாசமான கேள்விகளை கேட்க முனைந்த போது, “வேற எங்கேயே போற மாதிரி இருக்கே…?” என்று அவரை தலைவர் அழகாக அலெர்ட் செய்ததை யாரும் கவனித்தீர்களா?
மூன்று வேடங்களை நீங்கள சிறப்பாக செய்திருக்கிறீர்களே… அதை எப்படி உணர்ந்தீர்கள் என்று கேட்டபோது, “இதென்ன பிரமாதம். கமல் சார் தசாவதாரத்தில் 10 வேடங்கள் செய்திருக்கிறாரே என்று கூறிய அந்த பெருந்தன்மை… மற்றும் அந்தாகானூன் பற்றிய கேள்விக்கு ஹிந்தியில் கமலின் ‘மரோசரித்ரா’ ‘ஏக் து ஜே கேலியே’ என்னும் பெயரில் வெளியாகி நன்றாக போய்கொண்டிருந்தது என்று சொன்ன அந்த துணிவு… வேறு யாருக்கும் எந்த சூழ்நிலையிலும் வரவே வராது.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு என்பதை இப்படி பகிரங்கமாக ஒப்புக்கொண்ட தலைவர் தலைவர் தான்.
சில கேள்விகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், மிக பிரமாதமான் பேட்டி இது. இப்படி இயல்பாக, கேசுவலாக சூப்பர் ஸ்டாரை பார்ப்பது ஒரு உன்னதமான அனுபவம்.
சிவாஜி மற்றும் ‘மேக்கிங் ஆப் எந்திரன்’ இரண்டிலும் ‘மேக்கிங் ஆப் எந்திரன்’ தான் நேற்றைக்கு நமது சாய்ஸ். சிவாஜியை அது வெளியான சமயம் தியேட்டர்களிலேயே 12 முறைக்கு மேல் பார்த்திருந்தபடியால், மேகிங் ஆப் எந்திரன் தான் நேற்றைக்கு நாம் முழுதும் பார்த்தது. (அப்பப்போ நம்ம ‘ரிமோட்’ அண்ணன் ஹெல்ப் பண்ணினாரு!)
மற்றபடி தொலைக்காட்சி வரலாற்றில் நேற்றைக்கு சன் டி.வி.க்கும் கலைஞர் டி.வி.க்கும் கிடைத்த T R P ரேட்டிங் இதுவரை யாருக்கும் கிடைக்காதது. மற்ற தொலைகாட்சிகளை யாருமே பார்க்கவில்லை என்பது தான் நிஜம். இரண்டு நிகழ்சிகளிலும் மேக்கிங் ஆப் எந்திரனுக்கு சற்று கூடுதல் பாயிண்ட்டுகள் கிடைத்திருப்பதாக விளம்பர நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. சிவாஜிக்கு பெண்களிடம் சற்று கூடுதல் ஆதரவு கிடைத்ததாக தெரிகிறது.
அதற்கடுத்து ஒளிபரப்பான சூப்பர் ஸ்டாரின் பேட்டி உச்சத்திற்க்கெல்லாம் உச்சம் என்னுமளவிற்கு சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக அமைந்தது.
சிவாஜியும் மற்றும் எந்திரன் மூலம் அனைவரையும் தலைவர் டி.வி.முன்னர் கட்டி போட்டு விட்ட படியால், வழக்கத்திற்கு மாறாக பட்டாசு சத்தங்களை நேற்றைக்கு மாலை பெரும்பாலான இடங்களில் கேட்கமுடியவில்லை. இடையே செய்திகள் ஒளிபரப்பான போது, தான் பட்டாசு சத்தத்தை கேட்க முடிந்தது. சூப்பர் ஸ்டார் தவிர வேறு யாராவது இதை சாதிக்க முடியுமா என்ன?
சூப்பர் ஸ்டாரின் பேட்டி துவங்கிய அந்த தருணத்தில், நமது தெருவில், வாண்டுகளுடன் சேர்ந்து 10,000 வாலா ஒன்றை வெடித்து தலைவருக்கு நாம் வரவேற்பு கொடுத்தோம். (ஐடியா உபயம்: நம் தள வாசகர் நண்பர் விஜய் குமார் !)
மற்றபடி மேக்கிங் ஆப் எந்திரன் நிகழ்ச்சியை பார்த்தவுடன், மறுபடியும் எந்திரனை பார்க்கும் ஆவல் நமக்கு அதிகரித்துவிட்டது. தலைவர் எவ்வளோ கடின உழைப்பு உழைத்திருக்கிறார். ஆனால், இதைப் பற்றி அவர் மூச்சு கூட விடவில்லையே… குறுக்கு வழியில் முதலிடத்தை பெற துடிக்கும் அனைத்து ஹீரோக்களும் நிச்சயம் இந்த நிகழ்ச்சியை பார்த்து ஒரு BLOCKBUSTER HIT கொடுப்பதற்கு சூப்பர் ஸ்டார் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அவர் உழைப்பில், அடக்கத்தில் 10 % மாவது அவர்கள் பின்பற்றவேண்டும். அவரை காப்பியடித்து அவரை சிறுமைப்படுத்தி தங்களையும் சிறுமைப்படுத்திக்கொள்ளும் வழக்கத்தை அவர்கள் கைவிடவேண்டும்.
ரோபோவின் மோல்ட் செய்வதற்காக பச்சை நிற குழம்பை அவர் மீது கொட்டி அவரை முழுவதுமாக மூடி, தலைவா… உன் அர்ப்பணிப்பு யாருக்கு வரும்? நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை.
பல தருணங்களில் மேக்கப் போட அவர் எடுத்துக்கொண்ட சிரத்தை… அவரின் தொழில் பக்தி தான் அவரது இந்த இமாலய வெற்றிக்கு காரணம் என்பதை நன்கு உணர்த்தியது. (நமக்கெல்லாம் ஐந்து நிமிஷத்துக்கு மேலேயே எங்கயும் எதுக்காகவும் பொறுமையா காத்திருக்க முடியலே…!)
தவிர இந்த பேட்டியின், இன்னொரு ஹைலைட், நம் தளத்தில் வெளியான “விதியை வென்ற மதி” கதையை தலைவர் கூறியது தான்.
இதை நாம் மிகப் பெரும் பாக்கியமாக கருதுகிறோம். தலைவர் அனைத்தையும் கவனித்துகொண்டிருக்கிறார் என்பதை தவிர இது சம்பந்தமாக வேறு எதையும் நாம் கூற விரும்பவில்லை. தலைவருக்கு நன்றி!
பேட்டியின் வீ.டி.யோ லிங்க்குகள்:
|