யோகாவும், நல்ல சிந்தனைகளுமே சூப்பர் ஸ்டாரின் இளமைக்கு காரணம் - மேக்கப் கலைஞர் பானு ருசிகரம்!
“ரஜினியாக இருப்பது அத்துணை எளிதல்ல!” - சூப்பர் ஸ்டாரின் விஸ்வரூபம் பற்றி குமுதம் சூப்பர் கட்டுரை!
ரசிகர்கள் உருவாக்கியுள்ள சூப்பர் ஸ்டாரின் உலோகச் சிலை!
“இந்தப் படத்தில் நான் நடிக்கவில்லையே….” மைனாவுக்காக மனமுருகிய சூப்பர் ஸ்டார் ரஜினி!
பிரபு சாலமன் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் ‘மைனா’. தரமான படங்களை என்றைக்குமே பாராட்ட தயங்காத சூப்பர் ஸ்டார் இந்தப் படம் குறித்து கேள்விப்பட்டவுடன், அதை பார்ப்பதற்கு விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ப்ரீவ்யூ காட்சி திரையிடப்பட்டது.
படத்தை வெகுவாக ரசித்த சூப்பர் ஸ்டார், இறுதியில், இயக்குனர் பிரபு சாலமனை கட்டியணைத்து முத்தம் கொடுத்தாராம். “இப்படியொரு அற்புதமான படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டாது போய்விட்டதே…” என்று அவர் கூறி இருக்கிறார்.
தனது மருமகன் தனுஷ் நடித்து “உத்தமபுத்திரன்” படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் அதனுடன் வெளியாகி இருக்கும் “மைனா” படத்தை பாராட்டியிருக்கும் சூப்பர் ஸ்டாரின் பரந்த மனப்பான்மை யாருக்கு வரும்? இத்துணைக்கும் “உத்தமபுத்திரன்’ படத்தை கூட அவர் சில நாட்களுக்கு முன்பு இதே போல ஒரு ஸ்பெஷல் ப்ரீவ்யூவில் கண்டு ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் மருமகன் என்பதால் மட்டுமே தனுஷுக்கு எந்த வித சிறப்பு சலுகையும் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷும் தனது சொந்தக்காலில் சொந்த உழைப்பில் தான் நிற்கிறார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. That’s Good!
|